CWG Medal Tally 2022: சரசரவென குவியும் பதக்கம்! காமன்வெல்த்தில் கலக்கும் இந்தியா! முழு பட்டியல்!!
காமன்வெல்த் போட்டியின் 8வது நாள் முடிவில் பதக்க பட்டியலில் முதலிடத்தில் எந்த நாடு உள்ளது..? இந்தியாவிற்கு எத்தனையாவது இடம் ? என்பதை கீழே காணலாம்.
காமன்வெல்த் போட்டியின் 8வது நாளில் இந்தியாவிற்கு சிறந்த நாளாக அமைந்தது. நேற்றைய நாளில் மட்டும் 7 பதக்கங்களை கைப்பற்றி அசத்தியது.
காமன்வெல்த் தொடரின் மல்யுத்த பிரிவுகளுக்கான போட்டிகள் நேற்று தொடங்கியது. இதில் ஆடவருக்கான 65 கிலோ எடைப்பிரிவு இறுதிப் போட்டியில் பஜ்ரங் புனியா கனடாவின் லாச்லன் மெக்நீலை தோற்கடித்து தங்கம் வென்றார். பெண்களுக்கான 62 கிலோ எடைப்பிரிவு இறுதிப் போட்டியில் மாலிக் கனடாவின் அனா கோடினெஸ் கோன்சாலஸை தோற்கடித்து தங்க பதக்கத்தை வென்றார். பின்னர் ஆடவருக்கான 86 கிலோ எடைப்பிரிவு இறுதிப் போட்டியில் பாகிஸ்தானின் முகமது இனாமிடம் தீபக் புனியா வெற்றி பெற்று மல்யுத்த போட்டியில் இந்தியாவிற்கு 3வது தங்கத்தை பெற்று கொடுத்தார்.
பெண்களுக்கான 57 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் அன்ஷு மாலிக் நைஜீரியாவின் ஒடுனாயோ ஃபோலாசேடிடம் தோல்வியடைந்து வெள்ளிப் பதக்கத்தையும், திவ்யா கக்ரன் (பெண்கள் 68 கிலோ) மற்றும் மோஹித் கிரேவால் (ஆண்கள் 125 கிலோ) ஆகியோர் தலா ஒரு வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர். இந்திய பேட்மிண்டன் நட்சத்திரம் பி.வி.சிந்து பெண்கள் ஒற்றையர் காலிறுதியிலும், கிடாம்பி ஸ்ரீகாந்த் மற்றும் லக்ஷ்யா சென் ஆடவர் ஒற்றையர் காலிறுதியிலும் நுழைந்துள்ளனர்.
இதன் மூலம் காமன்வெல்த் விளையாட்டு 2022 தொடரில் இந்திய அணி இதுவரை 26 பதக்கங்களை பெற்றுள்ளது. இந்த நிலையில், காமன்வெல்த் போட்டியின் 8வது நாள் முடிவில் பதக்க பட்டியலில் முதலிடத்தில் எந்த நாடு உள்ளது..? இந்தியாவிற்கு எத்தனையாவது இடம் ? என்பதை கீழே காணலாம்.
ரேங் | நாடுகள் | தங்கம் | வெள்ளி | வெண்கலம் | மொத்தம் |
1 | ஆஸ்திரேலியா | 50 | 44 | 46 | 140 |
2 | இங்கிலாந்து | 47 | 46 | 38 | 131 |
3 | கனடா | 19 | 24 | 24 | 67 |
4 | நியூசிலாந்து | 17 | 12 | 12 | 41 |
5 | இந்தியா | 9 | 8 | 9 | 26 |
6 | ஸ்காட்லாந்து | 8 | 8 | 19 | 35 |
7 | தென்னாப்பிரிக்கா | 7 | 7 | 8 | 22 |
8 | நைஜீரியா | 7 | 3 | 6 | 16 |
9 | வெல்ஸ் | 4 | 5 | 10 | 19 |
10 | மலேசியா | 4 | 4 | 3 | 11 |
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்