மேலும் அறிய

Vinayagar Chaturthi 2023: திருவண்ணாமலையில் பலத்த பாதுகாப்புடன் விநாயகர் சிலை ஊர்வலம்

திருவண்ணாமலையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் விநாயகர் சிலை ஊர்வலம் நடைபெற்றது. இதில் இளைஞர் குத்தாட்டம் போட்டனர்.

திருவண்ணாமலை (Tiruvannmalai News): நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி மிக விமரிசையாக கொண்டாடப்பட்டது. திருவண்ணாமலை மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி கடந்த 18-ந் தேதி கொண்டாடப்பட்டது. இதையொட்டி பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டது. மாவட்டத்தில் 1500-க்கும் மேற்பட்ட சிலைகள் இந்து முன்னணி, பல்வேறு அமைப்புகள் சார்பில் வைக்கப்பட்டிருந்தன. மூன்றாம் நாளான இன்று திருவண்ணாமலையில் விநாயகர் சிலை கரைப்பு ஊர்வலம் நடைபெற்றது. திருவண்ணாமலை காந்தி சிலை அருகே  ஊர்வலம் தொடங்கியது. அதனைத்தொடர்ந்து திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் கார்த்திகேயன், நகர துணை காவல் கண்காணிப்பாளர் குணசேகரன் ஆகியோர் தலைமையில் அங்கு ஏராளமான காவல்துறையினர் குவிக்கப்பட்டிருந்தனர்.  டிரோன் கேமராக்கள் மூலம் ஊர்வலம் கண்காணிக்கப்பட்டது. இந்த ஊர்வலத்தில் இந்து முன்னணி சங்கத்தை சார்ந்த முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Vinayagar Chaturthi 2023: திருவண்ணாமலையில் பலத்த பாதுகாப்புடன் விநாயகர் சிலை ஊர்வலம்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில், கல்லக்கடை மூளை, தண்டராம்பட்டு சாலை வழியாக தாமரை குளம்  சென்றது. இந்த  ஊர்வலம் செல்லும் போது இளைஞர்கள் பலர் ஆடி, பாடி ஆரவாரம் செய்தனர். மேளதாளம் முழங்க வாகனங்களில் விதவிதமான விநாயகர் சிலைகள் அணிவகுத்து சென்றது. இதை பொதுமக்கள் பார்த்து ரசித்தனர். பலர் விநாயகர் சிலைகளை வணங்கினர். தங்கள் வீடுகளில் வைத்து வணக்கப்பட்ட சிறிய அளவிலான சிலைகளை ஊர்வலத்தில் சென்ற வாகனத்தில் எடுத்து சென்று வைத்தனர். ஊர்வலத்தை முன்னிட்டு திருவண்ணாமலை, சமூத்தர காலணி, தர்க்கா  உள்ளிட்ட பகுதிகளில் எந்தவித அசம்பாவித சம்பவங்களை தடுக்க காவல்துறை சார்பில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும், முன் எச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டிருந்தன.

Vinayagar Chaturthi 2023: திருவண்ணாமலையில் பலத்த பாதுகாப்புடன் விநாயகர் சிலை ஊர்வலம்

