Asian Champions Trophy: தோல்வியே இல்லாத கீரிடம்.. வெற்றி நடையில் இந்திய அணி.. இறுதிப் போட்டிவரை கடந்து வந்த பாதை..!
Asian Champions Trophy: இந்த ஆண்டு நடைபெற்று வரும் ஆசிய சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி கடந்து வந்த பாதை குறித்து இந்த தொகுப்பில் காணலாம்.
ஆசிய சாம்பியன்ஸ் டிராபி இந்தியாவில் முதல் முறையாக நடத்தபடுகிறது. 2023-ஆம் ஆண்டுக்கான ஆசிய கோப்பை சாம்பியன்ஸ் டிராஃபி தொடர் சென்னையில் உள்ள ராதாகிருஷ்ணன் மைதானத்தில் கடந்த 3-ஆம் தேதி தமிழ்நாடு அரசின் சிறப்பு ஏற்பாட்டில் மிகவும் பிரமாண்டமாக தொடங்கியது. இந்த தொடரில் நடப்புச் சாம்பியன் சௌத் கொரியா, இந்தியா, பாகிஸ்தான், ஜப்பான், சீனா மற்றும் மலேசியா அணிகள் களமிறங்கின.
இந்த தொடரில் மிகவும் பலமான அணிகளாக கருதப்பட்டவை இந்தியா, பாகிஸ்தான், நடப்புச் சாம்பியன் சௌத் கொரியா மற்றும் ஜப்பான் அணிகள்தான். சீனாவை பொறுத்தவரையில் ஏதாவது ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அந்த அணியால் ஒரி வெற்றியைக் கூட பெறமுடியவில்லை. இந்திய அணியைப் பொறுத்தவரையில் இந்த தொடரில் இதுவரை அதாவது லீக் போட்டிகள் மற்றும் அரையிறுதிப் போட்டி என மொத்தம் இந்திய அணி களமிறங்கிய 6 போட்டிகளில் 5 போட்டிகளில் வெற்றியும் ஒரு போட்டியில் டிராவும் அடைந்துள்ளது. மேலும் இந்த தொடரில் இந்திய அணியிடம் தோல்வி அடையாத அணி என ஒன்று எதுவும் இல்லை. அதாவது இந்த தொடரில் களமிறங்கிய 5 அணிகளும் இந்திய அணியிடம் தோல்வி அடைந்துள்ளது.
இந்த தொடரில் இந்திய அணி தனது முதல் போட்டியில், சீனாவை எதிர்கொண்டது. அதில் இந்திய அணி 7-2 என்ற கணக்கில் சீனாவை வீழ்த்தி இந்த சீசனை மிகவும் பிரமாண்ட வெற்றியுடன் தொடங்கியது. அதேபோல் இந்திய அணி தனது இரண்டாவது போட்டியில் ஜப்பானை எதிர்கொண்டது. இந்த போட்டியில் 1-1 என்ற கணக்கில் போட்டி டிராவில் முடிந்தது. (ஜப்பான் அணியை அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி 5-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது) அதேபோல் இந்திய அணி தனது மூன்றாவது போட்டியில் மலேசியாவை எதிர்கொண்டது. இந்த போட்டியில் இந்திய அணி 5-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.
இதையடுத்து இந்திய அணி தனது அடுத்த போட்டியில் சௌத் கொரியவை எதிர் கொண்டது. இந்த போட்டியில் இந்திய அணி 3-2 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் வெற்றி பெற்ற பின்னர் இந்திய அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றது. இதையடுத்து லீக் போட்டியில் கடைசி போட்டியாக இந்திய அணி பாகிஸ்தானை எதிர்கொண்டது. மிகவும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்திய அணி பாகிஸ்தானை எதிர்கொண்டது. அந்த போட்டியில் இந்திய அணி 5-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் பாகிஸ்தான் அணி பெற்ற தோல்வியால் அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தது. பாகிஸ்தான் அணி இந்திய அணியை வென்றதால், ஜப்பான் அணி அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறியது. ஆனால் ஜப்பான் அணியை இந்திய அணி அரையிறுதிப் போட்டியில் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. இந்திய அணி இன்று அதாவது ஆகஸ்ட் 12-ஆம் தேதி, இறுதிப் போட்டியில் பலமான மலேசியாவை எதிர்கொள்கிறது.
இந்த தொடரில் இந்திய அணி மொத்தம் 20+5 என 25 கோல்கள் அடித்துள்ளது. இந்திய அணியை எதிர்த்து 5 கோல்கள் மட்டும்தான் அடிக்கப்பட்டுள்ளது. இன்றைய போட்டியைப் பொறுத்தவரையில் மலேசிய அணி இந்த தொடரில் இந்திய அணியுடனான போட்டியில் மட்டும் தோல்வியைச் சந்தித்தால் இந்தியாவை வீழ்த்த பல்வேறு யுக்திகளுடன் களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.