Aadi Month 2023: ஆடி மாதம் எப்போது தொடக்கம்? ஆடி மாத பண்டிகைகள் என்னென்ன? எப்போது? - முழு விவரம்
Aadi Month Festival: ஆடி மாதத்தின் ஒவ்வொரு நாளிலும் ஆலய வழிபாடு செய்வது மிகுந்த பலன் அளிக்கும் என்பதால் ஆடி மாதத்தில் கோயில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும்.
தமிழ் மாதங்களில் ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு சிறப்பு ஆகும். அனைத்து மாதங்களும் கோயில்களில் வழிபடுவதற்கு ஒவ்வொரு சிறப்பை கொண்டுள்ளது. அந்த வகையில் ஆடி மாதம்(Aadi Month) மிகவும் தனித்துவமான சிறப்பு வாய்ந்தது ஆகும்.
ஆடி மாதம்:
அப்பேற்பட்ட ஆடி மாதம் நடப்பாண்டில் வரும் ஜூலை மாதம் 17-ந் தேதி தொடங்குகிறது. ஆடி மாதம் என்றாலே கோயில்களில் கூட்டம் அலைமோதும். குறிப்பாக, அம்மன் கோயிலில் ஆடி மாத கொண்டாட்டம் தனிச்சிறப்பாக இருக்கும். அடுத்த மாதம் 17-ந் தேதி தொடங்கும் ஆடி மாதம் ஆகஸ்ட் மாதம் 17-ந் தேதியுடன் முடிவடைகிறது(Aadi Month Start and End Date 2023).
ஆடி மாதத்தின் ஒவ்வொரு நாட்களுமே ஒவ்வொரு சிறப்பு வாய்ந்தது. வரப்போகும் ஆடி மாதத்தில் மிகவும் முக்கியமான தினங்களாக ஆடி செவ்வாய், ஆடி வெள்ளி, ஆடிப்பதினெட்டு, ஆடிப்பூரம், ஆடிப்பௌர்ணமி, ஆடி அமாவாசை, ஆடி தபசு, ஆடி கிருத்திகை மற்றும் ஆடிப்பெருக்கு கொண்டாடப்படுகிறது. இதில் ஒவ்வொரு நாளுமே ஒவ்வொரு சிறப்பு வாய்ந்தது ஆகும்.
ஆடி செவ்வாய்:
ஆடி மாதம் வரும் அனைத்து செவ்வாய் கிழமைகளும் மிகவும் சிறப்பு வாய்ந்தது. அன்றைய தினங்களை கோயில் வழிபாடு மேற்கொள்வது ஏராளமான பலன்களை தரும்.
ஆடி வெள்ளி:
ஆடி மாதத்தில் வரும் அனைத்து செவ்வாய்கிழமைகளை போல ஆடி மாதத்தில் வரும் அனைத்து வெள்ளிகிழமைகளும் மிகவும் சிறப்பு வாய்ந்தது ஆகும். அன்றைய தினங்களில் பக்தர்கள் கோயில்களில் குவிவது வழக்கம். குறிப்பாக, ஆடி மாத கடைசி வெள்ளிக்கிழமையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். ஆடி மாத வெள்ளிக்கிழமையில் கோயில்களில் கூழ் ஊற்றி பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்துவதும் வழக்கம்.
ஆடிப்பூரம்:
மிகவும் சிறப்பு வாய்ந்த நாள் ஆடிப்பூரம். ஆண்டாளுக்கு அர்ப்பணிக்கப்பட்ட நாளாக கருதப்படும் ஆடிப்பூரம் வரும் ஜூலை 22-ந் தேதி வழிபடப்பட உள்ளது.
ஆடிப்பெருக்கு:
ஆடி மாதத்திலே மிகப்பெரிய விழா ஆடிப்பெருக்கு ஆகும். ஆடிப்பெருக்கு நாளில் புதுமண தம்பதிகளுக்கு தாலிப்பிரித்து கோர்க்கும் நிகழ்வு நடைபெறும். மேலும், கோயில்களுக்கு குடும்பங்களுடன் சென்று வழிபடுவதும் அரங்கேறும்.
ஆடி கிருத்திகை:
ஒவ்வொரு மாதமும் வரும் கிருத்திகை சிறப்பு வாய்ந்தது என்றால், ஆடி மாதம் வரும் கிருத்திகை தனிச்சிறப்பு வாய்ந்தது ஆகும். நடப்பாண்டிற்கான ஆடி கிருத்திகை வரும் ஆகஸ்ட் மாதம் 9-ந் தேதி கொண்டாடப்பட உள்ளது. அன்றைய தினம் முருகப்பெருமான் ஆலயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட உள்ளது.
ஆடி அமாவாசை:
ஆடிப்பெருக்கு, ஆடி கிருத்திகை போலவே ஆடி அமாவாசை மிகவும் முக்கியத்துவமான நாள் ஆகும். அன்றைய தினம் முன்னோர்களுக்கு தர்ப்பணம் அளிக்கும் நாள் ஆகும். நடப்பாண்டில் ஆடி அமாவாசை வரும் ஆகஸ்ட் மாதம் 16-ந் தேதி வருகிறது.
வரலட்சுமி பூஜை:
பெண்கள் தங்களது மாங்கல்யம் பலம் பெற வேண்டும் என்பதற்காகவும், தங்களது குடும்பம் சிறப்பாக வாழ வேண்டும் என்பதற்காகவும் நடத்தப்படும் பூஜை வரலட்சுமி பூஜை. ஆகஸ்ட் மாதம் 17-ந் தேதி நிறைவு பெறும் ஆடி மாததத்திற்கு பிறகு ஆகஸ்ட் 25-ந் தேதி வரலட்சுமி பூஜை கொண்டாடப்பட உள்ளது.
மேலும் படிக்க: Athivaradhar Temple : அத்திவரதர் கோவில் உண்டியல் திறப்பு.. எவ்வளவு காணிக்கை பெறப்பட்டது என தெரியுமா ?
Abpnadu டெலிகிராமில் இணைய: https://t.me/abpnaduofficial