மேலும் அறிய

Rashid Khan: ஆப்கானிஸ்தான் தொடரிலிருந்து விலகிய ஆஸ்திரேலியா.. கடுப்பில் ரஷீத் கான் அதிரடி முடிவு

ஆப்கானிஸ்தான் உடனான தொடரை ஆஸ்திரேலியா ரத்து செய்த நிலையில், பிக்பேஸ் லீக்கிலிருந்து விலகுவதாக ரஷீத் கான் உள்ளிட்டோர் அறிவித்துள்ளனர்.

ஆப்கானிஸ்தானில் கடந்த 2021ம் ஆண்டு தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றியதை தொடர்ந்து அந்த நாட்டில் ஏராளமான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. தலிபான்கள் ஆட்சியில் முன்பு இருந்தபோது விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் மீண்டும் அமல்படுத்தப்பட்டு வருகிறது. இதனால், அந்த நாட்டு மக்கள் மிகுந்த சிரமத்தை சந்தித்து வருகின்றனர். குறிப்பாக, பெண்களுக்கு எதிராக அளவுக்கதிகமாக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருவது உலக நாடுகள் மத்தியில் வேதனையை ஏற்படுத்தி வருகிறது.

ஆஸ்திரேலியா விலகல்:

இந்தநிலையில், ஆப்கானிஸ்தானில் ஆண் மருத்துவர்கள் பெண்களுக்கு சிகிச்சை அளிக்கக்கூடாது என தலிபான்கள் அரசு அண்மையில் புதிய உத்தரவை வெளியிட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், ஐக்கிய அரபு அமீரகத்தில் ஆப்கானிஸ்தான் உடன் விளையாட இருந்த ஒருநாள் தொடரிலிருந்து விலகுவதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. இதுதொடர்பான அறிக்கையில், பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளின் கல்வி, வேலை வாய்ப்புகள் மட்டுமின்றி, அவர்கள் பூங்காக்கள் மற்றும் ஜிம்களை அணுகுவதற்கான அவர்களின் சுதந்திரம் மீதான, தலிபான்களின் சமீபத்திய அறிவிப்பைத் தொடர்ந்து தொடரிலிருந்து விலகுவதாக ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

ஆப்கான். வீரர்கள் அதிருப்தி:

இதற்கு ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி வீரர்கள் கடும் அதிருப்தி மற்றும் கண்டனம் தெரிவித்துள்ளனர். அந்நாட்டை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் நவீன் உல்-ஹக் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ஆஸ்திரேலியாவின் செயல் குழந்தைத்தனமாக உள்ளதாக தெரிவித்துள்ளார். இதேபோன்று, முஜீப் உர் ரகுமான் மற்றும் நட்சத்திர வீரர் ரஷீத் கான் ஆகியோரும் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

”பிக் பாஸ் லீக்கில் பங்கேற்க மாட்டேன்”

ரஷீத் கான் வெளியிட்டுள்ள டிவிட்டர் அறிக்கையில், ”மார்ச் மாதம் எங்களுடன் நடைபெற இருந்த தொடரிலிருந்து ஆஸ்திரேலிய அணி விலகியிருப்பது மிகுந்த ஏமாற்றத்தை அளித்துள்ளது. எனது நாட்டை அடையாளப்படுத்தும் விதமாக நான் விளையாடியதை பெரிய கவுரமாக கருதுகிறேன். தொடர்ந்து நாங்கள் சர்வதேச அரங்கில் நல்ல முன்னேற்றத்தை கண்டுள்ளோம். எங்களது இந்த பயணத்தில் ஆஸ்திரேலியாவின் முடிவு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தான் உடன் விளையாடுவது உங்களுக்கு சவுகரியமாக இல்லை என்றால், ஆஸ்திரேலியாவின் பிக்பேஸ் தொடரில் விளையாடி உங்களுக்கு  அசவுகரியத்தை ஏற்படுத்த நான் விரும்பவில்லை. எனவே, அந்த தொடரில் எதிர்காலத்தில் பங்கேற்பது குறித்து தீவிரமாக ஆலோசிக்க உள்ளேன்” என, ரஷீத் கான் பதிவிட்டுள்ளார். அவரை தொடர்ந்து ஆப்கானிஸ்தானை சேர்ந்த மற்ற வீரர்களும், பிக்பேஸ் லீக்கில் இருந்து விலகுவது குறித்து ஆலோசிக்க உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

