மேலும் அறிய

பேட்டிங்கில் சொதப்பிய இந்தியா.. IPL -ஐ அடித்து துவைக்கும் ரசிகர்கள்..! கொதிக்கும் ட்விட்டர்!

டி20 உலகக் கோப்பையில் இரண்டு போட்டிகளிலும் இந்திய அணி மோசமான பேட்டிங் ஃபார்ம் காரணமாக ஐபிஎல் தொடரை தடை செய்யவேண்டும் என்ற கருத்து எழுந்து வருகிறது.

டி20 உலகக் கோப்பை தொடரில் தற்போது சூப்பர் 12 போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் இந்திய கிரிக்கெட் அணி பாகிஸ்தான்,நியூசிலாந்து, ஆஃப்கானிஸ்தான், ஸ்காட்லாந்து, நமீபியா உள்ளிட்ட அணிகளுடன் இடம்பெற்றுள்ளது. அதில் முதல் சூப்பர் 12 போட்டியில் இந்திய அணி பாகிஸ்தான் அணியிடம் 10 விக்கெட் வித்தியாசத்தில் மோசமான தோல்வியை அடைந்தது.

அதைத் தொடர்ந்து நியூசிலாந்து அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து வெறும் 110 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்த அணியின் பேட்டிங் மிகவும் மோசமாக அமைந்தது. பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியிலும் இந்திய அணியின் பேட்டிங் மிகவும் மோசமாக அமைந்திருந்தது. இந்நிலையில் ட்விட்டர் #BanIPL என்ற ஹேஸ்டேக் தற்போது வேகமாக ட்ரெண்டாகி வருகிறது. அதில் பலரும் இந்திய வீரர்கள் ஐபிஎல் தொடருக்கு தரும் முக்கியத்துவத்தை ஏன் இதற்கு தரவில்லை என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். அத்துடன் பலரும் ஏன் ஐபிஎல் தொடர் சிறப்பாக செயல்பட்டவர்கள் மட்டும்

வர்த்தக ரீதியில் ஐபிஎல் தொடர் சென்ற பிறகு அதன் முக்கியத்துவம் மிகவும் அதிகரித்துள்ளது. இதற்காக வீரர்களும் தங்களுடைய முழு அர்பணிப்பை தருகிறனர். ஒரு சில சமயங்களில் பலர் தங்களுடைய தேசிய அணிகளுக்கு இணையாக ஐபிஎல் அணிகளுக்கு முக்கியதுவம் தருகின்றனர் என்ற குற்றச்சாட்டை பலர் முன்வைக்கின்றனர். ஐபிஎல் தொடர் எந்தளவிற்கு முக்கியத்துவம் வாய்ந்தது என்பது கடந்த முறை மற்றும் இம்முறை யுஏஇயில் தொடர் நடத்தப்பட்டத்தை வைத்து புரிந்து கொள்ளலாம்.

கொரோனா பாதிப்பு காலத்திலும் ஐபிஎல் தேவையா என்று பலரும் கேள்வி எழுப்பிய போது ஐபிஎல் தொடர் இந்தியாவில் நடத்தப்படாமல் யுஏஇயில் நடத்தப்பட்டது. அதை ஒரு சிலர் வரவேற்ற நிலையில் மற்ற சிலர் விமர்சித்தனர். மேலும் டி20 உலகக் கோப்பை தொடங்குவதற்கு இரு நாட்களுக்கு முன்பு வரை ஐபிஎல் தொடர் நடைபெற்றது. இதனால் அந்தந்த நாட்டைச் சேர்ந்த வீரர்கள் ஒரு குழுவாக சேர்ந்து இந்தத் தொடருக்கு தயாராக நேரம் குறைவானதாக சிலர் கருத்து தெரிவிக்கின்றனர். 

மேலும் படிக்க: டி20 போட்டியில் டெஸ்ட் மேட்ச் ஆடிய இந்தியா.. நியூசிலாந்திற்கு 111 ரன்கள் இலக்கு

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
"பொய்.. இதுக்கு ஆதாரம் இல்ல" அதிகாரிகளுக்கு லஞ்சமா? அதானி குழுமம் விளக்கம்!
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”மின்சார துறையில் லஞ்சமா? பொய் சொல்லும் அமெரிக்கா” செந்தில் பாலாஜி SUPPORTNellai dmk issue | ”உன் சாதிக்கு பதவியா? கொன்னு போட்ருவோம்” கதறும் திமுக பேரூராட்சி தலைவிGirl Harassment : நடந்து சென்ற இளம்பெண் தவறாக கைவைத்த கயவன் மதுரையில் பட்டப்பகலில் அவலம்Thirumavalavan :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
"பொய்.. இதுக்கு ஆதாரம் இல்ல" அதிகாரிகளுக்கு லஞ்சமா? அதானி குழுமம் விளக்கம்!
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Pakistan Shooting: பாகிஸ்தானில் வேன் மீது துப்பாக்கிச்சூடு.! குறைந்தது 38 பேர் பலி.!
Pakistan Shooting: பாகிஸ்தானில் வேன் மீது துப்பாக்கிச்சூடு.! குறைந்தது 38 பேர் பலி.!
“என்னை நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி” - சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி!
“என்னை நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி” - சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி!
Sabarimala Temple: சபரிமலையில் குழந்தைகளை தவறவிட்டால் என்ன செய்வது? -  கேரள போலீஸின் புதிய திட்டம் இதுதான்
சபரிமலையில் குழந்தைகளை தவறவிட்டால் என்ன செய்வது? - கேரள போலீஸின் புதிய திட்டம் இதுதான்
“என்னை காதலி” ...  பெண்ணை கடுமையாக தாக்கும் இளைஞர் - அதிர்ச்சி வீடியோ
“என்னை காதலி” ... பெண்ணை கடுமையாக தாக்கும் இளைஞர் - அதிர்ச்சி வீடியோ
Embed widget