Asian Champions Trophy 2023: டாஃப் ஆஃப் த டேபிளுக்கு மல்லுக்கட்டும் இந்தியா - மலேசியா; இன்றைய போட்டி விபரங்கள் இதோ..!
2011ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் இந்த தொடரில் கடந்த ஆண்டு வரை மொத்தம் 6 சீசன்கள் நடைபெற்றுள்ளது.
2023ஆம் ஆண்டுக்கான ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கிப் போட்டி கடந்த 3ஆம் தேதி தொடங்கி சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்தியா, பாகிஸ்தா, மலேசியா, சௌத் கொரியா, சீனா, ஜப்பான் என மொத்தம் 6 அணிகள் களமிறங்கியுள்ளது. 2011ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் இந்த தொடரில் கடந்த ஆண்டு வரை மொத்தம் 6 சீசன்கள் நடைபெற்றுள்ளது. இதில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் தனித்தனியே இரண்டு முறை கோப்பையையும், ஒருமுறை இணைந்தும் கோப்பையை வென்றுள்ளது. இதனால் இந்தியா மற்றும் பாகிஸ்தான் கணக்கில் தலா மூன்று கோப்பைகள் உள்ளது. இது இல்லாமல், கடந்த முறை அதாவது, 2021ஆம் ஆண்டு சௌத் கொரியா அணி கோப்பையை வென்றது.
இந்நிலையில், ஆசிய சாம்பியன்ஸ் டிராபி கோப்பை இந்தியாவில் முதல் முறையாக நடைபெறுகிறது. தொடரை தமிழ்நாடு மாநில அரசு நடத்துகிறது. கடந்த 6 சீசன்களிலும் தொடரை நடத்திய நாடு கோப்பையை வென்றதாக வரலாறு இல்லை. அதனை இம்முறை பலமான இந்திய அணி முறியடிக்குமா என்பதை காத்திருந்திதான் பார்க்கவேண்டும்.
கடந்த மூன்றாம் தேதி தொடங்கிய இந்த போட்டி வரும் 12ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதில் ஏற்கனவே 6 அணிகளும் தலா 2 போட்டிகளில் விளையடிவிட்டன. இதனால் புள்ளிப்பட்டியலில் மலேசியா அணி இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று முதல் இடத்தில் உள்ளது. இதையடுத்து இந்திய அணி இரண்டாவது இடத்தில் உள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான போட்டி இன்று இரவு 8.30 மணிக்கு நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால் புள்ளிப்பட்டியலில் முதல் இடத்திற்குச் செல்லும். அதேபோல் தோல்வியைச் சந்திக்காத அணியாகவும் வலம் வரும்.
இன்று மொத்தம் மூன்று போட்டிகள் நடைபெறவுள்ளது. அதில் முதல் போட்டி மாலை 4 மணிக்கு சீனா மற்றும் கொரியா அணிகள் மோதுகின்றன. இதில் சீனா இன்னும் ஒரு வெற்றியைக் கூட பெறவில்லை என்பதால், இந்த போட்டி சீனாவுக்கு வாழ்வா சாவா போட்டியாக மாறியுள்ளது.
மாலை 6.15 மணிக்கு நடைபெறும் மற்றொரு போட்டியில் ஜப்பான் மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதவுள்ளன. இரு அணிகளும் ஒரே நிலையில்தான் உள்ளது. அதாவது, இரு அணிகளும் ஒரு வெற்றி ஒரு டிரா என புள்ளிப்பட்டியலில் 4வது மற்றும் 5வது இடத்தில் உள்ளது. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி முதல் வெற்றியை பதிவு செய்யும்.
ஆறு நாடுகள், மூன்று போட்டிகள் என அனைத்து போட்டிகளும் சென்னை எழும்பூரில் உள்ள ராதாகிருஷ்ணன் மைதானத்தில் நடைபெறவுள்ளது.