Chess Olympiad 2022: விழிப்புணர்வுக்காக பறக்கும் விமானத்தில் செஸ் விளையாடிய அரசு பள்ளி மாணவர்கள்!
Chess Olympiad 2022: 150 அரசு பள்ளி மாணவர்கள் பறக்கும் விமானத்தில் செஸ் விளையாடினர்.
44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நாளை மாமல்லபுரத்தில் தொடங்க இருக்கிறது. இதற்காக மாநிலம் முழுவதும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. பல்வேறு மாவட்டஙகளிலும், பேருந்தில் செஸ் போட்டிகள், பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான செஸ் போட்டிகள் உள்ளிட்ட பல்வேறு கலைநிகழ்ச்சிகள் விழிப்புணர்வுக்காக மேற்கொள்ளப்பட்டன.
இந்நிலையில், மாவட்ட அளவில் நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும், விழிப்புணர்வு நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சென்னையில் இருந்து பெங்களூரூ செல்லும் விமானத்தில் செஸ் விளையாட ஏற்பாடு செய்யப்பட்டது.
இதற்காக செஸ் ஒலிம்பியாட் விழிப்புணர்வு செய்தி இடம்பெற்ற பிரத்யேக விமானத்தில் அரசு பள்ளி மாணவர்கள் 150 பேர், வானில் விமானம் செல்லும்போதே செஸ் விளையாடி அசத்தினர். இந்த போட்டியில் வெற்றி பெற்றது அவர்களுக்கு மகிழ்ச்சியையும், புது உத்வேகத்தையும் அளித்திருக்கும்.
150 underprivileged children of government schools who have won in chess games were given the opportunity to fly. The students played chess onboard a special aircraft branded with the #ChessOlympiad mascot. pic.twitter.com/9WF5rChOWE
— International Chess Federation (@FIDE_chess) July 27, 2022
இதுகுறித்து எம்.எல்.ஏ. உதயநிதி ஸ்டாலின் தன் டிவிட்டர் பக்கத்தில், “ செஸ் ஒலிம்பியாட் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த மாவட்ட அளவிலான சதுரங்கப் போட்டியில் வென்ற அரசு பள்ளி மாணவர்கள் சென்னை-பெங்களூரு விமானத்தில் பறந்துகொண்டே செஸ் விளையாடும் சிறப்பு விமான பயணத்தை இன்று தொடங்கி வைத்தோம்.” என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.
#ChessOlympiad2022 குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த மாவட்ட அளவிலான சதுரங்கப் போட்டியில் வென்ற அரசு பள்ளி மாணவர்கள் சென்னை-பெங்களூரு விமானத்தில் பறந்துகொண்டே செஸ் விளையாடும் சிறப்பு விமான பயணத்தை இன்று தொடங்கி வைத்தோம். @TThenarasu @thamoanbarasan @Anbil_Mahesh @SMeyyanathan pic.twitter.com/F6rHF8VcL3
— Udhay (@Udhaystalin) July 27, 2022
இந்த நிகழ்ச்சியில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் அமைச்சர் தா.மோ. அன்பரசன் மற்றும் விளையாட்டு மற்றும் இளைஞர்நலன் அமைச்சர் மெய்யநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்நிலையில்,நாளை தொடங்க இருகும் செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் குறித்த ஏற்பாடுகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்