Asia Cup 2023: ஆசியக் கோப்பை தொடக்க விழாவில் ஜெய் ஷா? அழைப்பு விடுத்த பாகிஸ்தான்.. செவிசாய்க்குமா பிசிசிஐ!
ஆகஸ்ட் 31ம் தேதி பாகிஸ்தானில் தொடங்கும் முதல் போட்டியில் கலந்துகொள்ளும்படி ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் (ஏசிசி) தலைவரான ஜெய் ஷாவுக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அழைப்பு விடுத்துள்ளது.
2023 ஆசிய கோப்பை போட்டியானது வருகின்ற ஆகஸ்ட் 31ம் தேதி பாகிஸ்தானில் பிரமாண்டமாக தொடங்குகிறது. பாதுகாப்பு காரணங்களுக்காக இந்திய அணி பங்கேற்காது என பிசிசிஐ அறிவித்தது. இதையடுத்தும் ஹைபிரிட் மாடலில் ஆசிய கோப்பையை நடத்த பாகிஸ்தான் முடிவு செய்யப்பட்டது.
இதன்படி, 2023 ஆசிய கோப்பையில் முதல் நான்கு போட்டிகள் பாகிஸ்தானிலும், எஞ்சிய போட்டிகள் இலங்கையிலும் நடைபெறுகிறது. ஆகஸ்ட் 31ம் தேதி பாகிஸ்தானில் தொடங்கும் முதல் போட்டியில் கலந்துகொள்ளும்படி இந்திய கிரிக்கெட் வாரியத்தின் (பிசிசிஐ) செயலாளரும், ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் (ஏசிசி) தலைவருமான ஜெய் ஷாவுக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அழைப்பு விடுத்துள்ளது.
ஆசியக் கோப்பையின் தொடக்கமானது முல்தானில் முதல் போட்டி நடைபெற உள்ளது. இந்நிலையில், அறிமுக போட்டிக்கு வருமாறு ஜெய் ஷாவுக்கு பிசிபி அழைப்பு அனுப்பியுள்ளது. ஜெய் ஷாவைத் தவிர, ஆசிய கிரிக்கெட் கவுன்சிலில் பதவி வகிக்கும் முக்கிய தலைவர்களையும் பிசிபி அழைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2023 ஆசிய கோப்பையின் முதல் போட்டி பாகிஸ்தான் மற்றும் நேபாளம் அணிகளுக்கு இடையே முல்தானில் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது. இதைத் தொடர்ந்து செப்டம்பர் 3-ம் தேதி லாகூரில் வங்கதேசம் - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதும் ஆட்டம் நடைபெறுகிறது. செப்டம்பர் 5 மற்றும் செப்டம்பர் 6 ஆகிய தேதிகளில் லாகூரில் போட்டிகள் நடைபெறும். இவை தவிர எஞ்சிய 9 போட்டிகள் இலங்கையில் நடைபெறவுள்ளது. போட்டியின் இறுதிப் போட்டி கொழும்பில் செப்டம்பர் 17ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இந்தியா - பாகிஸ்தான் போட்டி எப்போது..?
2023 ஆசிய கோப்பையில் இந்தியா-பாகிஸ்தான் இடையேயான போட்டி செப்டம்பர் 2ஆம் தேதி நடைபெறவுள்ளது. கடந்த முறை போலவே இம்முறையும் இந்தியா, பாகிஸ்தான் போட்டிகள் இரண்டுமுறை நடைபெறுகிறது. இந்திய அணி தனது டைசி ஆட்டத்தில் நேபாள அணியுடன் செப்டம்பர் 4 ஆம் தேதி அதே மைதானத்தில் விளையாடுகிறது. ஆசிய கோப்பையின் சூப்பர்-4 போட்டிகள் செப்டம்பர் 6 ஆம் தேதி தொடங்கும், இதில் இந்தியாவும் பாகிஸ்தானும் மீண்டும் செப்டம்பர் 10 ஆம் தேதி சந்திக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முழு போட்டி அட்டவணை:
தேதி | குரூப் லீக் போட்டிகள் | இடம் |
ஆகஸ்ட் - 30 | பாகிஸ்தான் vs நேபாளம் | முல்தான் (பாகிஸ்தான்) |
ஆகஸ்ட் - 31 | வங்கதேசம் vs இலங்கை | கண்டி (இலங்கை) |
செப்டம்பர் -2 | பாகிஸ்தான் vs இந்தியா | கண்டி (இலங்கை) |
செப்டம்பர் -3 | வங்கதேசம் vs ஆப்கானிஸ்தான் | லாகூர் (பாகிஸ்தான்) |
செப்டம்பர் -4 | இந்தியா vs நேபாளம் | கண்டி (இலங்கை) |
செப்டம்பர் -5 | ஆப்கானிஸ்தான் vs இலங்கை | லாகூர் (பாகிஸ்தான்) |
சூப்பர் 4 சுற்றுகள் | ||
செப்டம்பர் -6 | A1 vs B2 | லாகூர் (பாகிஸ்தான்) |
செப்டம்பர் -9 | B1 vs B2 | கொழும்பு (இலங்கை) |
செப்டம்பர் -10 | A1 vs A2 | கொழும்பு (இலங்கை) |
செப்டம்பர் -12 | A2 vs B1 | கொழும்பு (இலங்கை) |
செப்டம்பர் -14 | A1 vs B2 | கொழும்பு (இலங்கை) |
இறுதிப்போட்டி | ||
செப்டம்பர் -17 | சூப்பர் 4 சுற்று - 1 vs 2 | கொழும்பு (இலங்கை) |