WI vs ENG: 2 ஆண்டுக்கு பிறகு மீண்டும் வந்த ரஸல்! இங்கிலாந்துக்கு எதிராக டி20 அணியை அறிவித்த வெஸ்ட் இண்டீஸ்!
2021 டி20 உலகக் கோப்பைக்குப் பிறகு முதல் முறையாக தற்போதுதான் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு ஆண்ட்ரே ரஸல் திரும்பியுள்ளார்.
2021 டி20 உலகக் கோப்பைக்குப் பிறகு முதல் முறையாக வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு ஆண்ட்ரே ரஸல் திரும்பியுள்ளார். இங்கிலாந்து அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட தொடருக்கான 15 பேர் கொண்ட வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
வெஸ்ட் இண்டீஸ்:
வெஸ்ட் இண்டீஸ் அணி, இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் 2-1 என்ற கணக்கில் தொடரை வென்று புது சரித்திரம் படைத்தது. அதே உத்வேகத்தை டி20 தொடரிலும் காட்ட வெஸ்ட் இண்டீஸ் அணி முயற்சிக்கும்.
இங்கிலாந்து அணிக்கு எதிரான 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் அறிமுகமான இளம் ஆல்ரவுண்டர் வீரர் மேத்யூ ஃபோர்டு, டி20 அணியில் முதல்முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். மேலும், அனுபவ வீரர்களான ஜேசன் ஹோல்டர், நிக்கோலஸ் பூரன் மற்றும் கைல் மேயர்ஸ் ஆகியோரும் இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை தவறவிட்ட நிலையில், தற்போது டி20 அணியில் இடம்பிடித்துள்ளனர்.
இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 அணி:
ரோவ்மன் பவல் (கேப்டன்), ஷாய் ஹோப் (விக்கெட் கீப்பர்), ரோஸ்டன் சேஸ், மேத்யூ ஃபோர்டே, ஷிம்ரோன் ஹெட்மியர், ஜேசன் ஹோல்டர், அகேல் ஹொசைன், அல்சாரி ஜோசப், பிராண்டன் கிங், கைல் மேயர்ஸ், குடகேஷ் மோட்டி, நிக்கோலஸ் பூரன், ஆண்ட்ரே ரஸ்ஸல், ஷெர்ஃபர் ரஸ்ஸல், ரொமாரியோ ஷெப்பர்ட்.
வெஸ்ட் இண்டீஸ் VS இங்கிலாந்து டி20 தொடர் அட்டவணை:
- 1வது T201: கென்சிங்டன் ஓவல் பிரிட்ஜ்டவுன். பார்படாஸ் (டிசம்பர் 12, செவ்வாய்) அதிகாலை 3:30 (டிசம்பர் 13) IST
- 2வது T20I: தேசிய கிரிக்கெட் ஸ்டேடியம், செயின்ட் ஜார்ஜ். கிரெனடா (டிச. 14. வியாழன்) இரவு 11 மணி IST
- 3வது T201: தேசிய கிரிக்கெட் ஸ்டேடியம், செயின்ட் ஜார்ஜ், கிரெனடா (டிசம்பர் 16. சனி) இரவு 11 மணி IST
- 4வது T20I: பிரையன் லாரா ஸ்டேடியம். தரூபா. டிரினிடாட் (டிசம்பர் 19, ទ្រល់ाएं) 1:30 AM ( 20) IST
- 5வது T20I: பிரையன் லாரா ஸ்டேடியம். தரூபா. டிரினிடாட் (டிச. 21. வியாழன்) காலை 1:30 (டிசம்பர் 22) IST
ஒருநாள் தொடரை வென்ற வெஸ்ட் இண்டீஸ்:
மூன்றாவது ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தியது. இதன் மூலம் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரை வெஸ்ட் இண்டீஸ் 2-1 என கைப்பற்றியது. மழை குறுக்கிட்ட இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 40 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 206 ரன்கள் எடுத்தது.
இங்கிலாந்து அணி சார்பில் வில் ஜாக் 7 ஓவர்களில் 22 ரன்கள் மட்டுமே விட்டுகொடுத்து 3 விக்கெட்களை வீழ்த்தியிருந்தார். இது தவிர கஸ் அட்கிசன் 2 விக்கெட்டுகளையும், ரெஹான் அகமது 1 விக்கெட்களையும் வீழ்த்தி இருந்தனர்.
இதனையடுத்து, வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு டக்வொர்த் லூயிஸ் முறைப்படி 189 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. வெஸ்ட் இண்டீஸ் அணி 31.4 ஓவர்களில் 191 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. முன்னதாக, டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஷாய் ஹோப் பந்துவீச முடிவு செய்தார். முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 40 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 206 ரன்கள் எடுத்தது. இங்கிலாந்து அணியில் பென் டக்கெட் 73 பந்துகளில் 71 ரன்கள் எடுத்தார். அதேசமயம், வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் மேத்யூ ஃபோர்டு மற்றும் அல்சாரி ஜோசப் தலா 3 விக்கெட்களையும், ரொமாரியோ ஷெப்பர்ட் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.