Andrew Symonds : ராய் என செல்லமாக அழைக்கப்பட்ட ஆண்ட்ரூ சைமண்ட்ஸ்.. அவரை பற்றி அறியாத சில தகவல்கள்..
ராய் என்று செல்லமாக அழைக்கப்பட்ட ஆஸ்திரேலியா முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் பற்றி பலரும் அறியாத தகவல்கள்:
ராய் என்று செல்லமாக அழைக்கப்பட்ட ஆஸ்திரேலியா முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் பற்றி பலரும் அறியாத தகவல்கள்:
ஆஸ்திரேலியா முன்னாள் கிரிக்கெட் வீர்ர ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் கார் விபத்தில் உயிரிழந்தார். ஆஸ்திரேலியா முன்னாள் கிரிக்கெட் வீரரான ஆண்ட்ரூ சைமண்ட்ஸ், நேற்று இரவு அவர் சென்றிருந்த கார் விபத்துக்குள்ளானது. விபத்து நடந்த இடத்திற்கு ஆம்புலன்ஸ் விரைந்து சென்றது. இருப்பினும் அவரை காப்பாற்ற முடியவில்லை.பேட்டிங், பவுலிங் மற்றும் பில்டிங்கில் சிறந்த விளங்கிய ஆல்ரவுண்டரான சைமண்ட்ஸ், தனது திறமையாலும், ஸ்டைலாலும் உலக அளவில் கிரிக்கெட் ரசிகர்களை கவர்ந்தவர். அவரை பற்றி பலரும் அறியாத 5 முக்கிய தகவல்கள்.
27 ஆண்டுகள் சாதனை:
சர்வதேச கிரிக்கெட் போட்டியில் அறிமுகமாவதற்கு முன்னரே மிகப்பெரிய சாதனையை படைத்தார் சைமண்ட்ஸ் . 1995 ஆம் ஆண்டு முதல் தர கிரிக்கெட் போட்டியில் 20 வயதேயான அவர், ஒரே இன்னிங்ஸில் 254 ரன்களை விளாசினார். அதில் ஒரே இன்னிங்ஸில் 16 சிக்சர்களை அடித்து, அதிக சிக்சர்களை ஒரே இன்னிங்சில் அடித்தவர் என்ற சாதனையை வைத்திருந்தார்.அதை கடந்த மாதம்தான் இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக் இச்சாதனையை முறியடித்தார்.
கம்பேக் : பலருக்கு முன்னுதாரணம்:
5 ஆண்டுகள் சரியான ஃபார்மில் இல்லாமல் இருந்த சைமண்ட்சுக்கு, 2003 ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் விளையாட வாய்ப்பு அளித்தது ஆஸ்திரேலியா. அப்போது விமர்சனங்கள் எழுந்தது.ஆனால் விமர்சனங்களை எல்லாம் தூக்கி எறிந்து பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் 126 பந்துகளில் 143 ரன்கள் அடித்து வியப்பில் ஆழ்த்தினார். அவரின் கம்பேக், பலருக்கும் முன்னுதாரணமாக இருந்தது. 2003ஆம் ஆண்டு மற்றும் 2007 ஆம் ஆண்டு என இரு உலகக் கோப்பையை வென்ற ஆஸ்திரேலிய அணியில் இடம் பெற்றிருந்தார்.
தொண்டு நிறுவனத்திற்காக மொட்டை அடித்தார்:
சைமண்ட்ஸுக்கு அவரது முடி ஒரு அடையாளமாக இருந்தது. ஆனால் கடந்த 2009 ஆம் ஆண்டு தொண்டு நிறுவனத்திற்கு நிதி திரட்டுவதற்காக மொட்டை அடித்துக் கொண்டார்.
அதிக ஊதியம் பெற்ற ஐபிஎல் வீரர்:
2008 ம் ஆண்டு தொடங்கப்பட்ட ஐபில் தொடரில் அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்டவர் சைமண்ட்ஸ். அப்போது 1.35 மில்லியன் டாலருக்கு சைமண்ட்ஸை ஹைதராபாத் டெக்கான் சார்ஜர்ஸ் அணி வாங்கியது. 2009 ஐபிஎல் தொடரில் 53 பந்துகளில் 117 ரன்கள் எடுத்து, டெக்கான் அணி சாம்பியன் பட்டம் பெறுவதற்கு முக்கிய காரணமாக இருந்தார். 2011ஆம் ஆண்டு கடைசியாக மும்பை அணிக்காக விளையாடினார்.
செல்லமாக ராய் என்ற அழைக்கப்பட்டார் :
சைமண்ட்ஸ் செல்லமாக அவரது ரசிகர்களால் ராய் என அழைக்கப்பட்டார். அவர் ஏன் ராய் என அழைக்கப்பட்டார் தெரியுமா? சைமண்ட்ஸ் சிறு வயதிலிருந்தே கூடைபந்து ரசிகராக இருந்தார். ஆஸ்திரேலியா கூடைபந்து ஜாம்பவான் லெராய் லாக்ஜீன்ஸ் போன்று இருப்பதன் காரணமாக அன்புடன் 'ராய்' என்று சைமண்ட்ஸ் அழைக்கப்பட்டார்.