Asian Champions Trophy 2023: ஹாக்கியில் இந்தியாவை பாடாய்படுத்தும் பாகிஸ்தான்... நேருக்குநேர் எத்தனை முறை? அதிக வெற்றி யார்? முழு விவரம்!
இதுவரை இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் எத்தனை முறை நேருக்கு நேர் மோதியுள்ளது என்ற பட்டியலை கீழே காணலாம்.
ஆசியன் ஹாக்கி சாம்பியன் டிராபி 2023 போட்டியானது தற்போது சென்னையில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது. நேற்று தென் கொரியாவிற்கு எதிரான போட்டியில் இந்திய ஹாக்கி அணி அரையிறுதி போட்டிக்கு முன்னேறியது. அதேபோல், சீனாவை வீழ்த்திய பாகிஸ்தான் 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதி வாய்ப்பை தக்கவைத்துக் கொண்டது.
இந்தநிலையில், உலகமே எதிர்பார்க்கும் இந்தியாவும் பாகிஸ்தானும் மோதும் கடைசி ரவுண்ட் ராபின் லீக் போட்டி நாளை நடைபெற இருக்கிறது. இந்த போட்டி பாகிஸ்தான் அணிக்கு வாழ்வா? சாவா? போட்டியாக இருக்கும்.
இந்தநிலையில், இதுவரை இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் எத்தனை முறை நேருக்குநேர் மோதியுள்ளது என்ற பட்டியலை கீழே காணலாம்.
- கடந்த 1956 ம் ஆண்டு மெல்போர்னில் நடந்த ஒலிம்பிக் இறுதிப் போட்டியில் இந்தியாவும் பாகிஸ்தான் நேருக்கு நேர் மோதியது. இதுவே ஹாக்கியில் இரு அணிகளும் மோதிய முதல் சிறப்புமிக்க போட்டியாகும். இந்த போட்டியில் இந்திய அணியே வெற்றிபெற்றது.
- கடந்த 1960 ம் ஆண்டு இந்தியாவும், பாகிஸ்தானும் ரோமில் நடந்த விளையாட்டுப் போட்டியில் மோதியது. அதில், பாகிஸ்தான் அணி வெற்றிபெற்றது.
- அதன்பிறகு, இந்தியாவும் பாகிஸ்தானும் ஏழு முறை ஒலிம்பிக்கில் நேருக்கு நேர் மோதியுள்ளன. பாகிஸ்தான் நான்கு முறையும், இந்தியா இரண்டு முறையும் வென்றுள்ளன. ஒரு போட்டி டிராவில் முடிந்தது.
- ஹாக்கியில் இந்திய அணி இதுவரை எட்டு முறையும், பாகிஸ்தான் அணி மூன்று முறையும் ஒலிம்பிக் தங்கப் பதக்கத்தை வென்றுள்ளது. ஒரு போட்டியில் முடிவில்லை.
- ஆசிய விளையாட்டுப் போட்டி ஹாக்கியில் இதுவரை பாகிஸ்தான் 8 தங்கப் பதக்கங்களையும், இந்தியா 3 தங்கப் பதக்கங்களையும் பெற்றுள்ளன.
- 1978 மற்றும் 2006 ம் ஆண்டுகளில் இந்தியாவும் பாகிஸ்தானும் உள்நாடு மற்றும் வெளிநாட்டு என பல இருதரப்பு டெஸ்ட் தொடர்களை விளையாடியது. மொத்தமாக விளையாடப்பட்ட எட்டு தொடர்களில் 6ல் பாகிஸ்தான் வெற்றி பெற்றது. 1986ம் ஆண்டு இந்தியா வென்றது. ஒரு தொடர் டிரா ஆனது.
நேருக்கு நேர்:
இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஹாக்கி அணிகள் 1956 மெல்போர்ன் ஒலிம்பிக்ஸ் இறுதிப் போட்டியில் முதல் சந்திப்பிலிருந்து 178 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில், 82 வெற்றிகளுடன் பாகிஸ்தான் முதலிடத்தில் உள்ளது. இந்தியா 64 முறை வெற்றி பெற்றுள்ளது. மீதமுள்ள 32 போட்டிகள் டிராவில் முடிந்துள்ளன.
அட்டவணையாக கீழே...
போட்டி தொடர் | போட்டிகள் | இந்தியா | பாகிஸ்தான் | டிரா |
---|---|---|---|---|
டெஸ்ட் தொடர் | 52 | 16 | 25 | 11 |
ஒலிம்பிக் விளையாட்டுகள் | 7 | 2 | 4 | 1 |
உலகக் கோப்பை | 5 | 3 | 2 | 0 |
சாம்பியன்ஸ் டிராபி | 19 | 7 | 12 | 0 |
ஆசிய விளையாட்டு | 15 | 4 | 8 | 3 |
ஆசிய கோப்பை | 9 | 3 | 5 | 1 |
ஆசிய சாம்பியன்ஸ் டிராபி | 10 | 6 | 2 | 2 |
காமன்வெல்த் விளையாட்டு | 3 | 1 | 1 | 1 |
FIH ஹாக்கி உலக லீக் | 3 | 2 | 0 | 1 |
ஆப்ரோ-ஆசிய விளையாட்டுகள் | 2 | 2 | 0 | 0 |
மற்றவைகள் | 53 | 18 | 23 | 12 |
மொத்தம் | 178 | 64 | 82 | 32 |