ஆன்மீகம்: நெல்லையப்பர் கோயில் ஆனி பெருந்திருவிழாவின் முதல் உற்சவமான விநாயகர் உற்சவ கொடியேற்றம்
விநாயகர் திருவிழா கொடியேற்ற நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
![ஆன்மீகம்: நெல்லையப்பர் கோயில் ஆனி பெருந்திருவிழாவின் முதல் உற்சவமான விநாயகர் உற்சவ கொடியேற்றம் Vinayagar Utsava flag hoisting, the first festival of Nellaiappar Temple Ani Perundruvizha TNN ஆன்மீகம்: நெல்லையப்பர் கோயில் ஆனி பெருந்திருவிழாவின் முதல் உற்சவமான விநாயகர் உற்சவ கொடியேற்றம்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/06/06/a74ee23bb200a198e04df1decbdbf2931686039362775109_original.jpeg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான நெல்லையப்பர் திருக்கோவில் ஆனி பெருந்திருவிழா மிகவும் பிரசித்தி பெற்ற திருவிழாக்களில் ஒன்று. குறிப்பாக 48 ½ நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவின் முதல் உற்சவமான விநாயகர் திருவிழா இன்றைய தினம் கொடியேற்றத்துடன் வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்காக அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு சுவாமி அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. தொடர்ந்து விநாயகருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு கொடி பட்டம் கோவில் உட்பிரகாரத்தில் பல்லக்கில் திருவீதி உலா கொண்டுவரப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து கொடி மரத்தில் திருக்கொடி ஏற்றப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. பின்னர் பால் தயிர் மஞ்சள் இளநீர் கொண்டு சிறப்பு அபிஷேகமும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகாதீப ஆராதனையும் நடைபெற்றது.
ஆறு நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் விநாயகருக்கு தினமும் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு கோவில் உட்பிரகாரத்தில் திரு உலாவும் நடைபெறும். இதனை தொடர்ந்து 11-ம் தேதி முதல் முதலி மூவர் உற்சவமும், அதனைத் தொடர்ந்து 16ஆம் தேதி முதல் சந்திரசேகரர் பவானி அம்பாள் உற்சவமும் நடைபெறுகிறது. பின்னர் 24ஆம் தேதி ஆனிப்பெரும் திருவிழா கொடியேற்றம் சுவாமி சன்னதி முன்புள்ள பெரிய கொடிமரத்தில் நடைபெற்று ஜூலை இரண்டாம் தேதி ஆசியாவிலேயே அதிக எடை கொண்ட சுவாமி நெல்லையப்பர் தேரோடும் தேர் திருவிழா நடைபெறுகிறது. விநாயகர் திருவிழா கொடியேற்ற நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)