CWG 2022 Badminton: காமன்வெல்த் பேட்மிண்டன் காலிறுதி சுற்றுக்கு முன்னேறி அசத்திய சிந்து, ஸ்ரீகாந்த்!
காமன்வெல்த் பேட்மிண்டன் போட்டிகளில் பி.வி.சிந்து, ஸ்ரீகாந்த் காலிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.
![CWG 2022 Badminton: காமன்வெல்த் பேட்மிண்டன் காலிறுதி சுற்றுக்கு முன்னேறி அசத்திய சிந்து, ஸ்ரீகாந்த்! Commonwealth Games 2022 Badminton P.V.Sindhu and Kidabmi Srikanth reach Quarterfinals in respective Singles event at CWG 2022 CWG 2022 Badminton: காமன்வெல்த் பேட்மிண்டன் காலிறுதி சுற்றுக்கு முன்னேறி அசத்திய சிந்து, ஸ்ரீகாந்த்!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/08/05/5ea9d41128ba57971cd5b90240d2e9151659705418_original.png?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
காமன்வெல்த் போட்டிகளில் முதல் குழு பேட்மிண்டன் போட்டிகள் நடைபெற்றன. அதில் இந்திய அணி இறுதிப் போட்டி முன்னேறியது. இறுதிப் போட்டியில் இந்திய அணி சிங்கப்பூர் அணியிடம் தோல்வி அடைந்து வெள்ளிப்பதக்கம் வென்றது. நேற்று முதல் ஒற்றையர், இரட்டையர் பிரிவு போட்டிகள் தொடங்கின. அதில் மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் பி.வி.சிந்து மாலதீவுகள் வீராங்கனை ஃபாத்திமாத் அப்துல் ரசாகை எதிர்த்து விளையாடினார். அந்தப் போட்டியை 21-4,21-10 என்ற கணக்கில் வென்று இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார்.
இந்நிலையில் இன்று நடைபெற்ற இரண்டாவது சுற்று போட்டியில் பி.வி.சிந்து உகாண்டா நாட்டின் ஹூசினா கோபுகாபவேயை எதிர்த்து விளையாடினார். இந்தப் போட்டியில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய பி.வி.சிந்து முதல் கேமை 21-10 என்ற கணக்கில் வென்றார். அதன்பின்னர் இரண்டாவது கேமையும் 21-9 என்ற கணக்கில் வென்றார். இதன்மூலம் மகளிர் ஒற்றையர் பிரிவில் காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
#Badminton Update 🚨
— SAI Media (@Media_SAI) August 5, 2022
Round of 16: Women's Singles@Pvsindhu1 wins 21-10, 21-9bagainst Kobugabe (Uganda) and marches into to Quarterfinals🏸
All the best Champ 👍#Cheer4India#India4CWG2022 pic.twitter.com/LTokVZ79Hf
முன்னதாக ஆடவர் ஒற்றையர் பிரிவு போட்டியில் இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த் இரண்டாவது சுற்றில் இலங்கையின் அபேவிக்ரமாவை எதிர்த்து விளையாடினார். இந்தப் போட்டியில் இந்திய வீரர் ஸ்ரீகாந்த் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். முதல் கேமை 21-9 என்ற கணக்கில் எளிதாக வென்றார். அதன்பின்னர் இரண்டாவது கேமையும் 21-12 என்ற கணக்கில் வென்றார். மேலும் இரண்டாவது சுற்றில் வெற்றி பெற்று காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறி அசத்தினார்.
அதேபோல் மகளிர் இரட்டையர் பிரிவில் த்ரீஷா-காய்த்ரி இணை மோரிசியஸ் நாட்டைச் சேர்ந்த ஜெமிமா-கணேஷா ஜோடியை எதிர்த்து விளையாடியது. இந்தப் போட்டியில் சிறப்பாக விளையாடிய இந்தியாவின் த்ரீஷா-காய்தரி ஜோடி 21-2,21-4 என்ற கணக்கில் வென்றது. அத்துடன் இந்த ஜோடி காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறி அசத்தியுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)