மேலும் அறிய

Vinayagar Chaturthi 2024: மயிலாடுதுறையில் இவ்வளவு விநாயகர் சிலைகளா? சூடு பிடிக்கும் விநாயகர் சதுர்த்தி விழா..

மயிலாடுதுறை மாவட்டத்தில் 395 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படவுள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

நாடுமுழுவதும், வருகின்ற  செப்டம்பர் 7 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி கோலாகலமாக கொண்டாடப்படவுள்ளது. இதனை முன்னிட்டு பொதுமக்கள் மற்றும் இந்து அமைப்பினர் வீடுகள் மற்றும் பொது இடங்களில் விநாயகர் சிலையை வைத்து வழிபாடு செய்து பின்னர் எடுத்துச் சென்று நீர் நிலைகளில் கரைப்பது வழக்கம். விநாயக சதுர்த்தி என்ற  மங்களகரமான திருவிழா இந்தியாவில் இந்துக்கள் கொண்டாடப்படும் மிகவும் பிரபலமான பண்டிகைகளில் ஒன்றாகும்.

Vinayagar Chaturthi 2024: மயிலாடுதுறையில் இவ்வளவு விநாயகர் சிலைகளா? சூடு பிடிக்கும் விநாயகர் சதுர்த்தி விழா..

விநாயகப் பெருமான் என்பவர், சிவன் மற்றும் பார்வதி தேவியின் மகன் மற்றும் அறிவு, செல்வம் மற்றும் புதிய தொடக்கங்களின் கடவுளாக போற்றப்படுகிறார். நாடு முழுவதும், குறிப்பாக மகாராஷ்டிரா, குஜராத், ஒடிசா, உத்தரபிரதேசம் மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இந்த விழா மிகுந்த உற்சாகத்துடன் 10 நாட்களுக்கு மேல் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில்தான் விநாயகப் பெருமான் பிறந்தார் என்பது ஐதீகம். மங்களம், ஞானம், செழிப்பு மற்றும் நல்ல அதிர்ஷ்டத்தைக் குறிக்கும், விநாயகப் பெருமானை எந்தவொரு பூஜை அல்லது சடங்குக்கும் முன்பாக ஒவ்வொரு வீட்டிலும் வழிபடுகிறார்கள்.

இந்து புராணங்களின் அடிப்படையில் கணேஷ் கடவுள் சிவன் மற்றும் பார்வதி தேவியின் மகன் என்று நம்பப்படுகிறது.

Vinayagar Chaturthi 2024: மயிலாடுதுறையில் இவ்வளவு விநாயகர் சிலைகளா? சூடு பிடிக்கும் விநாயகர் சதுர்த்தி விழா..

புராணத்தின் படி, சிவபெருமான் கோபமடைந்தபோது, அவர் துக்கமடைந்த பார்வதி தேவியை ஆறுதல்படுத்துவதற்காக கணேஷின் தலையை வெட்டி அதற்கு பதிலாக யானையின் தலையை வைத்தார். எனவே விநாயகப் பெருமான் எப்போதும் யானைத் தலை மற்றும் நான்கு கரங்களுடன் காட்சியளிக்கிறார். பல்வேறு பெயர்களில் அழைக்கப்படும் கணேஷ், மக்களின் அதிர்ஷ்டத்தை மாற்றுவதற்கும், அவர்களின் பாதையில் இருந்து பேரழிவுகள் மற்றும் தடைகளை நீக்குவதற்கும் வழிபடப்படுகிறார்.

Vinayagar Chaturthi 2024: மயிலாடுதுறையில் இவ்வளவு விநாயகர் சிலைகளா? சூடு பிடிக்கும் விநாயகர் சதுர்த்தி விழா..

இத்தகைய பல்வேறு சிறப்பு மிக்க விநாயகர் சதுர்த்தி விழா நாடு முழுவதும் வருகின்ற செப்டம்பர் 7-ம் தேதி வெகுவிமரிசையாக கொண்டாடப்பட உள்ளதை அடுத்து. விழாக்காக  பல வண்ணங்களிலும், பல வடிவங்களில், விதவிதமான பொருட்களை கொண்டும் விநாயகர் சிலைகள் தயாரிக்கப்பட்டு பல்வேறு  இடங்களில் பிரதிஷ்டை செய்யப்பட்ட உள்ளது.

