Chennai Formula 4 : “ஃபார்முலா 4 கார் பந்தயம் நடத்த எந்த தடையும் இல்லை” நீதிமன்ற தீர்ப்பால் உதயநிதி ஹாப்பி அண்ணாச்சி..!
சென்னையில் நாளை மறுநாள் நடைபெறும் ஃபார்முலா 4 கார் பந்தயம் நடத்த தடை விதிக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு அளித்துள்ளது.
தமிழ்நாடு அரசின் விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் தனியார் கார் பந்தய அமைப்பு இணைந்து சென்னையில் 2 நாட்களுக்கு வரலாற்று சிறப்பு மிக்க கார் பந்தய விளையாட்டை நடத்துகிறது. இதை நடத்தவிடக்கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில், விதிகளுக்கு உட்படே பந்தயம் நடத்தவிருப்பதால், அதனை தடை செய்ய முடியாது என குறிப்பிட்டு சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சென்னை தீவுத்திடலை சுற்றி சனிக்கிழமை இரவில் தொடங்கவிருக்கும் இந்த போட்டியை விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி தொடங்கி வைக்கிறார். இதற்காக உலகம் முழுவதும் இருந்து கார் பந்தய வீரர்கள் சென்னை வந்துள்ளனர். அவர்களுடன் குழுவாக புகைப்படம் எடுத்துக்கொண்ட அமைச்சர் உதயநிதி, தெற்காசியாவில் நடைபெறும் முதல் இரவு கார் பந்தயத்தில் அவர்கள் வெற்றி பெற வாழ்த்துத் தெரிவிப்பதாகவும் தனது சமூக வலைதளம் மூலம் உதயநிதி தெரிவித்துள்ளார்.
இது உதயநிதி ஸ்டாலினின் கனவு விளையாட்டு போட்டி என கூறப்படுகிறது. இதற்காக பல்வேறு ஏற்பாடுகளையும் முன்னெடுப்புகளையும் செய்து வந்த அவர், உயர்நீதிமன்றத்தில் இந்த தீர்ப்பால் மகிழ்ச்சியடைந்துள்ளார்