மேலும் அறிய

Pak vs Ned LIVE Score: 81 ரன்கள் வித்தியாசத்தில் நெதர்லாந்தை வீழ்த்தி தொடரை வெற்றியோடு தொடங்கிய பாகிஸ்தான்

ODI World Cup 2023 PAK vs NED LIVE Score: உலகக் கோப்பையில் இன்று நடைபெறும் பாகிஸ்தான் - நெதர்லாந்து அணிகளுக்கு இடையிலான போட்டி குறித்த லைவ் அப்டேட்டுகளுக்கு ஏபிபியுடன் இணைந்து இருங்கள்.

LIVE

Key Events
Pak vs Ned LIVE Score: 81 ரன்கள் வித்தியாசத்தில் நெதர்லாந்தை வீழ்த்தி தொடரை வெற்றியோடு தொடங்கிய பாகிஸ்தான்

Background

ODI World Cup 2023 PAK vs NED LIVE Score: உலகக் கோப்பையில் ஐதராபாத்தில் இன்று நடைபெறும் இரண்டாவது லீக் போட்டியில்,  பாகிஸ்தான்-நெதர்லாந்து அணிகள் மோத உள்ளன.

பாகிஸ்தான் - நெதர்லாந்து மோதல்:

சர்வதேச கிரிக்கெட் சம்மேளனத்தின் ஒருநாள் உலகக் கோப்பை நேற்று உற்சாகமாக தொடங்கியது.  நவம்பர் 19ம் தேதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் இந்த போட்டிகள் நடைபெற உள்ளன. தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான இங்கிலாந்தை வீழ்த்தி,  கடந்த உலகக்கோப்பையின் இறுதிப்போட்டியில் பெற்ற தோல்விக்கு நியூசிலாந்து பழிதீர்த்தது. இந்நிலையில் இன்று நடைபெறும் போட்டியில் வலுவான பாகிஸ்தானை, வளர்ந்து வரும் அணியான நெதர்லாந்து எதிர்கொள்ள உள்ளது. தொடரை வெற்றிகரமாக தொடங்க பாகிஸ்தான் முனைகிறது. அதேநேரம், அவர்களுக்கு கடும் நெருக்கடி கொடுக்க  முழு திறமையயும் வெளிப்படுத்த நெதர்லாந்து தீவிரம் காட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஐதராபாத்தில் நடைபெற உள்ள இந்த போட்டி, இந்திய நேரப்படி பிற்பகல் 2 மணியளவில் தொடங்குகிறது. போட்டியின் நேரலையை தொலைக்காட்சியில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் அலைவரிசையிலும், ஒடிடியில் ஹாட்-ஸ்டார் செயலியிலும் ரசிகர்கள் கண்டு களிக்கலாம்.

பலம் & பலவீனங்கள்:

ஆசியக் கோப்பையில் லீக் சுற்றில் வெளியேறியதோடு, உலகக் கோப்பையில் இரண்டு பயிற்சி ஆட்டங்களிலும் பாகிஸ்தான் தோல்வியை சந்தித்துள்ளது. இதனால், இன்றைய போட்டியில் வென்று வெற்றிப் பாதைக்கு திரும்ப பாகிஸ்தான் ஆர்வம் காட்டி வருகிறது. பேட்டிங்கில் பாபர் அசாம், ஃபகார் ஜமான் மற்றும் முகமது ர்ஸ்வான் ஆகிய நட்சத்திர வீரர்கள் நம்பிக்கையளிக்க, பந்துவீச்சில் ஷாஹின் ஷா அஃப்ரிடி தலைமையிலான வேகப்பந்து விச்சு யூனிட் நெதர்லாந்தை மிரட்ட காத்திருக்கிறது. இதனால், இந்த போட்டி அவர்களுக்கு கடுமையானதாகவே இருக்கக் கூடும். சர்வதேச அணியில் போதிய அனுபவம் இல்லாத நெதர்லாந்து அணி, இதுவரை பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடிய 6 ஒருநாள் போட்டிகளிலும் தோல்வியை மட்டுமே சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மைதான விவரம்:

ஐதராபாத் ராஜீவ் காந்தி மைதானத்தில் நடைபெற்ற இரண்டு பயிற்சி ஆட்டங்களிலும், ஆடுகளம் பேட்டிங்கிற்கு சாதகமாகவே இருந்தது. இன்றைய போட்டியிலும் அதே நிலைமை நிலவக் கூடும். டாஸ் வெல்லும் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்வது சாதகமாக கருதப்படுகிறது. கடைசியாக விளையாடிய 7 ஒருநாள் போட்டிகளிலும், முதலில் பேட்டிங் செய்த அணியே வெற்றிக்கான வாய்ப்புகள் அதிகம் இருந்துள்ளது.

