அரபு நாடே அசந்து நிற்க வைத்த சிஎஸ்கே என்ட்ரி - 'வந்துட்டோம்னு சொல்லு' வீடியோ
ஐபிஎல் தொடரில் பங்கேற்கபதற்காக தோனி,ரெய்னா உள்ளிட்ட வீரர்கள் கொண்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணி யுஏஇ சென்று அடைந்துள்ளது.
2021ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் தொடர் கொரோனா பரவல் காரணமாக பாதியில் நிறுத்தி வைக்கப்பட்டது. இந்தச் சூழலில் பாதியில் நிறுத்தப்பட்ட ஐபிஎல் தொடர் வரும் செப்டம்பர் மாதம் முதல் தொடங்க உள்ளது. இதில் பங்கேற்பதற்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மீண்டும் யுஏஇ சென்றது. கடந்த வியாழக்கிழமை இவர்கள் சென்னையில் இருந்து விமானம் மூலம் யுஏஇ சென்றனர். அதில் தோனி,ரெய்னா உள்ளிட்ட முன்னணி வீரர்களும் அணியுடன் சென்றனர்.
இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் ட்விட்டர் பக்கம் சென்னை அணி யுஏஇ சென்றுள்ளது தொடர்பாக வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் சென்னை அணி சென்னையில் இருந்து கிளம்பியது முதல் யுஏஇ சென்று ஹோட்டலில் தனிமைப்படுத்தப்பட்டது வரை சில காட்சிகள் இடம்பெற்றுள்ளன. அத்துடன் இந்த காட்சிகளுக்கு பின்னால் சென்னை சூப்பர் கிங்ஸூக்கு பெரிய விசில் அடிங்க பாடலும் வருகிறது. இந்த வீடியோவை தற்போது வரை பலரும் பார்த்து ரசித்து வருகின்றனர்.
Super fam making an Anbu Dubai entry 💛#StartTheWhistles #WhistlePodu #Yellove 🦁 pic.twitter.com/Zml7EKMlWz
— Chennai Super Kings - Mask P😷du Whistle P🥳du! (@ChennaiIPL) August 14, 2021
அத்துடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ரசிகர்கள் பலர் இதை தங்களின் ஸ்டேட்டஸாக ஷேர் செய்து வருகின்றனர். ஐபிஎல் தொடரின் இரண்டாவது பாதியில் சென்னை அணி தன்னுடைய முதல் போட்டியில் செப்டம்பர் 19ஆம் தேதி மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்கிறது. அதன்பின்னர் பெங்களூரு(செப்டம்பர் 24), கொல்கத்தா நைட் ரைடர்ஸ்(செப்டம்பர் 26), சன்ரைசர்ஸ்(செப்டம்பர் 30), ராஜஸ்தான்(அக்டோபர் 2), டெல்லி(அக்டோபர் 4), பஞ்சாப் கிங்ஸ்(அக்டோபர் 7) ஆகிய போட்டிகளில் பங்கேற்க உள்ளது.
Andha arabic kadal P-orom 😍
— Chennai Super Kings - Mask P😷du Whistle P🥳du! (@ChennaiIPL) July 25, 2021
The dates are here, bring on the Whistles!#IPL2021 #WhistlePodu #Yellove 🦁💛 pic.twitter.com/JTp0NvXNbD
ஐபிஎல் தொடரின் முதல் பாதி சென்னை அணிக்கு நன்றாகவே அமைந்தது. இதுவரை 7 போட்டிகளில் விளையாடி உள்ள சென்னை அணி 5 வெற்றி மற்றும் 2 தோல்விகள் பெற்று இரண்டாவது இடத்தில் உள்ளது. இதேபோல் இரண்டாவது பாதியில் சிறப்பாக செயல்பட்டு இம்முறை கோப்பையை வெல்ல வேண்டும் என்பதே ரசிகர்கள் எண்ணமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: ஹாட்-ட்ரிக் மிஸ் செய்த சிராஜ்... தொடரும் ஆண்டர்சன் மேஜிக்... இரண்டாம் நாள் அப்டேட்ஸ்!