Asian Badminton : ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் ஆண்கள் இரட்டையர் பிரிவில் வரலாற்றில் முதன்முறையாக தங்கப்பதக்கம்! குவியும் வாழ்த்துக்கள்!
1965 ஆம் ஆண்டு லக்னோவில் நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் தாய்லாந்தின் சங்கோப் ரத்தனுசோர்னை வீழ்த்தியதன் மூலம் தங்கப் பதக்கத்தை வென்ற ஒரே இந்தியர் கன்னா ஆவார்.
ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்ற முதல் இந்திய ஆண்கள் இரட்டையர் ஜோடியாக சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி மற்றும் சிராக் ஷெட்டி வரலாறு படைத்தனர். ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற போட்டியில், அவர்கள் 58 ஆண்டுகாலமாக நடக்காத ஒன்றை நிகழ்த்திக் காட்டியுள்ளனர். தினேஷ் கண்ணாவுக்குப் பிறகு ஆசிய பேட்மிண்டன் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற முதல் இந்தியர்கள் என்ற பெயர் பெற்றுள்ளனர்.
52 ஆண்டுகளுக்கு பின் இந்தியாவுக்கு பதக்கம்
சனிக்கிழமையன்று நடந்த அரையிறுதி ஆட்டத்தின் நடுவே எதிர்த்து போட்டியிட்ட சீனர்கள் காயத்தால் விலகியதை அடுத்து, இறுதிப்போட்டிக்குள் முதன்முறையாக நுழைந்தனர். 52 ஆண்டுகளுக்குப் பிறகு கான்டினென்டல் போட்டியில் இந்தியாவின் முதல் ஆடவர் இரட்டையர் பதக்கம் பெறுவது இதுவே முதன்முறை. வெள்ளியன்று நடந்த காலிறுதியில் இந்தோனேசியாவின் முகமது அஹ்சன் மற்றும் ஹென்ட்ரா செட்டியவான் ஜோடியை 21-11 21-12 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தி வரலாற்று சிறப்புமிக்க அரையிறுதிக்கு ராங்கிரெட்டி மற்றும் ஷெட்டி தகுதி பெற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Proud of @satwiksairaj and @Shettychirag04 for scripting history by becoming the first Indian Men's Doubles pair to win the Badminton Asia Championships Title. Congratulations to them and wishing them the very best for their future endeavours. pic.twitter.com/i0mES2FuIL
— Narendra Modi (@narendramodi) April 30, 2023
கடைசி இரண்டு செட்டை வென்று சாதனை
இந்திய ஜோடி இறுதிப்போட்டியில் முதல் செட்டில் தோல்வியுற்ற நிலையில் அடுத்த இரண்டு செட்டில் அதிரடியாக வென்று கோப்பையைக் கைப்பற்றினர். மலேசியக் கூட்டணியான ஓங் யூ சின் மற்றும் தியோ ஈ யியை 21-16, 17-21, 19-21 வீழ்த்தினர். 1965 ஆம் ஆண்டு லக்னோவில் நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் தாய்லாந்தின் சங்கோப் ரத்தனுசோர்னை வீழ்த்தியதன் மூலம் தங்கப் பதக்கத்தை வென்ற ஒரே இந்தியர் கன்னா ஆவார். அதற்கிடையில் ஆசிய சாம்பியன்ஷிப்பில் ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் 1971 இல் திபு கோஷ் மற்றும் ராமன் கோஷ் ஜோடி வெண்கலப் பதக்கம் வென்றதே சிறந்ததாக இருந்தது.
குவியும் வாழ்த்துக்கள்
"பேட்மிண்டன் ஆசிய சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்ற முதல் இந்திய ஆண்கள் இரட்டையர் ஜோடியாக வரலாற்றை எழுதியதற்காக சாத்விக்சாய்ராஜ் மற்றும் சிராக் ஷெட்டிக்கு வாழ்த்துகள். அவர்களின் எதிர்கால முயற்சிகள் சிறப்பாக அமைய வாழ்த்துகிறேன்" என்று பிரதமர் மோடி ட்வீட் செய்துள்ளார். "இந்த ஜோடி இந்தியாவை பெருமைப்படுத்துகிறது!! ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் அரையிறுதியில் நுழைந்து 52 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த போட்டியில் நாட்டிற்காக பதக்கத்தை கொண்டு வந்த சாத்விக்-சிராக் அவர்களின் வரலாற்று சிறப்புமிக்க வெற்றிக்கு வாழ்த்துக்கள்" என்று அனுராக் தாக்கூர் ட்வீட் செய்துள்ளார்.
This DUO DOES INDIA PROUD!!
— Anurag Thakur (@ianuragthakur) April 28, 2023
Congratulations to Satwik-Chirag on their historic win as they enter the #BadmintonAsiaChampionships Semi Final and bring in a medal for the country in this tournament after 52 years.
New India, New Spirit!! pic.twitter.com/7aEXi1yhDj
மற்ற இந்தியர்கள் தோல்வி
பெண்கள் மற்றும் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் பி.வி.சிந்து மற்றும் எச்.எஸ்.பிரணாய் ஆகியோர் காலிறுதியில் தோல்வியடைந்தனர். இந்திய நட்சத்திர வீராங்கனை பிவி சிந்து, மகளிர் ஒற்றையர் பிரிவு காலிறுதிச் சுற்றில், இரண்டாம் நிலை வீராங்கனையான கொரியாவின் அன் சே யங்கிடம் தோல்வியடைந்து வெளியேறினார். மறுபுறம், இந்தியாவின் ஷட்லர் ஹெச்எஸ் பிரணாய், ஜப்பானின் காந்தா சுனேயாமாவிடம் காலிறுதியில் தோல்வியடைந்தார். கிடாம்பி ஸ்ரீகாந்த் 16வது சுற்றில் போட்டியிலிருந்து வெளியேறினார். நான்காம் நிலை வீரரான ஜப்பானிய கொடை நரோகாவிடம் ஸ்ரீகாந்த் தோல்வியடைந்தார்.