Chess Olympiad : மிகவும் பரபரப்புக்கு இடையே இன்று நடைபெறும் ஒன்பதாவது போட்டி! வெற்றி யாருக்கு?
செஸ் ஒலிம்பியாட் போட்டியில் 9-வது சுற்று இன்று நடைபெறுகிறது. இதில் இந்தியா B அணியினர் தரவரிசை பட்டியலில் 2-வது இடத்தில் உள்ளனர்.
44 வது செஸ் ஒலிம்பியாட் போட்டி மாமல்லபுரத்தில் நடந்து வருகிறது. நேற்று நடைபெற்ற 8-வது சுற்று ஆட்டத்தில், ஓபன் பிரிவில் இந்தியா 1-வது அணி, வலுவான அர்மேனியாவை எதிர்கொண்டது. இதில் இந்தியா 1-வது அணி 1.5-2.5 என்ற புள்ளி கணக்கில் அர்மேனியாவிடம் வீழ்ந்தது. இந்திய அணியில் விதித் குஜராத்தி, அர்ஜூன் எரிகாசி, நாராயணன் ஆகியோர் தங்கள் ஆட்டங்களில் டிரா கண்டனர். மற்றொரு இந்திய வீரர் ஹரிகிருஷ்ணா-அர்மேனியாவின் சர்ஜிசியன் கேப்ரியல் இடையிலான ஆட்டம் நீண்ட நேரம் நீடித்தது. கருப்பு நிற காய்களுடன் ஆடிய ஹரிகிருஷ்ணா 102-வது காய் நகர்த்தலில் தோல்வியடைந்தார். இந்தியா பி பலம்வாய்ந்த அமெரிக்கா அணியை வீழ்த்தியது. இன்று 9 சுற்று போட்டி நடக்க உள்ளது.
9 வது சுற்று போட்டி விவரம்
ஓபன் பிரிவு
இந்தியா ஏ - பிரேசில்
இந்தியா பி - அஜர்பைஜன்
இந்தியா சி - பராகுவே
மகளிர் பிரிவு:
இந்தியா ஏ - போலந்து
இந்தியா பி - சுவிட்சர்லாந்து
இந்தியா சி - எஸ்டோனியா
நேற்றைய முடிவுகள்
இந்தியா "ஏ" பிரிபில்-- தோல்வி
ஹரிகிருஷ்ணன் -- தோல்வி
விதித் -- சமன்
எரிகைசி அர்ஜூன், சமன்
நாராயணன் -- சமன்
இந்தியா "பி" பிரிவில் வெற்றி
குகேஷ், வெற்றி
நிகல் சரின், சமன்
பிரக்ஞானந்தா, சமன்
சத்வாணி ரவுனக் வெற்றி
இந்தியா "சி" பிரிவில் தோல்வி
கங்குலி, தோல்வி
சேதுராமன், சமன்
குப்தா, தோல்விசமன்
கார்த்திகேயன் முரளி
இந்தியா மகளிர் "ஏ" பிரிவில் சமன்
கோனேரு ஹம்பி, சமன்
ஹரிக்கா தோரண வள்ளி, சமன்
வைஷாலி, சமன்
தானியா சச்தேவ் சமன்
இந்தியா மகளிர் "பி" பிரிவில் வெற்றி
வந்திகா அகர்வால், வெற்றி
பத்மினி ராவுட், வெற்றி
கோமேஷ் மேரி அண், சமன்
திவ்யா தேஷ்முக் வெற்றி
இந்தியா "சி" பிரிவில்
கர்வதே ஈஷா, சமன்
நந்திதா, தோல்வி சமன்
பிரத்யு ஷா போடா, தோல்வி
விஸ்வா வாசனவாலா, சமன்
செஸ் ஒலிம்பியாட் போட்டியில் 9-வது சுற்று இன்று நடைபெறுகிறது. இதில் இந்தியா B அணியினர் தரவரிசை பட்டியலில் 2-வது இடத்தில் உள்ளனர்.