பல்வேறு அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் சார்பில் தங்கள் குடியிருப்பு பகுதிகளில் விநாயகர் சதுர்த்தியை யொட்டி விதவிதமான விநாயகர் சிலைகளை வாங்கி பிரதிஷ்டை செய்து பூஜை செய்து வழிபடுவர். பின்னர் விழா முடிந்ததும் மேள, தாளம் வாத்தியங்கள் முழங்க விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் சென்று ஆற்றில் கரைப்பதை  வாடிக்கையாக செய்து வருகின்றனர்.

Vinayagar Chaturthi 2024: மயிலாடுதுறையில் இவ்வளவு விநாயகர் சிலைகளா? சூடு பிடிக்கும் விநாயகர் சதுர்த்தி விழா..

அதன் தொடர்ச்சியாக விநாயகர் சதூர்த்தி விழாவையொட்டி மயிலாடுதுறை மாவட்டத்தில் மயிலாடுதுறை, சீர்காழி, தரங்கம்பாடி, குத்தாலம் ஆகிய நான்கு தாலுக்காவில் உள்ள பல்வேறு இடங்களில் 395 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்ட உள்ளது.  இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு ஊர்வலம் நடைபெறும் இடமான பழையபேருந்து நிலையம் பகுதியில்  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். வரும் 7 மற்றும் 8-ம் தேதி விநாயகர் ஊர்வலத்திற்கு தேவையான பாதுகாப்பு குறித்து சீர்காழி காவல் துணை கண்காணிப்பாளர் ராஜ்குமாரிடம் கேட்டறிந்தார். 

Vinayagar Chaturthi 2024: மயிலாடுதுறையில் இவ்வளவு விநாயகர் சிலைகளா? சூடு பிடிக்கும் விநாயகர் சதுர்த்தி விழா..

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசியவர், மாவட்டம் முழுவதும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 395 விநாயர்கள் சிலைகள் வைத்து வழிபாடு செய்து விசர்ஜனம் செய்வதற்கு காவல்துறை சார்பில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சிலைகள் 10 அடி உயரத்திற்குள் இருக்கவேண்டும் என விழாகுழுவினர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.  பிரதிஷ்டை செய்யப்படும் விநாயகர் சிலைகள் அமைந்துள்ள பகுதியில் விழா குழுவினர் சிசிடிவி கேமரா பொருத்தி கண்காணித்திடவும்  அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

கடந்த ஆண்டு போலவே இந்த ஆண்டும் விநாயகர் சிலைகள் ஊர்வலத்திற்கு தேவையான காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள். புதிய விநாயகர் சிலைகள் நிறுவுவதற்கு அனுமதி கிடையாது என்றார். 

Vinayagar Chaturthi 2024: மயிலாடுதுறையில் இவ்வளவு விநாயகர் சிலைகளா? சூடு பிடிக்கும் விநாயகர் சதுர்த்தி விழா..

அதனைத் தொடர்ந்து  விநாயகர் சிலைகள் விசர்ஜனம் செய்யப்படும் சீர்காழி சட்டநாதபுரத்தில் செல்லும் உப்பனாற்று பகுதியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது சீர்காழி காவல் துணை கண்காணிப்பாளர் ராஜ்குமார், சீர்காழி காவல் ஆய்வாளர்  புயல்.பாலசந்திரன் உடனிருந்தனர் .முன்னதாக சீர்காழி காவல் நிலையத்தில் விநாயகர் சதுர்த்தி விழா குழுவினருடனான ஆலோசனைக் கூட்டம் காவல் ஆய்வாளர் புயல்.பாலச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது.

