Asian Wrestling Championships: ஆசிய மல்யுத்ததில் ஒரு தங்கம், 2 வெள்ளி உட்பட 5 பதக்கங்களை வென்று அசத்திய இந்திய வீரர்கள்..
ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய ஆடவர் அணி 5 பதக்கங்களை வென்று அசத்தியுள்ளது.
ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டிகள் மங்கோலியாவில் நடைபெற்றது. இதில் ஃப்ரீஸ்டையில் மல்யுத்த பிரிவில் இந்திய ஆடவர் வீரர்கள் பங்கேற்றனர். இன்று விளையாடிய 5 வீரர்களும் பதக்கங்களை வென்று அசத்தினர். ஆடவருக்கான 57 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் ரவிக்குமார் தாஹியா பங்கேற்றார். அவர் சிறப்பாக செயல்பட்டு இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். இறுதிப் போட்டியில் அவர் கஜகிஸ்தான் நாட்டின் ரக்காட் கல்சானை எதிர்த்து மல்யுத்தம் செய்தார்.
இந்தப் போட்டியை ரவிக்குமார் தாஹியா 12-2 என்ற கணக்கில் போட்டியை வென்றார். அத்துடன் தங்கப்பதக்கத்தையும் வென்று அசத்தினார். அத்துடன் தொடர்ச்சியாக மூன்று முறை ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற முதல் இந்திய வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார். 2020, 2021 மற்றும் 2022 ஆகிய மூன்று ஆண்டுகள் நடைபெற்ற ஆசிய சாம்பியன்ஷிப் தொடரில் இவர் தங்கப்பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.
No Indian had three 🥇 at Asian Championships until Tokyo silver medalist Ravi KUMAR 🇮🇳 did it by winning his third consecutive 🥇 in dominating fashion at 57kg.
— United World Wrestling (@wrestling) April 23, 2022
'20 New Delhi - 🥇
'21 Almaty - 🥇
'22 Ulaanbaatar - 🥇#WrestleUlaanbaatar pic.twitter.com/7JazvXq6mJ
அதன்பின்னர் ஆடவருக்கான 65 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் பஜ்ரங் புனியா பங்கேற்றார். இவரும் இந்த எடைப்பிரிவில் இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். இறுதிப் போட்டியில் அவர் ஈரான் நாட்டின் ரஹ்மான் மோசாவை எதிர்த்து மல்யுத்தம் செய்தார். அந்தப் போட்டியில் இரு வீரர்கள் சற்று சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இறுதியில் 3-1 என்ற கணக்கில் போராடி ஈரான் நாட்டின் ரஹ்மான் வெற்றி பெற்றார். இதன்காரணமாக பஜ்ரங் புனியா வெள்ளிப்பதக்கத்தை வென்றார்.
அதேபோல் 79 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் கவுரவ் பலியான் இறுதிப் போட்டிக்கு முன்னேறியிருந்தார். அவர் இறுதிப் போட்டியில் அவர் தோல்வி அடைந்தார். இதன்காரணமாக அவர் வெள்ளிப்பதக்கம் வென்று அசத்தினார். ஆடவருக்கான 70 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் நவீன் பங்கேற்றார். அவர் வெண்கலப்பதக்க போட்டிக்கு தகுதி பெற்றார். வெண்கலப்பதக்க போட்டியில் மங்கோலியா நாட்டின் என்குதுகியாவை எதிர்த்து மல்யுத்தம் செய்தார். அந்தப் போட்டியை 8-0 என்ற கணக்கில் நவீன் அசத்தலாக வென்றார். அத்துடன் வெண்கலப்பதக்கத்தையும் தட்டிச்சென்றார்.
2/2
— SAI Media (@Media_SAI) April 23, 2022
🥉#Naveen (70kg)
🥉#SatywartKadian (97kg)
Superb Effort 👏👏
Congratulations to all the Medalists 🙂
Keep going!! #IndianSports #Wrestling pic.twitter.com/FlndgbW8hL
மேலும் ஆடவருக்கான 97 கிலோ எடைப்பிரிவில் சத்யவார்த் கடியான் பங்கேற்றார். அவரும் வெண்கலப்பத்தக்கம் வென்று அசத்தினார். இதன்மூலம் ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் தொடரில் இந்திய ஆடவர் அணி ஒரு தங்கம் மற்றும் 2 வெள்ளி, 2 வெண்கலம் என மொத்தமாக 5 பதக்கங்களை வென்று அசத்தியுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்