Deepam festival: கார்த்திகை தீபத் திருவிழா; திருவண்ணாமலையில் பாதுகாப்பு பணியில் 12 ஆயிரம் போலீசார்
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில் கார்த்திகை தீபத் திருவிழாவில் 30 எஸ்பி உள்ளிட்ட 12097 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோவில் கார்த்திகை தீபத் திருவிழா முன்னேற்பாடுகள் குறித்த ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றுது. இந்த கூட்டத்தற்கு பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வா.வேலூ தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாராக இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு கலந்து கொண்டார். இதில் தீபத் திருவிழாவின் பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் முருகேஷ் பேசியதாவது: திருவண்ணாமலை சுற்றிலும் 13 தற்காலிக பேருந்து நிலையங்களும் 2692 பேருந்துகள் 6431 கடைகள் இயக்கப்படுகிறது. தீபத்திற்கு 19 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளது. கிரிவலப் பாதையில் 15 மருத்துவ குழுக்கள்,கோவில் வளாகத்தில் 3 மருத்துவ குழுக்கள், 15 அவசர 108 ஆம்புலன்ஸ்,10 பைக் ஆம்புலன்ஸ்கள் ஈடுபடுத்தப்படவுள்ளன.
தீபத் திருவிழாவிற்கு ஐஜி ஒருவர், டிஐஜி - 5 நபர்கள், எஸ்பி- 30 நபர்கள் என 12 ஆயிரத்தில் 097 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். கோவில், மாடவீதிகள் மற்றும் கிரிவலப் பாதையில் சிசிடிவி 500 கேமராக்களும், ஆளில்லா விமானம் 7, 57 கண்காணிப்பு கேமிராக்கள், 35 இடங்களில் மே ஹெல்ப் யூ ( may help you booths ) அமைக்கப்பட உள்ளது. தீப திருவிழா அன்று மலையின் மீது ஏறுவதற்கு 2500 பக்தர்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டுவார்கள். அவர்களுக்கு அவர்களுடைய புகைப்படங்கள் உள்ளவாறு அடையாள அட்டை வழங்கப்பட உள்ளது. திருவிழா கூட்டத்தில் சந்தேகப்படும் நபர்களின் புகைப்படங்கள் எடுத்து அவர்கள் குற்றவாளிகளா என்பதை ( face tracker) செயலி மூலம் கண்காணிக்கப்பட உள்ளனர். மேலும் கூட்டத்தில் காணாமல் போகும் குழந்தைகளை கண்டு பிடிக்க நடவடிக்கை எடுக்க குழந்தைகள் கையில் முகவரியின் கூடிய பேண்ட் கட்டப்படும். 101 இடங்களில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படவுள்ளது. 12 பெரிய திரைகளில் கோவில் நிகழ்வுகள் திரையிடப்பட்ட உள்ளது.
சமூக விரோதிகளின் நடமாட்டத்தை தடுக்க வகையில் இருசக்கர வாகனத்தில் காவலர்கள் ஈடுபட உள்ளனர். குடிநீர் வசதி, கழிவரை வசதிகள் எங்கு எங்கு உள்ளது என்பது குறித்து அனைத்து இடங்களிலும் தகவல் பலகை வைக்கப்பட உள்ளது. மலையின் மீது ஏறக்கூடிய 23 வழிகளில் வனத்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உட்பட நான்கு இடங்களில் முக்கிய கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட உள்ளது. மேலும் விழாக்கள் நடைபெறும் நாட்களில் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கு கட்டணம் வசூலிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். கிரிவலப்பாதை முழுவதும் உள்ள ஒலிபெருக்கியின் மூலம் ‘ஓம் நமசிவாய’ என்ற ஒலியை எழுப்ப நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது என்று தெரிவித்தார்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் கார்த்திகேயன், எம்எல்ஏக்கள் மு.பே.கிரி,பேசுதி சரவணன் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.