T20 World Cup 2026: ஈடன் கார்டனில் சோகம்: இங்கிலாந்து வீரர் அடித்த 'சிக்ஸர்' பெண்ணின் கண்ணை பதம் பார்த்த பந்து..
T20 World Cup 2026: ஈடன் கார்டனில் சோகம்: இங்கிலாந்து வீரர் அடித்த 'சிக்ஸர்' பெண்ணின் கண்ணை பதம் பார்த்த பந்து..
ஐபிஎல்-ல் மிரட்ட காத்திருக்கும் நம்ம நடராஜன்! வெறித்தனமாக பந்துவீசும் யார்க்கர் கிங் - செம மாஸான வீடியோ
ஐபிஎல்-ல் மிரட்ட காத்திருக்கும் நம்ம நடராஜன்! வெறித்தனமாக பந்துவீசும் யார்க்கர் கிங் - செம மாஸான வீடியோ
IND vs PAK: இந்தியாவிடம் தோற்ற பாகிஸ்தான்.. டிவியை அடித்து உடைத்த ரசிகர்!
IND vs PAK: இந்தியாவிடம் தோற்ற பாகிஸ்தான்.. டிவியை அடித்து உடைத்த ரசிகர்!
IND Vs Pak: இன்னும் முடியல..! அடுத்து ரவுண்டுக்கு ரெடி ஆகும் இந்தியா..! எட்டிப்பிடிக்குமா பாக்.,? எப்போது? எப்படி?
IND Vs Pak: இன்னும் முடியல..! அடுத்து ரவுண்டுக்கு ரெடி ஆகும் இந்தியா..! எட்டிப்பிடிக்குமா பாக்.,? எப்போது? எப்படி?
ABP Premium

வீடியோ

Trisha condemns Nainar Nagendran | ``என் பெயரை இழுக்காதீங்க
1L Milk in 1 Bucket Water | 1 லிட்டர் பாலில் 1 வாளி தண்ணீர்!மதிய உணவு திட்டத்தில் அவலம் வைரல் வீடியோ
Kim Ju Ae North Korea | `13 வயதில் அதிபராகும் மகள்' Kim Jong Un மாஸ்டர் ப்ளான்.. யார் இந்த Kim Ju Ae?
Rajinikanth Fan Mahashivratri |ரஜினியை சிவனாக வழிபடும் ரசிகர்மஹா சிவராத்திரி கொண்டாட்டம்வைரல் வீடியோ
Shivaji Krishnamoorthy Arrest | 3 ஆண்டுகள் சிறை!சிவாஜி கிருஷ்ணமூர்த்தி கைது?ஆளுநர் குறித்து அவதூறு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
வைகோ பரபரப்பு ; திமுக கூட்டணியில் காங்கிரஸின் 'அந்த' கோரிக்கைக்கு இடமில்லை
மம
திருச்செந்தூர்-தூத்துக்குடி ரயில் பாதை: 18 கிமீ தூரம் போதும்! மக்களின் நீண்ட நாள் கனவு நனவாகுமா?
திருச்செந்தூர்-தூத்துக்குடி ரயில் பாதை: 18 கிமீ தூரம் போதும்! மக்களின் நீண்ட நாள் கனவு நனவாகுமா?
Gold Rate: தங்கம் விலை பவுனுக்கு ரூ.80 ஆயிரமாக குறையும்? வெள்ளி? ரஷ்யா, பிரிக்ஸ் காரணமா? நிபுணர்கள் சொல்வது என்ன?
Gold Rate: தங்கம் விலை பவுனுக்கு ரூ.80 ஆயிரமாக குறையும்? வெள்ளி? ரஷ்யா, பிரிக்ஸ் காரணமா? நிபுணர்கள் சொல்வது என்ன?
Ramdas Athawale: லிஸ்ட்டிலே இல்லாத அத்வாலே.. தமிழக தேர்தலில் போட்டி! இவ்ளோ காரணம் இருக்கா?
Ramdas Athawale: லிஸ்ட்டிலே இல்லாத அத்வாலே.. தமிழக தேர்தலில் போட்டி! இவ்ளோ காரணம் இருக்கா?
ஒரே சமயத்தில் 13 துறைகளுக்கு அமைச்சர்..! சுதந்திர போராட்ட தியாகி டூ மினிஸ்டர் - யார் இந்த விவி சுவாமிநாதன்?
ஒரே சமயத்தில் 13 துறைகளுக்கு அமைச்சர்..! சுதந்திர போராட்ட தியாகி டூ மினிஸ்டர் - யார் இந்த விவி சுவாமிநாதன்?
யார் இந்த நீதிபதி செம்மல்? - அவருக்கு ஆதரவாகக் களமிறங்கிய விழுப்புரம் எம்பி ரவிக்குமார் !
யார் இந்த நீதிபதி செம்மல்? - அவருக்கு ஆதரவாகக் களமிறங்கிய விழுப்புரம் எம்பி ரவிக்குமார்
தேர்தல் செலவுக்காக அரசின் கஜானாவை காலியாக்கும் திமுக? - டிடிவி தினகரன் என்ன சொல்கிறார்?
தேர்தல் செலவுக்காக அரசின் கஜானாவை காலியாக்கும் திமுக? - டிடிவி தினகரன் என்ன சொல்கிறார்?
10th 12th Exam 2026: தேர்வு நேரத்தில் புதிய மாற்றங்கள்! 10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு! வினாத்தாள் பாதுகாப்பு தீவிரம்!
10th 12th Exam 2026: தேர்வு நேரத்தில் புதிய மாற்றங்கள்! 10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு! வினாத்தாள் பாதுகாப்பு தீவிரம்!
Embed widget