CWG Table Tennis : பதக்கங்களால் புகழ்சேர்க்கும் வீரர்கள்..டேபிள் டென்னிஸில் வெள்ளி.. வென்ற சரத்கமல்-சத்தியன் இணை
CWG Table Tennis : காமன்வெல்த் போட்டியில் இந்திய அணி ஆண்கள் இரட்டையர் பிரிவில் வெள்ளிப்பதக்கம் வென்று அசத்தியுள்ளது.
இந்தியாவின் டேபிள் டென்னிசின் தவிர்க்க முடியாத வீரராக வலம் வருபவர் சரத்கமல். நடப்பு காமன்வெல்த் தொடரில் இந்தியாவிற்கு சரத்கமல் உள்ளிட்ட வீரர்கள் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில், இன்று ஆண்கள் இரட்டையர் பிரிவில் தங்கப்பதக்கத்தை வெல்வதற்கான போட்டியில் இந்தியாவின் சரத்கமல்- ஞானசேகரன் ஜோடி, இங்கிலாந்தின் ட்ரிங்கால்பால் மற்றும் பிட்ச்போர்ட் ஜோடியுடன் மோதியது.
And its a Silver medal for Sharath Kamal & Sathiyan Gnanasekaran
— India_AllSports (@India_AllSports) August 7, 2022
The Indian pair go down fighting to WR 10 English pair 2-3 in Final.
👉 In last CWG edition, it was the same result with Sharath & Sathiyan losing to them 2-3 in Final #CWG2022 #CWGwithIAS pic.twitter.com/OOtukbIsZW
இந்த போட்டியில் இந்திய அணியினருக்கும், இங்கிலாந்து அணியினருக்கும் இடையே கடும் போட்டி நிலவியது.. மிகவும் கடுமையாக நடைபெற்ற போட்டியில் இரு அணி வீரர்கள் தாக்குதல் ஆட்டத்தை நடத்தினர். இதனால், போட்டி 2-2 என்ற கணக்கில் முடிவடைந்து பதக்கத்தை வெல்வதற்கான இறுதி செட் நடைபெற்றது.
Sharath Kamal & Sathiyan Gnanasekaran on the medal podium after winning Silver medal in Men's Doubles ❤️ #CWG2022 #CWGwithIAS pic.twitter.com/Z36ug4zgug
— India_AllSports (@India_AllSports) August 7, 2022
இந்த இறுதி செட்டில் இந்திய வீரர்கள் போராட்ட ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும், இங்கிலாந்து வீரர்கள் சிறப்பாக ஆடியதால் அவர்கள் வென்றனர். இதனால், இங்கிலாந்து வீரர்கள் வெற்றி பெற்று பதக்கத்தை வென்றனர். இந்திய வீரர்கள் சரத்கமலும், சத்தியனும் வெள்ளிப்பதக்கத்தை வென்றனர்.
CWG IND vs Aus: காமன்வெல்த் கிரிக்கெட் வரலாற்றில் முதல் ஃபைனல்! தங்கம் வெல்லுமா இந்தியா?
2010ம் ஆண்டு முதல் காமன்வெல்த் போட்டியில் ஆடும் சரத்கமலுக்கு இரட்டையர் பிரிவில் மட்டும் வெல்லும் இது 4வது பதக்கம் ஆகும்.
மேலும் படிக்க : CWG 2022 : டேபிள் டென்னிஸில் பதக்க வேட்டை நடத்துமா இந்தியா...? சாதிப்பாரா சரத்கமல்...?
மேலும் படிக்க : Amit Panghal : பதக்கங்களில் தங்க மழை பொழியும் இந்தியா.. குத்துச்சண்டையில் தங்கம் வென்று அசத்திய அமித் பங்கால்..
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்