அதில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை, விசர்ஜனம் செய்யும்போது விழாக் குழுவினர் செய்ய வேண்டிய மற்றும் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் குறித்து அறிவுரைகள் வழங்கப்பட்டது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Tirupati Laddu: திருப்பதி லட்டில் மாட்டுக் கொழுப்பு  - ஆய்வில் உறுதி..! பக்தர்கள் அதிர்ச்சி.!
Tirupati Laddu: திருப்பதி லட்டில் மாட்டுக் கொழுப்பு - ஆய்வில் உறுதி..! பக்தர்கள் அதிர்ச்சி.!
சென்னையில் நான் தான் கிங்கு.. வங்கதேச பவுலர்களை கதறடித்த அஸ்வின்.. மிரட்டல் சதம்!
சென்னையில் நான் தான் கிங்கு.. வங்கதேச பவுலர்களை கதறடித்த அஸ்வின்.. மிரட்டல் சதம்!
Group 4 Vacancy: குரூப் 4 தேர்வர்களுக்கு ஸ்வீட் நியூஸ்… காலியிடங்களை அதிகரிக்க டிஎன்பிஎஸ்சி முடிவு- அறிவிப்பு எப்போது?
Group 4 Vacancy: குரூப் 4 தேர்வர்களுக்கு ஸ்வீட் நியூஸ்… காலியிடங்களை அதிகரிக்க டிஎன்பிஎஸ்சி முடிவு- அறிவிப்பு எப்போது?
புதிய உருமாறிய கொரோனா.. மீண்டும் மிரட்ட வருகிறது.. மருத்துவர்கள் கூறுவது என்ன?
புதிய உருமாறிய கொரோனா.. மீண்டும் மிரட்ட வருகிறது.. மருத்துவர்கள் கூறுவது என்ன?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Trichy bike stunt apology : வம்பிழுத்த இளைஞர்! சுளுக்கெடுத்த வருண் SP! திருச்சியில் பரபரப்புTirupati laddu animal fat : ”திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பு” சந்திரபாபு பகீர்Kuraishi on Manimegalai Priyanka : Govt Bus Damage : படிக்கட்டு உடைந்த பஸ்” உயிரோடு விளையாடலாமா” ஆத்திரத்தில் பயணிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Tirupati Laddu: திருப்பதி லட்டில் மாட்டுக் கொழுப்பு  - ஆய்வில் உறுதி..! பக்தர்கள் அதிர்ச்சி.!
Tirupati Laddu: திருப்பதி லட்டில் மாட்டுக் கொழுப்பு - ஆய்வில் உறுதி..! பக்தர்கள் அதிர்ச்சி.!
சென்னையில் நான் தான் கிங்கு.. வங்கதேச பவுலர்களை கதறடித்த அஸ்வின்.. மிரட்டல் சதம்!
சென்னையில் நான் தான் கிங்கு.. வங்கதேச பவுலர்களை கதறடித்த அஸ்வின்.. மிரட்டல் சதம்!
Group 4 Vacancy: குரூப் 4 தேர்வர்களுக்கு ஸ்வீட் நியூஸ்… காலியிடங்களை அதிகரிக்க டிஎன்பிஎஸ்சி முடிவு- அறிவிப்பு எப்போது?
Group 4 Vacancy: குரூப் 4 தேர்வர்களுக்கு ஸ்வீட் நியூஸ்… காலியிடங்களை அதிகரிக்க டிஎன்பிஎஸ்சி முடிவு- அறிவிப்பு எப்போது?
புதிய உருமாறிய கொரோனா.. மீண்டும் மிரட்ட வருகிறது.. மருத்துவர்கள் கூறுவது என்ன?
புதிய உருமாறிய கொரோனா.. மீண்டும் மிரட்ட வருகிறது.. மருத்துவர்கள் கூறுவது என்ன?
கன்னியாகுமரியில் அணுக் கனிம சுரங்கம்.! மத்திய அரசு திட்டம்.!
கன்னியாகுமரியில் அணுக் கனிம சுரங்கம்.! மத்திய அரசு திட்டம்.!
NEET MDS Cutoff 2024: நீட் எம்டிஎஸ் கட் ஆஃப் பர்சண்டைல் குறைப்பு; எவ்வளவு? காரணம் என்ன?
NEET MDS Cutoff 2024: நீட் எம்டிஎஸ் கட் ஆஃப் பர்சண்டைல் குறைப்பு; எவ்வளவு? காரணம் என்ன?
Siima Awards 2024 : சைமா விருது வென்ற சிறந்த இயக்குநர் நடிகர் முழுப் பட்டியல்
சைமா விருது வென்ற சிறந்த இயக்குநர் நடிகர் முழுப் பட்டியல்
Honor 200 Lite 5G: அறிமுகமானது ஹானர் புதிய மாடல்; என்னென்ன சிறப்புகள்? விலை விவரம் இதோ!
அறிமுகமானது ஹானர் புதிய மாடல்; என்னென்ன சிறப்புகள்? விலை விவரம் இதோ!
Embed widget