Chess Olympiad Closing Ceremony LIVE: செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழா வெற்றிகரமாக நிறைவு
Chess Olympiad 2022 Closing Ceremony LIVE: செஸ் ஒலிம்பியாட் போட்டிகளின் நிறைவு விழா தொடர்பான உடனுக்குடன் தகவல்கள்...
LIVE
Background
44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் சென்னையில் கடந்த 28ஆம் தேதி வண்ணமையான தொடக்க விழாவுடன் தொடங்கியது. தொடக்க விழாவில் பிரதமர் மோடி பங்கேற்று செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை தொடங்கி வைத்தார். மொத்தம் 11 சுற்றுகள் கொண்ட செஸ் ஒலிம்பியாட் தொடர் இன்றுடன் நிறைவு பெறுகிறது. இதைத் தொடர்ந்து இன்று மாலை 6 மணிக்கு சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நிறைவு விழா நடைபெற உள்ளது.
இதற்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு அரசு தீவிரமாக செய்துள்ளது. 11 சுற்றுகள் கொண்ட செஸ் ஒலிம்பியாட் தொடரில்ஆடவர் பிரிவில் உஸ்பெஸ்கிஸ்தான் அணி தங்கம் வென்றுள்ளது. மகளிர் பிரிவில் உக்ரைன் அணி தங்கப்பதக்கம் வென்றுள்ளது. இரண்டு பிரிவிலும் வெண்கலப் பதக்கம் வென்று இந்திய அணி அசத்தியுள்ளது.
செஸ் ஒலிம்பியாட்டின் ஆடவர் பிரிவில், விளையாடிய 11 போட்டிகளில் 8 போட்டிகளில் வெற்றியும் 3 போட்டிகளில் ட்ராவும் செய்து 19 புள்ளிகளுடன் முதலிடத்தைப் பிடித்த உஸ்பெஸ்கிஸ்தான் அணி தங்கப்பதக்கம் வென்றது.
11 போட்டிகளில் விளையாடி 9 போட்டிகளில் வெற்றியும் 1 தோல்வி மற்றும் 1 ட்ரா செய்து 19 புள்ளிகளைப் பெற்ற அர்மீனியா அணி வெள்ளிப்பதக்கத்தை வென்றது.
11 போட்டிகளில் விளையாடிய இந்தியா பி அணி 8 வெற்றி, 1 தோல்வி மற்றும் 2 ட்ரா என்ற கணக்கில் 18 புள்ளிகளைப் பெற்று வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளது.
இந்தியா ஏ அணி 11 போட்டிகளில் விளையாடி 7 வெற்றி 1 தோல்வி மற்றும் 3 ட்ரா ஆகியவற்றுடன் 17 புள்ளிகள் பெற்று பட்டியலில் நான்காம் இடத்தைப் பெற்றுள்ளது.
இந்தியா பி அணியில் இடம்பெற்றுள்ள ப்ரக்ஞானந்தா, குகேஷ், ரௌனக், அதிபன் மற்றும் நிஹல் ஆகியோர் விளையாடினர். 8 போட்டிகளில் தொடர்ந்து வெற்றிபெற்ற குகேஷ், நேற்றைய போட்டியில் தோல்வியடைந்தார். இதனையடுத்து 9/11 என்ற கணக்கில் அவர் இந்திய அணிக்கு பதக்கத்தை உறுதி செய்தார்.
Chess Olympiad Closing Ceremony LIVE: 44வது செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழா முடிவடைந்தது..
44வது செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழா தற்போது முடிவடைந்தது
Chess Olympiad Closing Ceremony LIVE: செஸ் ஒலிம்பியாட் கொடியை ஹங்கேரி நாட்டிற்கு அளித்தது இந்தியா
45வது செஸ் ஒலிம்பியாட் போட்டியை நடத்த உள்ள ஹங்கேரி நாட்டிடம் இந்தியா செஸ் கொடியை அளித்தது.
Chess Olympiad Closing Ceremony LIVE: செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழாவில் முதலமச்சர் ஸ்டாலின் உரை
செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் உரையாற்றினார்.
Chess Olympiad Closing Ceremony LIVE: செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழாவில் பரிசளிப்பு விழா நிறைவு
செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழாவில் பரிசளிப்பு விழா நிறைவு பெற்றுள்ளது.
Chess Olympiad Closing Ceremony LIVE: செஸ் ஒலிம்பியாட் போர்ட் 3 பிரிவில் பிரக்ஞானந்தாவிற்கு வெண்கலம்
செஸ் ஒலிம்பியாட் போர்ட் 3-ல் சிறப்பாக விளையாடிய பிரக்ஞானந்தாவிற்கு வெண்கலப் பதக்கம் வழங்கப்பட்டுள்ளது.