உத்தேச அணி:

பாகிஸ்தான்:

ஃபகார் ஜமான், இமாம்-உல்-ஹக், பாபர் ஆசம் (கேப்டன்), முகமது ரிஸ்வான், சவுத் ஷகீல், இப்திகார் அகமது, ஷதாப் கான், முகமது நவாஸ், ஹசன் அலி, ஷாஹீன் அப்ரிடி, ஹாரிஸ் ரவுஃப்

நெதர்லாந்து:

மேக்ஸ் ஓ'டவுட், விக்ரம்ஜித் சிங், வெஸ்லி பாரேசி, பாஸ் டி லீட், தேஜா நிடமானுரு, ஸ்காட் எட்வர்ட்ஸ், ஷாரிஸ் அஹ்மத், லோகன் வான் பீக், ரோலோஃப் வான் டெர் மெர்வே, ஆர்யன் தத், பால் வான் மீகெரென்

வெற்றி வாய்ப்பு: போட்டியில் பாகிஸ்தான் அணி வெல்லவே அதிக வாய்ப்பு

21:43 PM (IST)  •  06 Oct 2023

World Cup 2023 Pak vs Ned LIVE Score: புள்ளிப்பட்டியலில் பாகிஸ்தானின் ரன்ரேட்..!

நெதர்லாந்தின் 10 விக்கெட்டுகளைக் கைப்பற்றி 81 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ள பாகிஸ்தான் அணி புள்ளிப்பட்டியலில் +1.620 என்ற ரன்ரேட்டைப் பெற்றுள்ளது. 

21:39 PM (IST)  •  06 Oct 2023

World Cup 2023 Pak vs Ned LIVE Score: 53 பவுண்டரிகள்.. 7 சிக்ஸர்கள்..

இரு அணிகளும் இணைந்து மொத்தம் 53 பவுண்டரிகளும் 7 சிக்ஸர்களும் விளாசியுள்ளன. இதில் பாகிஸ்தான் 33 பவுண்டரிகள், 3 சிக்ஸர்களும்  நெதர்லாந்து 20 பவுண்டரிகள் 4 சிக்ஸர்களும் விளாசியுள்ளன. 

21:33 PM (IST)  •  06 Oct 2023

World Cup 2023 Pak vs Ned LIVE Score: இரண்டு அணிகளும் ஆல்-அவுட்..!

உலகக் கோப்பை 2023 தொடங்கி இரண்டு போட்டிகள் தான் முடிந்திருந்தாலும், இதில் பாகிஸ்தான் நெதர்லாந்து அணிகளுக்கு இடையிலான இந்த போட்டியில்தான் இரண்டு அணிகளும் ஆல்-அவுட் ஆகியுள்ளன. 

21:31 PM (IST)  •  06 Oct 2023

World Cup 2023 Pak vs Ned LIVE Score: மேன் ஆஃப்த மேட்ச்..!

இந்த போட்டியில் சிறப்பாக பேட்டிங் செய்து இக்கட்டான சூழலில் பாகிஸ்தானை வலுவான நிலைக்கு கொண்டு சென்ற சவ்த் ஷக்கீல்க்கு ப்ளேயர் ஆஃப்த மேட்ச் விருது கொடுக்கப்பட்டது. இவர் 52 பந்தில் 9 பவுண்டரி ஒரு சிக்ஸர் உட்பட் 68 ரன்கள் குவித்திருந்தார். 

21:25 PM (IST)  •  06 Oct 2023

World Cup 2023 Pak vs Ned LIVE Score: தொடரை வெற்றியோடு தொடங்கிய பாகிஸ்தான்

நெதர்லாந்து அணியை 81 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியதன் மூலம் உலகக் கோப்பை 2023 தொடரை பாகிஸ்தான் அணி வெற்றியுடன் தொடங்கியுள்ளது. 

Load More
New Update
Advertisement

தலைப்பு செய்திகள்

"சோலா பூரி ட்ரை பண்ணுங்க" அரசியலுக்கு ரெஸ்ட்.. ஓட்டலில் பேமிலியுடன் ரிலாக்ஸ் செய்த ராகுல் காந்தி!
Chennai Food Festival: வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
"அப்பாயிண்ட்மெண்ட் லெட்டர் ரெடி.. வந்து வாங்கிட்டு போங்க" மோடி கொடுக்கப்போகும் சர்ப்ரைஸ்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"சோலா பூரி ட்ரை பண்ணுங்க" அரசியலுக்கு ரெஸ்ட்.. ஓட்டலில் பேமிலியுடன் ரிலாக்ஸ் செய்த ராகுல் காந்தி!
Chennai Food Festival: வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
"அப்பாயிண்ட்மெண்ட் லெட்டர் ரெடி.. வந்து வாங்கிட்டு போங்க" மோடி கொடுக்கப்போகும் சர்ப்ரைஸ்!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
Syria War: கொல்லப்பட்ட 3.5 லட்ச மக்கள் ; சிரியாவில் என்ன நடக்கிறது, யார் காரணம் ? தற்போதைய நிலை என்ன?
கொல்லப்பட்ட 3.5 லட்ச மக்கள் ; சிரியாவில் என்ன நடக்கிறது, யார் காரணம் ? தற்போதைய நிலை என்ன?
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
CM Stalin: நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.!  அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.! அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
Embed widget