Ashwin Test Record: ஒரே போட்டிதான்... எண்ணற்ற சாதனைகளை படைத்த அஸ்வின்...! பட்டியலை பாருங்க..!
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் இன்னிங்சில் 6 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் அஸ்வின் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார்.
அமதாபாத்தில் நடைபெற்று வரும் 4வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் கவாஜாவின் 180 ரன்கள், கேமரூன் கிரீனின் 114 ரன்கள் உதவியுடன் ஆஸ்திரேலிய அணி 480 ரன்கள் குவித்தது. இந்திய அணியில் சுழற்பந்துவீச்சாளர் அஸ்வின் சுழலில் ஆதிக்கம செலுத்தினார். அவர் 47.2 ஓவர்கள் வீசி 91 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இந்த போட்டியில் அஸ்வின் 6 விக்கெட்டுகள் கைப்பற்றியது மூலம் பல்வேறு சாதனைகளை படைத்தார். அதன் பட்டியலை கீழே காணலாம்.
கும்ப்ளேவை பின்னுக்குத் தள்ளிய அஸ்வின்:
தலைசிறந்த ஆல்ரவுண்டரான அஸ்வின் சுழற்பந்துவீச்சில் சூறாவளியாக சுழன்றழடிக்கக்கூடியவர். இந்திய அணிக்காக சொந்த மண்ணில் அதிக முறை ஒரு இன்னிங்சில் 5 விக்கெட்டுகள் வீழ்த்திய வீரர் என்ற சாதனையை தன்வசம் வைத்திருந்த அனில் கும்ப்ளேவை அஸ்வின் இன்று பின்னுக்குத் தள்ளினார். இந்திய அணிக்காக சொந்த மண்ணில் கும்ப்ளே 25 முறை 5 விக்கெட்டுகள் வீழ்த்தியிருந்தார்.
அஸ்வின் இன்றைய போட்டியில் 6 விக்கெட்டுகள் வீழ்த்தியதன் மூலமாக சொந்த மண்ணில் 26வது முறையாக 5 அல்லது அதற்கும் மேற்பட்ட விக்கெட்டுகளை கைப்பற்றி சொந்த மண்ணில் அதிக முறை 5 விக்கெட்டுகளை கைப்பற்றிய இந்திய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
முரளிதரனுக்கு அடுத்த இடத்தில் அஸ்வின்:
சொந்த மண்ணில் அதிக முறை 5 விக்கெட்டுகள் வீழ்த்திய வீரர் என்ற பட்டியலில் முதலிடத்தில் இலங்கை அணியின் ஜாம்பவான் முத்தையா முரளிதரன் உள்ளார். அவர் இதுவரை சொந்த மண்ணில் 45 முறை 5 அல்லது 5க்கும் அதிகமான விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அவருக்கு அடுத்த இடத்தில் தற்போது அஸ்வின் உள்ளார். முன்பு இந்த இடத்தில் இருந்த இலங்கையில் ரங்கனா ஹெராத்துடன் 2வது இடத்தை அஸ்வின் தற்போது பகிர்ந்து கொணடுள்ளார்.
அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய இந்தியர்:
இந்த தொடர் தொடங்குவதற்கு முன்பு ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக பார்டர் – கவாஸ்கர் தொடரில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய வீரர் என்ற சாதனையை அனில் கும்ப்ளே 111 விக்கெட்டுகளுடன் தன்வசம் வைத்திருந்தார். இந்த போட்டியில் 6 விக்கெட்டுகளை அள்ளியதன் மூலம் அஸ்வின் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இந்தியர் என்ற சாதனையை படைத்துள்ளார். அஸ்வின் 113 விக்கெட்டுகளுடன் தற்போது முதலிடத்தில் உள்ளார். நாதன் லயனும் 113 விக்கெட்டுகளுடன் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சர்வதேச அளவில் 7வது இடம்:
ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் அஸ்வின் சர்வதேச அளவில் 7வது இடத்தில் உள்ளார். முன்னாள் வீரர் இயான் போத்தம் 36 டெஸ்ட் போட்டிகளில் 148 விக்கெட்டுகளுடன் முதலிடத்தில் உள்ளார். அவருக்கு அடுத்த இடத்தில் வால்ஷ், 3வது இடத்தில் ப்ராட், 4வது இடத்தில் ஹாட்லீயும், 4வது இடத்தில் ஆம்ப்ரோசும், 6வது இடத்தில் வில்சும், 7வது இடத்தில் அஸ்வினும் உள்ளனர். இந்த 7 பேரில் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக அஸ்வின் மட்டுமே 22 டெஸ்ட் ஆடியுள்ளார். மற்றவர்கள் அவரை விட அதிகம்.
மேலும் படிக்க: IND vs AUS, 4th Test: முதல் இன்னிங்ஸில் பட்டையை கிளப்பிய ஆஸி., நிதானமாக தொடங்கிய இந்தியா..! ஆட்ட நிலை இதுதான்!
மேலும் படிக்க: