Commonwealth Games 2022 Day 8: ஒரே நாளில் 7 பதக்கம்.. மல்யுத்தத்தில் தில்லாய் நின்று தங்கம் வென்ற சிங்கங்கள்! முழு விவரம்!
காமன்வெல்த் தொடரில் ஆடவருக்கான 65 கிலோ எடைப்பிரிவு இறுதிப் போட்டியில் பஜ்ரங் புனியா கனடாவின் லாச்லன் மெக்நீலை தோற்கடித்து தங்கம் வென்றார்.

காமன்வெல்த் தொடரின் மல்யுத்த பிரிவுகளுக்கான போட்டிகள் நேற்று தொடங்கியது. இதில் இந்தியா சார்பில் நேற்று ஆடவர் பிரிவில் பஜ்ரங் புனியா(65 கிலோ), தீபக் புனியா(86 கிலோ), ஆகியோர் இறுதிப் போட்டிக்கு முன்னேறினர். மகளிர் பிரிவில் சாக்ஷி மாலிக்(62 கிலோ), அன்ஷூ மாலிக் (57கிலோ) ஆகியோர் இறுதிப் போட்டிக்கு முன்னேறினர்.
1st GOLD medal of the day folks 😍
Wrestling: Bajrang Punia wins Gold medal (65kg) after beating Lachlan McNeil 9-2 in Final.
👉 Bajrang did it in style: Won 1st 2 bouts by pinning opponents & Semis bout 10-0.
👉 Its 2nd consecutive CWG Gold medal for Bajrang. #CWG2020 pic.twitter.com/lfgrM8Hjtr— India_AllSports (@India_AllSports) August 5, 2022
அதற்கான போட்டிகளுக்கு ஆடவருக்கான 65 கிலோ எடைப்பிரிவு இறுதிப் போட்டியில் பஜ்ரங் புனியா கனடாவின் லாச்லன் மெக்நீலை தோற்கடித்து தங்கம் வென்றார். பெண்களுக்கான 62 கிலோ எடைப்பிரிவு இறுதிப் போட்டியில் மாலிக் கனடாவின் அனா கோடினெஸ் கோன்சாலஸை தோற்கடித்து தங்க பதக்கத்தை வென்றார். பின்னர் ஆடவருக்கான 86 கிலோ எடைப்பிரிவு இறுதிப் போட்டியில் பாகிஸ்தானின் முகமது இனாமிடம் தீபக் புனியா வெற்றி பெற்று மல்யுத்த போட்டியில் இந்தியாவிற்கு 3வது தங்கத்தை பெற்று கொடுத்தார்.
News Flash: Silver medal for Anshu Malik
— India_AllSports (@India_AllSports) August 5, 2022
Anshu lost to 2 time reigning CWG Champion Odunayo Adekuoroye of Nigeria 4-7 in Final.
👉 Anshu tried her best but the tall Nigerian was much better today.
👉 Anshu had won her earlier 2 rounds within a minute. #CWG2020 pic.twitter.com/JUAmEMrybE
முன்னதாக, பெண்களுக்கான 57 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் அன்ஷு மாலிக் நைஜீரியாவின் ஒடுனாயோ ஃபோலாசேடிடம் தோல்வியடைந்து வெள்ளிப் பதக்கத்தையும், திவ்யா கக்ரன் (பெண்கள் 68 கிலோ) மற்றும் மோஹித் கிரேவால் (ஆண்கள் 125 கிலோ) ஆகியோர் தலா ஒரு வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர். இந்திய பேட்மிண்டன் நட்சத்திரம் பி.வி.சிந்து பெண்கள் ஒற்றையர் காலிறுதியிலும், கிடாம்பி ஸ்ரீகாந்த் மற்றும் லக்ஷ்யா சென் ஆடவர் ஒற்றையர் காலிறுதியிலும் நுழைந்துள்ளனர்.
பாரா டேபிள் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவு டேபிள் டென்னிஸ் பிரிவில் பவினாபென் பட்டேல் 3-5 என்ற கணக்கில் இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். டேபிள் டென்னிஸில், மகளிர் ஒற்றையர் பிரிவு காலிறுதிச் சுற்றில் மனிகா பத்ரா தோல்வியடைந்தார். இருப்பினும், ஆடவர் ஒற்றையர் பிரிவில் அசந்தா ஷரத் கமல் உட்பட மூன்று இந்திய ஆண் டேபிள் டென்னிஸ் வீரர்கள் கால் இறுதிக்குள் நுழைந்து அசத்தினர்.
#Badminton Update 🚨
— SAI Media (@Media_SAI) August 5, 2022
Round of 16: Women's Singles@Pvsindhu1 wins 21-10, 21-9bagainst Kobugabe (Uganda) and marches into to Quarterfinals🏸
All the best Champ 👍#Cheer4India#India4CWG2022 pic.twitter.com/LTokVZ79Hf
நட்சத்திர ஓட்டப்பந்தய வீராங்கனை ஹிமா தாஸ் தனது பெண்களுக்கான 200 மீட்டர் அரையிறுதியில் மூன்றாவது இடத்தைப் பிடித்து இறுதிப் போட்டிக்கு தகுதிபெறும் வாய்ப்பை இழந்தார். அதேபோல், இந்திய மகளிர் ஹாக்கி அணி அரையிறுதியில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வியடைந்து அதிர்ச்சி அளித்தது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

