Asia Cup 2022; 100வது T20 கிரிக்கெட் போட்டியில் விளையாடும் இந்திய வீரர் இவரா?
இந்திய வீரர்களில் முதல் முறையாக ஒரு வீரர் சர்வதேச அளவில் 100வது டி20 போட்டியில் விளையாடவுள்ளார். அதுவும் தனது 100வது போட்டியை பாகிஸ்தான் அணிக்கு எதிராக விளையாடவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Asia Cup 2022; சமீப காலமாக கிரிக்கெட் விளையாட்டில் ஆர்வம் என்பது அனைத்து தரப்பு மக்களிடத்திலும் அதிகமாகி வருகிறது. இதனால் உள்ளூர் போட்டி, தேசிய அள்விலான போட்டி சர்வதேச போட்டி என ஆர்வமுள்ளவர்கள் மிகவும் அதிகமாக விளையாடவும் தன்னை தகுதி படுத்திக்கொள்கின்றனர். இதனால் சர்வதேச அளவில் விளையாட வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது. இந்த நிலையில் தனது நாட்டிற்காக தான் விளையாட வேண்டும் எனும் போட்டி விரர்களிடையேயும் இருந்து வருகிறது. இதில் மிகவும் கவனிக்க வேண்டியது, பல திறமைசாலிகளுக்கு மத்தியில் தன்னை எப்போதும் நிரூபித்துக்கொண்டும், நாட்டிற்காக தன்னை 100வது போட்டியில் ஈடுபடுத்திகொள்வது என்பது மிகவும் பாராட்டுக்குறியது. அவ்வகையில் இந்திய வீரர் சர்வதேச அளவில் தனது 100வது டி20 போட்டியில் விளையாடவுள்ளார். அதுவும் கிரிக்கெட் உலகில் மிகப்பெரும் எதிரிகள் எனப்படும், பாகிஸ்தான் அணியிடன் இந்திய அணி விளையாடவுள்ளது. இவர் தற்போது ஐசிசி டி20 தரவரிசையில் 25வது இடத்தில் உள்ளார். இப்படி தனது 100வது டி20 போட்டியில் களமிறாங்கவுள்ள இந்திய வீரருக்கு சர்வதேச அளவில் வாழ்த்துகள் வந்தவாறு உள்ளன. அவருக்கு நாமும் வாழ்த்துச் சொல்வதோடு அவர் யார் எனவும் தெரிந்து கொள்வது முக்கியம் தானே. அந்த வரலாற்று சாதனையை நிகழ்த்தவுள்ள வீரர் ரன் மிஷின் எனப்படும் காட் ஆஃப் கவர் டிரைவ் விராட் கோலி.
தனது 100வது சர்வதேச போட்டியில் பாகிஸ்தான் அணியுடன் விளையாடவுள்ள கிங் கோலி தனது முதல் சர்வதேச டி20 போட்டியில் அறிமுகமானது, ஜும்பாவேவ் அணிக்கு எதிராக 2010ஆம் ஆண்டு ஜூன் மாதம் 12ம் தேதி அறிமுகமானார். தனது முதல் போட்டியில் 21 பந்தில் 26 ரன்கள் அடித்தார். அதில் மூன்று பவுண்டரி மற்றும் ஒரு சிக்ஸ் அடித்து அணி வெற்று பெரும்போது களத்தில் இருந்தார். அன்று முதல் இன்று வரை விராட் கோலி தனது கிரிக்கெட் கெரியரில் பல ஏற்றங்களையும் சறுக்கல்களையும் கண்டுள்ளார். குறிப்பாக இந்திய அணியை வழிநடத்தும் மாபெரும் கேப்டனாக வலம் வருவார் என யாரும் நினைக்கவில்லை. ஒரு வீரராக இதுவரை 99 சர்வதேச டி20 போட்டியில் விளையாடியுள்ள விராட் கோலி, 50 போட்டிகளுக்கு கேப்டனாக இருந்து அணியை வழிநடத்தியுள்ளார். இதில் 30 போட்டிகளில் வெற்றியும், 16 போட்டிகளில் தோல்வியும் இரண்டு போட்டிகளில் டிராவும் இரண்டு போட்டிகளில் முடிவு எதும் இல்லாமலும் இருந்துள்ளது. இவர் அணியை வழிநடத்தி அணிக்கு வெற்றி தேடித்தந்துள்ள வெற்றி விகிதம் என்பது, 64.58% ஆகும்.
வரும் 28ம் தேதி அதாவது நாளை 2022ஆம் ஆண்டுக்கான ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணி பாகிஸ்தானை எதிர் கொள்ளவுள்ளது. இந்த போட்டியில் அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக களமிறங்கவுள்ள விராட் கோலி, இதுவரை சர்வதேச டி20 போட்டியில், 3,308 ரன்கள் அடித்துள்ளார். இதில் குறிப்பாக 30 அரை சதங்களை விளாசியுள்ளார். டி20 போட்டியைப் பொறுத்த வரையில் விராட் கோலி சர்வதேச அளவில் இன்னும் சதம் அடிக்கவில்லை. டி20 போட்டியைப் பொறுத்தவரையில் விராட் கோலியின் அதிகபட்ச ஸ்கோர் என்பது, 94 ரன்களுக்கு நாட்-அவுட் என்பது தான். டி20 போட்டியில் இதுவரை விராட் கோலி, 299 பவுண்டரிகளும், 93 சிக்ஸர்களும் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தான் விளையாடிய போட்டிகளில் பெரும்பாலும் அணியின் வெற்றிக்கு வழிவகுத்த விராட் கோலி, இதுவரை சர்வதேச டி20 போட்டியில் 12 முறை மேன் ஆப் த மேட்ச் வாங்கியுள்ளார். இப்படி பல்வேறு சாதனைகளை படைத்திருக்கும் சாதனை மன்னன் இந்த 100வது போட்டியில் மேலும் ஒரு சாதனையினை படைக்கவுள்ளார். சர்வதேச அளவில் மூன்று வகை கிரிக்கெட்டிலும், 100 போட்டிகள் விளையாடிய வீரர் எனும் வரலாற்று சாதனையினை படைக்கவுள்ளார்.
சர்வதேச அளவில் பெரும் எதிர்பார்ப்பில் உள்ள இந்த அசிய கோப்பை போட்டியில், விராட் கோலி படைக்கவுள்ள சாதனைகளைக் காண மட்டும் தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இந்த போட்டியில் விராட் கோலி மீண்டும் ஃபார்முக்கு திரும்பவும் அணி வெற்றி பெறவும் வாழ்த்தலாமே..!