மேலும் அறிய

INDIAN SPORTS : அக்டோபர் 3ல் இந்திய அணி விளையாடும் 4 முக்கிய போட்டிகள்...விவரங்கள் இதோ...

அக்டோபர் 3ஆம் தேதி 4 வெவ்வெறு முக்கிய விளையாட்டு போட்டிகளில் இந்திய அணிகள் விளையாடவுள்ளது ரசிகர்களிடையே பெரும் ஆரவாரத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஒரே நாளில் இந்திய அணி 4 வரலாற்று சிறப்புமிக்க போட்டிகளில் விளையாடவுள்ளது இந்திய ரசிகர்களை பெரும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 


அக்.3ல் இந்திய அணி சந்திக்கும் சவால்கள்

அக்டோபர் 3ஆம் தேதி 4 வெவ்வேறு இந்திய அணிகள் தங்களது முக்கிய போட்டிகளில் விளையாடுகின்றன. ஆசிய ஆடவர் கிரிக்கெட் இறுதிப்போட்டி, ஆசிய ஆடவர் ஹாக்கி இறுதிப் போட்டி, மேற்கிந்திய தீவுகளுடனான இந்திய அணியின் 3-வது ஒருநாள் போட்டி மற்றும் பிரேசில் அணிக்கு எதிரான இந்திய கால்பந்து அணியின் போட்டி என ஒரே நாளில் 4 முக்கிய போட்டிகள் நடைபெறவுள்ளது. 

இறுதிப் போட்டியில் இந்தியா - பாகிஸ்தான்

ஜப்பானில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுகள் இறுதிப் கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அக்டோபர் 3ஆம் தேதி ஆடவர் கிரிக்கெட் இறுதிப் போட்டி நடைபெறவுள்ளது. லீக் சுற்றுகளின் முடிவில் ஆசிய கண்டத்தின் 4 பலமிகுந்த அணிகளான இந்தியா, பாகிஸ்தான், இலங்கை மற்றும் வங்கதேச அணிகள் அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறியது. முதல் அரையிறுதியில் வங்கதேச அணியை வீழ்த்தி பாகிஸ்தான் அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. தொடர்ந்து, 2-வது அரையிறுதிப் போட்டியில் இலங்கை அணியை 124 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி துவம்சம் செய்த இந்திய அணி இறுதிப் போட்டிக்குள் வெற்றிநடைப்போட்டது. அதன்படி, இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் தங்கப் பதக்கத்திற்காக மோதவுள்ள நிலையில், இப்போட்டி மீதான ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பு பன்மடங்கு அதிகரித்துள்ளது. 

ஆடவர் ஹாக்கியில் தங்கம் வெல்லுமா இந்தியா?

2026 ஆசிய விளையாட்டு தொடரின் ஆடவர் ஹாக்கி இறுதிப் போட்டியும் அக்டோபர் 3ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதில் பலம் வாய்ந்த இந்திய அணி தங்கப் பதக்கத்தை வெல்ல மலேசியா அணியை எதிர்கொள்கிறது. அரையிறுதி போட்டியில் பாகிஸ்தான் அணியை 4-3 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய இந்தியா, இறுதிப் போட்டியிலும் வென்று தங்கப் பதக்கத்தை தட்டிச் செல்லுமா என்ற எதிர்ப்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. 

இந்தியா - மேற்கிந்திய தீவுகள் பலப்பரீட்சை

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மேற்கிந்திய தீவுகள் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர்களில் விளையாடுகிறது. அதில், முதல் 2 ஒருநாள் போட்டிகளிலும் இந்தியா வெற்றி பெற்று தொடரை கைப்பற்றிய நிலையில், 3-வது ஒருநாள் போட்டி அக்டோபர் 3ஆம் தேதி நியு சண்டிகரில் நடைபெறுகிறது. இந்த போட்டியையும் வென்று இந்திய அணி தொடரை முழுமையாக கைப்பற்றும் என ரசிகர்கள் ஆர்வமுடம் எதிர்ப்பார்த்து காத்துக் கிடக்கின்றனர்.

இந்திய கால்பந்து வரலாற்றில் முக்கிய நாள்

சமீப காலமாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் இந்திய கால்பந்து அணி, அக்டோபர் 3ஆம் தேதி உலக அளவில் மிகுந்த எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் ஓர் முக்கிய போட்டியில் விளையாடுகிறது. உலக கால்பந்து வரலாற்றில் முதன்முறையாக பிரேசில் அணி இந்திய அணிக்கு எதிராக விளையாடவுள்ளதே அந்த போட்டி. உலக கால்பந்து தரவரிசையில் 4ஆம் இடத்தில் இருக்கும் பலம் வாய்ந்த பிரேசில் அணிக்கு எதிராக இந்திய அணி களமிறங்கவுள்ளது இந்திய கால்பந்து ரசிகர்களின் ஆர்வத்தை வெகுவாக தூண்டியுள்ளது. உலக கால்பந்து தரவரிசையில் 138-வது இடத்தில் இருக்கும் இந்தியாவிற்கு இந்த போட்டி ஒரு மிகுந்த அனுபவமாக இருக்கும் எனவும் எதிர்ப்பார்க்கப்படுகிறது. 

