மேலும் அறிய

ஹரியும் சிவனும் ஒன்று என்ற தத்துவத்தை உணர்த்தும் வகையில் அண்ணாமலையார் கோயிலில் சொர்க்க வாசல் திறப்பு

ஹரியும் சிவனும் ஒன்று என்ற தத்துவத்தை பக்தர்களுக்கு உணர்த்தும் வகையில் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் வைகுண்ட வாயில் திறப்பு.

நினைத்தாலே முக்தி தரும் ஸ்தலமாகவும், பஞ்சபூத ஸ்தலங்கள் அக்னிஸ்தலமாக விளங்கக்கூடிய திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் அதிகாலை நடை திறக்கப்பட்டு அண்ணாமலையார், உண்ணாமலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.  இதனை தொடர்ந்து கோவிலின் கருவறை பின்புறம் உள்ள பாமா ருக்மணி சமேத வேணுகோபால சுவாமிக்கு,  சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று வெள்ளிக்கவசம் அணிவிக்கப்பட்டு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. அதிகாலை 5.35 மணி அளவில் மேளதாளங்கள் மற்றும் வேத மந்திரங்கள் முழங்க வைகுந்த வாயில் திறக்கப்பட்டு  சிவாச்சாரியார்கள் கற்பூர ஆரத்தியுடன் முதலில் வந்தனர். 

ஹரியும் சிவனும் ஒன்று என்ற தத்துவத்தை உணர்த்தும் வகையில் அண்ணாமலையார் கோயிலில் சொர்க்க வாசல் திறப்பு

 இதனைத் தொடர்ந்து  ஏராளமான பக்தர்கள் வைகுந்த வாயிலில் நுழைந்து 2668 அடி உயரம் கொண்ட மலையே சிவனாக காட்சி அளிக்ககூடிய மலையை வணங்கி வழிபட்டனர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் வைகுந்த வாயிலில் நுழைந்து சாமி தரிசனம் செய்தனர். திருவண்ணாமலை சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மற்றும் திருவண்ணாமலை அதன் சுற்றுவட்டார பகுதியில் சேர்ந்த ஆன்மீக பொதுமக்கள் என வைகுண்ட ஏகாதசி முன்னிட்டு சாமி தரிசனம் செய்ய அண்ணாமலையார் கோவில் குவிந்திருந்தனர். சைவ ஸ்தலங்களில் மிக முக்கியமான கோவிலான திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் ஹரியும் சிவனும் ஒன்று என்பதை உலகிற்கு உணர்த்தும் வகையில் ஆண்டுதோறும் வைகுண்ட வாயில் திறப்பது ஐதீகம் ஆகும்.

ஹரியும் சிவனும் ஒன்று என்ற தத்துவத்தை உணர்த்தும் வகையில் அண்ணாமலையார் கோயிலில் சொர்க்க வாசல் திறப்பு

அதேபோன்று அருள்மிகு ருக்மணி சத்தியபாமா உடனுறை ஶ்ரீ வேணுகோபால பார்த்தசாரதி பெருமாள் திருக்கோவிலில் மார்கழி மாதம் வைகுந்த ஏகாதசி முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு  பக்தர்கள் கலந்து கொண்டு கோவிந்தா கோவிந்தா முழக்கத்துடன் சாமி தரிசனம் திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருள்மிகு ருக்மணி சத்யபாமா உடனுறை ஶ்ரீ வேணுகோபால பார்த்தசாரதி பெருமாள் திருக்கோவில் மார்கழி மாத வைகுண்ட ஏகாதேசி முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு நடைபெற்றது.  சொர்க்கவாசல் திறப்பில் முன்னதாக அதிகாலை மூலவர்களுக்கு 108 மூலிகை திரவங்களில் அபிஷேகம் செய்து மலர்களால் அலங்கரித்து மகா தீபாராதனை நடைபெற்றது. 

