AFG vs BAN Asia Cup 2022 : ஆப்கானிஸ்தானை சமாளிக்குமா வங்கதேசம்.! ஆசிய கோப்பையில் இன்று மோதல்..! வெல்லப்போவது யார்?
ஆசிய கோப்பைத் தொடரில் இன்று ஷார்ஜாவில் வங்காளதேசமும், ஆப்கானிஸ்தான் அணியும் நேருக்கு நேர் மோதுவதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று நடைபெறும் மூன்றாவது போட்டியில் வங்காளதேசமும், ஆப்கானிஸ்தானும் இன்று நேருக்கு நேர் மோதுகின்றன. குரூப் பி பிரிவில் ஏற்கனவே இலங்கை அணியை வீழ்த்திய ஆப்கானிஸ்தான் அணி இன்ற போட்டியில் பலமிகுந்த அணியாக களமிறங்குகின்றது.
இந்தியா, ஆஸ்திரேலியா போன்ற அணிகளுக்கே அச்சுறுத்தல் அளிக்கும் அணியாக வங்காளதேசம் இருப்பதால் அந்த அணியின் பலத்தையும் குறைத்து மதிப்பிட முடியாது.
Preparations in the AfghanAtalan camp are 🔛 in full force ahead of their 2nd game in the Asia Cup 2022 tomorrow against Bangladesh 🏏 #AfghanAtalan | #AsiaCup2022 pic.twitter.com/774hNKV8Il
— Afghanistan Cricket Board (@ACBofficials) August 29, 2022
ஆனால், சமீபத்தில் ஜிம்பாப்வே அணியுடன் வங்காளதேசம் தோல்வியடைந்தது அந்த அணி ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்தது. இதனால், இந்த ஆசிய கோப்பைத் தொடரை வெற்றியுடன் தொடங்க வங்கதேசம் விரும்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆப்கானிஸ்தான் அணி பேட்டிங், பந்துவீச்சு என இரண்டிலும் பலமாக உள்ளது. இலங்கை அணியை முதல் போட்டியில் 105 ரன்களில் சுருட்டியதுடன் 106 ரன்கள் இலக்கை 10 ஓவர்களில் விளாசி அசத்தியது. ஆப்கானிஸ்தான் அணியில் பேட்டிங் பலமாக ஹசரதுல்லா ஷசாய், குர்பாஸ். ஜட்ரான் ஆகியோார் அசத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கேப்டன் முகமது நபியும், ரஷீத்கானும் ஆல் ரவுண்டர்களாக அசத்துவார்கள் என்று எதிர்பார்க்கலாம்.
மேலும் படிக்க : Harbhajan Singh: சக நாட்டவரை கிண்டல் பண்ணா சிரிப்பீங்களா ஹர்பஜன்..? ட்விட்டரில் கிழிக்கும் நெட்டிசன்கள்!
வங்கதேசம் அணியில் முகமது நயீம், அனாமல் ஹக் நல்ல தொடக்கத்தை அளிக்க வேண்டியது அவசியம். கேப்டன் ஷகிப் அல்ஹசன் பேட்டிங் மட்டுமின்றி பந்துவீச்சிலும் பலமாக இருப்பார் என்று நம்பலாம். ரஹீமும் பேட்டிங்கில் அசத்துவார் என்று நம்பலாம். ஆப்கானிஸ்தான் பந்துவீச்சிற்கு பலமாக பரூக்கி உள்ளார். அவருடன் நவீன் உல் ஹக், முஜீப் உர் ரஹ்மான் உள்ளனர். வங்கதேச அணிக்கு பந்துவீச்சில் பலமாக தஸ்கின் அகமது, முஸ்தபீர் ரஹ்மான் உள்ளனர்.
ஆப்கானிஸ்தானும், வங்கதேசமும் இதுவரை 8 டி20 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில், ஆப்கானிஸ்தான் 5 முறை வெற்றி பெற்றுள்ளது. வங்காளதேசம் 3 போட்டியில் வெற்றி பெற்றுள்ளது. வங்காளதேச அணி சார்பில் அதிகபட்சமாக மகமுதுல்லா 169 ரன்களை எடுத்துள்ளார். ஆப்கானிஸ்தான் அணி சார்பில் கேப்டன் முகமது நபி 141 ரன்களை எடுத்துள்ளார்.
வங்காளதேச அணி சார்பில் ஷகிப் அல் ஹசன் 10 விக்கெட்டுகளையும், ஆப்கானிஸ்தான் அணி சார்பில் ரஷீத்கான் 14 விக்கெட்டுகளையும் வீழ்த்தி அசத்தியுள்ளார்.
மேலும் படிக்க : IND vs PAK: 36 போட்டிகளில் விராட் கோலியின் சாதனையை சமன் செய்த ரோகித்... என்ன சாதனை தெரியுமா?
மேலும் படிக்க : IND vs PAK: எல்லா பந்துக்கும் அவுட் கேட்டா எப்படி? ரிஸ்வானை ட்விட்டரில் கலாய்க்கும் நெட்டிசன்கள்!