T20 WC 2026: அடுத்த டி20 உலகக்கோப்பை! நேரடியாக தகுதி பெற்று அசத்திய அமெரிக்கா - ரசிகர்கள் ஹாப்பி
சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ள அமெரிக்கா அடுத்த டி20 உலகக்கோப்பையில் பங்கேற்பதற்கு நேரடி தகுதி பெற்றுள்ளது. இது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக அமைந்துள்ளது.
நடப்பு டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. குரூப் போட்டிகள் இன்றுடன் முடிவடையும் நிலையில், சூப்பர் 8 சுற்றுகள் நாளை தொடங்குகிறது. அடுத்த டி20 உலகக்கோப்பை 2026ம் ஆண்டு நடக்கிறது.
நேரடி தகுதி பெற்ற 12 அணிகள்:
அடுத்த டி20 உலகக்கோப்பையில் மொத்தம் 16 அணிகள் பங்கேற்க உள்ளன. தற்போது நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பையில் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியுள்ள அணிகள் உள்பட 8 அணிகள் அடுத்த டி20 உலகக்கோப்பையில் பங்கேற்பதற்கு நேரடியாக தகுதி பெற்றுள்ளது.
இதன்படி, அடுத்த டி20 உலகக்கோப்பை இந்தியா, இலங்கை, ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், வங்கதேசம், இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, அமெரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், நியூசிலாந்து, அயர்லாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் நேரடியாக தகுதி பெற்றுள்ளது. சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியது மற்றும் ஐ.சி.சி. டி20 தரவரிசை அடிப்படையில் இந்த அணிகள் நேரடியாக அடுத்த டி20 உலகக்கோப்பைக்கு தகுதி பெற்றுள்ளது.
TEAMS QUALIFIED FOR THE T20I WORLD CUP IN 2026 SO FAR. 🏆
— Johns. (@CricCrazyJohns) June 17, 2024
India, Sri Lanka, Australia, Afghanistan, Bangladesh, England, South Africa, USA, West Indies, New Zealand, Ireland, Pakistan.
- 8 more teams will join through qualifiers. pic.twitter.com/lOuNCLJbF1
மேலே கூறிய 12 அணிகளுடன் மேலும் 8 அணிகள் பங்கேற்க உள்ளனர். அவர்கள் தகுதிச்சுற்றுப் போட்டியில் ஆடி உலகக்கோப்பைக்கு தகுதி பெறுவார்கள். அடுத்த டி20 உலகக்கோப்பை இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற உள்ளது.
இன்ப அதிர்ச்சி தந்த அமெரிக்கா:
இதில், ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக அமைந்திருப்பது அமெரிக்கா அடுத்த டி20 உலகக்கோப்பைக்கு நேரடியாக தகுதி பெற்றிருப்பதே ஆகும். டி20 உலகக்கோப்பையை முதன் முதலாக நடத்தும் வாய்ப்பை பெற்ற அமெரிக்க அணி, இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான், அயர்லாந்து என வலுவான அணிகள் இருந்த பிரிவில் இடம்பெற்றிருந்தது.
லீக் சுற்றிலே வெளியேறும் என்று எதிர்பார்க்கப்பட்ட அமெரிக்கா முதல் போட்டியில் கனடாவை அதிரடியாக வீழ்த்தியது. அடுத்த போட்டியில் பாகிஸ்தானை சூப்பர் ஓவரில் வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்றது. அயர்லாந்துடனான போட்டி மழையால் கைவிடப்பட இந்திய அணியுடன் இணைந்து சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறி அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தது. அமெரிக்க வீரர்களின் ஆட்டமும் அனைவரையும் திரும்பி பார்க்க வைக்கும் வகையில் சிறப்பாகவே இந்த தொடரில் இருந்து வருகிறது.
அடுத்த டி20 உலகக்கோப்பைக்கு நேரடி தகுதி பெற்ற அணிகளில் இலங்கை, அயர்லாந்து, பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: Pakistan: ”ஒற்றுமையே இல்லை.. இப்படி பார்த்ததே இல்லை..” பாகிஸ்தான் டீமை கழுவி ஊற்றிய பயிற்சியாளர்
மேலும் படிக்க: "பாபர் அசாம் தகுதியற்றவர்" இந்திய முன்னாள் வீரர் சேவாக் ஆவேசம் - ஏன் அப்படி சொன்னார்?