ஹரியும் சிவனும் ஒன்று என்ற தத்துவத்தை உணர்த்தும் வகையில் அண்ணாமலையார் கோயிலில் சொர்க்க வாசல் திறப்பு

இதனை தொடர்ந்து சொர்க்கவாசல் வழியாக அருள்மிகு ருக்மணி சத்தியபாமா உடனுறை ஶ்ரீ வேணுகோபால பார்த்தசாரதி உற்சவ மூர்த்திகள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்கள். இதில் சுற்றுப்பகுதியில் உள்ள ஏராளமான பக்தர்கள் அதிகாலையிலே பங்கேற்று திருக்கோவில் ஒற்றகாலத்தில் பக்தியுடன் காத்திருந்து சொர்க்கவாசல் வழியாக காட்சியளித்த மூலவர்களை கோவிந்தா, கோவிந்தா, கோவிந்தா முழக்கமிட்டு சாமி தரிசனம் செய்தனர். திரளாக பங்கேற்ற பக்தர்களுக்கு புனித நீர், அர்ச்சனை செய்த குங்குமம் மற்றும் அன்னதான பிரசாதம் வழங்கப்பட்டது.

Vaigunda Ekadasi: வைகுண்ட  ஏகாதசி: பெருமாள் கோயில்களில் சொர்க்க வாசல் திறப்பு.. அதிகாலையிலேயே குவிந்த பக்தர்கள்!

தலைப்பு செய்திகள்

TN Assembly: ஆட்டம் ஆரம்பம்.. இன்று மீண்டும் கூடும் சட்டமன்றம்! அட்டாக் மோடில் வரும் திமுக.. சமாளிக்குமா தவெக?
TN Assembly: ஆட்டம் ஆரம்பம்.. இன்று மீண்டும் கூடும் சட்டமன்றம்! அட்டாக் மோடில் வரும் திமுக.. சமாளிக்குமா தவெக?
BJP: டீம் 2029..! மொத்தமாக கலைத்து போட்டு தேர்தலுக்கு தயாராகும் பாஜக..! யாருக்கு என்ன பொறுப்பு? இன்று வெளியீடு
டீம் 2029..! மொத்தமாக கலைத்து போட்டு தேர்தலுக்கு தயாராகும் பாஜக..! யாருக்கு என்ன பொறுப்பு? இன்று வெளியீடு
Seeman:
Seeman: "கொலை கேஸ் போடுங்க.." தமிழனை வேட்டையாடினால் கேட்பதற்கு நாதி இ்ல்லையா? கொந்தளித்த சீமான்
CM விஜய் ஆவேசம்..! நீங்கள் சொல்வது ஏற்றுக்கொள்ளும்படியாக இல்லை - 3 தமிழர்கள் கொல்லப்பட்ட கொடூரம்
CM விஜய் ஆவேசம்..! நீங்கள் சொல்வது ஏற்றுக்கொள்ளும்படியாக இல்லை - 3 தமிழர்கள் கொல்லப்பட்ட கொடூரம்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Assembly: ஆட்டம் ஆரம்பம்.. இன்று மீண்டும் கூடும் சட்டமன்றம்! அட்டாக் மோடில் வரும் திமுக.. சமாளிக்குமா தவெக?
TN Assembly: ஆட்டம் ஆரம்பம்.. இன்று மீண்டும் கூடும் சட்டமன்றம்! அட்டாக் மோடில் வரும் திமுக.. சமாளிக்குமா தவெக?
BJP: டீம் 2029..! மொத்தமாக கலைத்து போட்டு தேர்தலுக்கு தயாராகும் பாஜக..! யாருக்கு என்ன பொறுப்பு? இன்று வெளியீடு
டீம் 2029..! மொத்தமாக கலைத்து போட்டு தேர்தலுக்கு தயாராகும் பாஜக..! யாருக்கு என்ன பொறுப்பு? இன்று வெளியீடு
Seeman:
Seeman: "கொலை கேஸ் போடுங்க.." தமிழனை வேட்டையாடினால் கேட்பதற்கு நாதி இ்ல்லையா? கொந்தளித்த சீமான்
CM விஜய் ஆவேசம்..! நீங்கள் சொல்வது ஏற்றுக்கொள்ளும்படியாக இல்லை - 3 தமிழர்கள் கொல்லப்பட்ட கொடூரம்
CM விஜய் ஆவேசம்..! நீங்கள் சொல்வது ஏற்றுக்கொள்ளும்படியாக இல்லை - 3 தமிழர்கள் கொல்லப்பட்ட கொடூரம்
TN Weather News: இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? தமிழக வானிலை அறிக்கை - சென்னை நிலவரம்..!
இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? தமிழக வானிலை அறிக்கை - சென்னை நிலவரம்..!
கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பின்லாந்தில் உலகத் தரப் பயிற்சி! அசத்தல் திட்டம்
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பின்லாந்தில் உலகத் தரப் பயிற்சி! அசத்தல் திட்டம்
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
Embed widget