CWG 2022 Wrestling: காமன்வெல்த் மல்யுத்த போட்டியில் இந்தியாவிற்கு முதல் வெள்ளி வென்ற அன்ஷூ மாலிக்
காமன்வெல்த் மல்யுத்தத்தில் மகளிருக்கான 57 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் அன்ஷூ மாலிக் இறுதிப் போட்டியில் விளையாடினார்.
காமன்வெல்த் போட்டிகளில் இன்று மல்யுத்த போட்டிகள் தொடங்குகின்றன. இதில் இந்தியா சார்பில் இன்று ஆடவர் பிரிவில் பஜ்ரங் புனியா(65 கிலோ), தீபக் புனியா(86 கிலோ), ஆகியோர் இறுதிப் போட்டிக்கு முன்னேறினர். மகளிர் பிரிவில் சாக்ஷி மாலிக்(62 கிலோ), அன்ஷூ மாலிக் (57கிலோ) ஆகியோர் இறுதிப் போட்டிக்கு முன்னேறினர்.
இந்நிலையில் முதலில் மகளிருக்கான 57 கிலோ எடைப்பிரிவு இறுதிப் போட்டியில் அன்ஷூ மாலிக் நைஜீரியாவின் ஒடுயான்யோவை எதிர்த்து விளையாடினார். இந்தப் போட்டியில் நைஜீரியா வீராங்கனை முதலில் வேகமாக இரண்டு புள்ளிகளை எடுத்தார். அதன்பின்னர் இந்திய வீராங்கனை அன்ஷூ மாலிக் புள்ளிகளை எடுக்க முயற்சி செய்தார்.
News Flash: Silver medal for Anshu Malik
— India_AllSports (@India_AllSports) August 5, 2022
Anshu lost to 2 time reigning CWG Champion Odunayo Adekuoroye of Nigeria 4-7 in Final.
👉 Anshu tried her best but the tall Nigerian was much better today.
👉 Anshu had won her earlier 2 rounds within a minute. #CWG2020 pic.twitter.com/JUAmEMrybE
எனினும் நைஜீரியா வீராங்கனை சிறப்பாக செயல்பட்டு புள்ளிகளை பெற்றார். இதன்காரணமாக நைஜீரியா வீராங்கனை 6-4 என்ற கணக்கில் போட்டியை வென்றார். அத்துடன் அன்ஷூ மாலிக் வெள்ளிப்பதக்கம் வென்றார்.
முன்னதாக ஆடவருக்கான 125 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் மோஹித் அரையிறுதிக்கு முன்னேறியிருந்தார். இவர் அரையிறுதிப் போட்டியில் கனடா வீரர் அமரவீர் தேசாயை எதிர்த்து விளையாடினார். இந்தப் போட்டியில் கனடா வீரர் அமரவீர் தேசாய் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதன்காரணமாக அவர் 12-2 என்ற கணக்கில் போட்டியை வென்றார். அரையிறுதியில் தோல்வி அடைந்ததன் மூலம் மோஹித் வெண்கலப் பதக்க போட்டியில் சண்டை செய்ய உள்ளார். அதேபோல் மகளிருக்கான 68 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் திவ்யா காக்கரன் காலிறுதிச் சுற்றில் தோல்வி அடைந்தார். இவர் ரெபிசார்ஜ் ரவுண்டில் வெற்றி பெற்று தற்போது வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில் விளையாட உள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்