அதன்படி, தண்டராம்பட்டு சாலையில் உள்பட முக்கிய தெருக்களில் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டிருந்தன. சாலைகளில் தேவையில்லாமல் வெளியே செல்பவர்களை காவல் துறையினர் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பினர். பரபரப்பாக காணப்படும் தண்டராம்பட்டு சாலை ஊர்வலத்தையொட்டி வெறிச்சோடி காணப்பட்டது. ஊர்வலம் செல்லும்போது பலர் வீடுகளின் மாடிகளில் நின்று வேடிக்கை பார்த்தனர். செல்போனில் படம் பிடித்தும், ஊர்வலம் சென்ற விநாயகர் சிலையுடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். ஊர்வலத்தின் முன்னேயும், பின்னேயும் காவல்துறையினர் வாகனங்கள் சென்றது. ஒன்றன் பின் ஒன்றாக வந்த விநாயகரை  தாமரை குளத்தில் கிரேன் மூலம் சிலைகள் கரைக்கப்பட்டது. ஏரியிலும் சிலைகளைக் கரைத்திட நீர்நிலைகள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதனைத்தவிர பிற இடங்களில் சிலைகளை கரைப்பவர்களின் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.  இதையொட்டி 1500 மேற்பட்ட விநாயகர் சிலைகள் ஊர்வலத்தில் கலந்து கொண்டுள்ளதால் நகரின் முக்கிய இடங்களிலும், ஊர்வல பாதைகளிலும் 600-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Fengal Cyclone Landfall: கரையை கடக்க ஆரம்பித்த ஃபெஞ்சல் புயல்: எங்கு ரெட் அலர்ட்? எங்கு ஆரஞ்சு அலர்ட்?
Fengal Cyclone Landfall: கரையை கடக்க ஆரம்பித்த ஃபெஞ்சல் புயல்: எங்கு ரெட் அலர்ட்? எங்கு ஆரஞ்சு அலர்ட்?
விமானப் பயணிகளின் கவனத்திற்கு! நாளை வரை கொஞ்சம் அவதிதான்! 55 விமான சேவை ரத்து! - முழு விவரம்
விமானப் பயணிகளின் கவனத்திற்கு! நாளை வரை கொஞ்சம் அவதிதான்! 55 விமான சேவை ரத்து! - முழு விவரம்
Fengal: வட சென்னையை வதைத்த ஃபெஞ்சால்! தண்ணீரில் தவிக்கும் மக்கள் கண்ணீர்! தீர்வு எப்போது?
Fengal: வட சென்னையை வதைத்த ஃபெஞ்சால்! தண்ணீரில் தவிக்கும் மக்கள் கண்ணீர்! தீர்வு எப்போது?
Fengal Cyclone LIVE:  ஃபெஞ்சல் புயலின் முன்பகுதி கரையை கடக்கத் தொடங்கியது - வானிலை ஆய்வு மையம்
Fengal Cyclone LIVE: ஃபெஞ்சல் புயலின் முன்பகுதி கரையை கடக்கத் தொடங்கியது - வானிலை ஆய்வு மையம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Aadhav Arjuna : ”விஜய் வருவது உறுதி..”அடம்பிடிக்கும் ஆதவ் அர்ஜூனா?தலைவலியில் திருமா..கடுப்பில் திமுகPawan Kalyan Controversy : CM Vs DEPUTY CM ”துறைமுகமா? கடத்தல் கூடாரமா?” பவன் கல்யாண் எச்சரிக்கைFengal Cyclone : ”வந்துட்டான்யா! வந்துட்டான்யா!சென்னையை நெருங்கும் புயல் வெளியே வராதீங்க மக்களே!மழைக்கான ஏற்பாடுகள் என்ன? கலெக்டர் கொடுத்த HINT! துண்டு சீட்டில் எழுதிய அமைச்சர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Fengal Cyclone Landfall: கரையை கடக்க ஆரம்பித்த ஃபெஞ்சல் புயல்: எங்கு ரெட் அலர்ட்? எங்கு ஆரஞ்சு அலர்ட்?
Fengal Cyclone Landfall: கரையை கடக்க ஆரம்பித்த ஃபெஞ்சல் புயல்: எங்கு ரெட் அலர்ட்? எங்கு ஆரஞ்சு அலர்ட்?
விமானப் பயணிகளின் கவனத்திற்கு! நாளை வரை கொஞ்சம் அவதிதான்! 55 விமான சேவை ரத்து! - முழு விவரம்
விமானப் பயணிகளின் கவனத்திற்கு! நாளை வரை கொஞ்சம் அவதிதான்! 55 விமான சேவை ரத்து! - முழு விவரம்
Fengal: வட சென்னையை வதைத்த ஃபெஞ்சால்! தண்ணீரில் தவிக்கும் மக்கள் கண்ணீர்! தீர்வு எப்போது?
Fengal: வட சென்னையை வதைத்த ஃபெஞ்சால்! தண்ணீரில் தவிக்கும் மக்கள் கண்ணீர்! தீர்வு எப்போது?
Fengal Cyclone LIVE:  ஃபெஞ்சல் புயலின் முன்பகுதி கரையை கடக்கத் தொடங்கியது - வானிலை ஆய்வு மையம்
Fengal Cyclone LIVE: ஃபெஞ்சல் புயலின் முன்பகுதி கரையை கடக்கத் தொடங்கியது - வானிலை ஆய்வு மையம்
Red Alert: மக்களே அலர்ட்.! இன்று மாலைவரை 8 மாவட்டங்களில் அதிகனமழை இருக்கு.!
Red Alert: மக்களே அலர்ட்.! இன்று மாலைவரை 8 மாவட்டங்களில் அதிகனமழை இருக்கு.!
Fengal Cyclone: கொட்டும் மழை; பயணிகளே இதை உடனடியா செய்ங்க- சென்னை மெட்ரோ எச்சரிக்கை!
Fengal Cyclone: கொட்டும் மழை; பயணிகளே இதை உடனடியா செய்ங்க- சென்னை மெட்ரோ எச்சரிக்கை!
கனமழை எதிரொலி: அம்மா உணவகங்களில் இலவச உணவு: எப்போது? எவ்வளவு நாட்கள்? - முதலமைச்சரின் அறிவிப்பு
கனமழை எதிரொலி: அம்மா உணவகங்களில் இலவச உணவு: எப்போது? எவ்வளவு நாட்கள்? - முதலமைச்சரின் அறிவிப்பு
ஃபெஞ்சல் புயல் : சுளுக்கு எடுக்கும் சூறாவளி காற்று... சாலையில் விழும் மரங்கள்; ஸ்தம்பிக்கும் ECR
ஃபெஞ்சல் புயல் : சுளுக்கு எடுக்கும் சூறாவளி காற்று... சாலையில் விழும் மரங்கள்; ஸ்தம்பிக்கும் ECR
Embed widget