போட்டிகளின் விவரங்கள்

ஆடவர் கிரிக்கெட் இறுதிப்போட்டி இந்திய நேரப்படி காலை 10.30 மணிக்கும், இந்தியா - மேற்கிந்திய தீவுகள் மோதும் 3-வது ஒருநாள் போட்டி பகல் 2 மணிக்கும், ஆடவர் ஹாக்கி இறுதிப் போட்டி மதியம் 3.30 மணிக்கும் நடைபெறுகிறது. மிகுந்த எதிர்ப்பார்ப்பை கிளப்பியுள்ள இந்தியா - பிரேசில் இடையேயான கால்பந்து போட்டி கொல்கத்தாவில் உள்ள சால்ட் லேக் மைதானத்தை இரவு 7.30 மணிக்கு நடைபெறுகிறது. 

ரசிகர்கள் உற்சாகம்

விளையாட்டின் மீது ஆர்வம் கொண்ட இந்திய ரசிகர்கள் ஒவ்வொருவருக்கும் அக்டோபர் 3ஆம் தேதி காலை தொடங்கி இரவு வரை பெரும் விருந்தே காத்திருக்கிறது என்று சொல்லலாம். இந்த 4 வரலாற்று சிறப்புமிக்க போட்டிகளிலும் இந்திய அணிகள் வெற்றி பெற்று ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்துமா என்பதை பொருத்திருந்து பார்க்கலாம்.

Advertisement

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor
Advertisement

தலைப்பு செய்திகள்

IND vs NZ: தலைவலி தரும் நியூசிலாந்து.. புது தடம் பதிக்குமா கில் படை? இந்திய ரசிகர்கள் ஆர்வம்
IND vs NZ: தலைவலி தரும் நியூசிலாந்து.. புது தடம் பதிக்குமா கில் படை? இந்திய ரசிகர்கள் ஆர்வம்
KL Rahul: சேனா நாடுகளின் சேனாதிபதி.. புதிய வரலாறு படைத்த கே.எல்.ராகுல்! ஒரே ஒரு ஆளு இவர்தான்!
KL Rahul: சேனா நாடுகளின் சேனாதிபதி.. புதிய வரலாறு படைத்த கே.எல்.ராகுல்! ஒரே ஒரு ஆளு இவர்தான்!
IND vs NZ: சம்பவம் செய்த நிகோல்ஸ்.. சாத்தி எடுத்த பிலிப்ஸ்.. கம்பேக் கொடுத்த நியூசிலாந்து! முதல் டெஸ்டின் முதல் நாள் எப்படி?
IND vs NZ: சம்பவம் செய்த நிகோல்ஸ்.. சாத்தி எடுத்த பிலிப்ஸ்.. கம்பேக் கொடுத்த நியூசிலாந்து! முதல் டெஸ்டின் முதல் நாள் எப்படி?
"செமத்தியான ப்ளேயர்யா.." பெஞ்சில் உட்காரவைக்கப்பட்ட சிராஜ், ஜடேஜா! கம்பீர், கில்லை வறுத்தெடுக்கும் ரசிகர்கள்!
Advertisement
Advertisement

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin: காலியான கொளத்தூர்.. மு.க.ஸ்டாலின் களமிறங்குவாரா? மாட்டாரா? ஓர் அலசல்
MK Stalin: காலியான கொளத்தூர்.. மு.க.ஸ்டாலின் களமிறங்குவாரா? மாட்டாரா? ஓர் அலசல்
CM Vijay: மு.க.ஸ்டாலின் வீட்டு விசேஷத்திற்கு சென்ற முதலமைச்சர் விஜய்! ரஜினியுடன் சந்திப்பு!
CM Vijay: மு.க.ஸ்டாலின் வீட்டு விசேஷத்திற்கு சென்ற முதலமைச்சர் விஜய்! ரஜினியுடன் சந்திப்பு!
சென்னை பன்னாட்டு புத்தகத் திருவிழா ஜனவரி 16-இல் தொடக்கம் - முழு விவரம் தெரியுமா?
சென்னை பன்னாட்டு புத்தகத் திருவிழா ஜனவரி 16-இல் தொடக்கம் - முழு விவரம் தெரியுமா?
IND vs NZ: தலைவலி தரும் நியூசிலாந்து.. புது தடம் பதிக்குமா கில் படை? இந்திய ரசிகர்கள் ஆர்வம்
IND vs NZ: தலைவலி தரும் நியூசிலாந்து.. புது தடம் பதிக்குமா கில் படை? இந்திய ரசிகர்கள் ஆர்வம்
நவ.23-இல் திருச்சி செல்லும் முதலமைச்சர்? - இடைத்தேர்தல்களை குறிவைத்து காய்நகர்த்தும் முதல்வர்!
நவ.23-இல் திருச்சி செல்லும் முதலமைச்சர்? - இடைத்தேர்தல்களை குறிவைத்து காய்நகர்த்தும் முதல்வர்!
"சிங்கப் பெண்படை எங்கே போய் தூங்கிக்கொண்டிருக்கிறது?" - முதல்வரை சாடிய கனிமொழி!
CM Vijay: 6 மாதத்தில் தொழில்துறையில் விஜய் ஆட்சி செய்தது என்ன? பட்டியலிட்ட தவெக
CM Vijay: 6 மாதத்தில் தொழில்துறையில் விஜய் ஆட்சி செய்தது என்ன? பட்டியலிட்ட தவெக
கள்ளச்சாராயம் குடித்து 16 பேர் பலியான சோகம் - எங்கே நிகழ்ந்தது இந்த அசம்பாவிதம்?
கள்ளச்சாராயம் குடித்து 16 பேர் பலியான சோகம் - எங்கே நிகழ்ந்தது இந்த அசம்பாவிதம்?
Embed widget