மேலும் அறிய

தூத்துக்குடி பனிமய மாதா பேராலய தங்கத்தேர் திருவிழா வரும் 26ம் தேதி கொடியேற்றத்துடன் தொடக்கம்

தங்கக்தேர் திருவிழாவை முன்னிட்டு 53 அடி உயரம் கொண்ட பாரம்பரிய தங்கத்தேர் புதுப்பிக்கும் பணிகள் நிறைவு கட்டத்தை எட்டி உள்ளது.

தூத்துக்குடி பனிமய மாதா பேராலயத்தில் 16-வது தங்கத்தேர் திருவிழா வருகிற 26ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 

தூத்துக்குடி பனிமய மாதா பேராலய தங்கத்தேர் திருவிழா வரும் 26ம் தேதி கொடியேற்றத்துடன் தொடக்கம்

தூத்துக்குடியில் அமைந்துள்ள பிரசித்திபெற்ற தூய பனிமய மாதா பேராலயத்தில் ஆண்டுதோறும் ஜூலை மாதம் 26-ஆம் தேதி முதல் ஆகஸ்டு 5-ஆம் தேதி வரை 11 நாட்கள் ஆண்டு பெருவிழா சிறப்பாக நடந்து வருகிறது. முக்கிய நிகழ்வுகளை குறிக்கும் ஆண்டுகளில் மட்டும் தங்கத்தேர் பவனி நடைபெறுவது வழக்கம். தூத்துக்குடி மறைமாவட்டத்தின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு இந்த ஆண்டு 16-வது தங்கத்தேர் பவனி நடக்கிறது.

தூத்துக்குடி பனிமய மாதா பேராலய தங்கத்தேர் திருவிழா வரும் 26ம் தேதி கொடியேற்றத்துடன் தொடக்கம்

இந்த ஆண்டு பேராலயத்தின் 441-வது ஆண்டு பெருவிழா வருகிற 26-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதை முன்னிட்டு அன்று காலை 5 மணிக்கு முதல் திருப்பலியும், 5.45 மணிக்கு 2-ம் திருப்பலியும் நடக்கிறது. காலை 7 மணிக்கு தூத்துக்குடி மறைமாவட்ட பிஷப் ஸ்டீபன் தலைமையில் சிறப்பு திருப்பலியும் நடைபெறுகிறது. 8.30 மணியளவில் பேராலயம் முன்பு உள்ள கொடிமரத்தில் அன்னையின் திருக்கொடி ஏற்றப்படுகிறது. பகல் 12 மணிக்கு கோட்டாறு மறைமாவட்ட ஆயர் நசரேன் தலைமையில் அன்னைக்கு பொன் மகுடம் அணிவித்தல் நிகழ்ச்சி நடக்கிறது.

விழா நாட்களில் தினமும் ஜெபமாலை, திருப்பலி, மறையுரை, நற்கருணை ஆசீர் ஆகியவை நடைபெறுகிறது. மேலும், தினமும் இளையோர், முதியோர், ஆதரவற்றோர், தொழிலாளர்கள், மாற்றுத்திறனாளிகள், மீனவர்கள், கப்பல் மாலுமிகள், உப்பு தொழிலாளர்கள், பனைத் தொழிலாளர்கள், வணிகர்கள் என பல்வேறு தரப்பினருக்கான சிறப்பு திருப்பலிகள் நடக்கின்றது. இந்த ஆண்டு தங்கத்தேர் திருவிழா என்பதால் விழாவில் தினமும் ஒரு பிஷப் பங்கேற்கின்றனர். 

தூத்துக்குடி பனிமய மாதா பேராலய தங்கத்தேர் திருவிழா வரும் 26ம் தேதி கொடியேற்றத்துடன் தொடக்கம்

அதன்படி, திருவிழாவின் 2-ம் நாள் பாளையங்கோட்டை முன்னாள் பிஷப் ஜூடு பால்ராஜ், 3-ம் நாள் பாளையங்கோட்டை தற்போதைய பிஷப் அந்தோணிசாமி, 4-ம் நாள் சிவகங்கை பிஷப் சூசை மாணிக்கம், 5-ம் நாள் மதுரை பிஷப் அந்தோணி பாப்புசாமி, 6-ம் நாள் தூத்துக்குடி முன்ளாள் பிஷப் இவோன் அம்புரோஸ், 7-ம் நாள் திண்டுக்கல் பிஷப் பால்சாமி, 8-ம் நாள் திருச்சி பிஷப் ஆரோக்கியராஜ், 9-ம் நாள் இலங்கை மன்னார் பிஷப் இம்மானுவேல் பர்னாண்டோ, 10-ம் நாள் கோவா உயர்மறைமாவட்ட பேராயர் கர்தினால் பிலிப் நேரி, 11-ம் நாள் கோவை பிஷப் தாமஸ் ஆக்குவினாஸ் ஆகியோர் பங்கேற்கின்றனர்.

5-ஆம் நாள் விழாவான வருகிற 30-ஆம் தேதி காலை 7.30 மணிக்கு பள்ளிக் குழந்தைகளுக்கு புதுநன்மை வழங்கப்படுகிறது. மாலை 6.15 மணிக்கு நற்கருணை பவனி நடக்கிறது. ஆகஸ்டு 4-ஆம் தேதி 10-ம் திருவிழாவில் மாலை 6.30 மணிக்கு பெருவிழா சிறப்பு மாலை ஆராதனையும், இரவு 9 மணிக்கு ஆலய வளாகத்தில் அன்னையின் திருவுருவ பவனி நடைபெறும்.5-ஆம் தேதி காலை 5.15 மணிக்கு பெருவிழா கூட்டுத் திருப்பலியும், காலை 7 மணிக்கு தங்கத்தேர் சிறப்பு திருப்பலியும் நடக்கிறது. இதனை தொடர்ந்து முக்கிய வீதிகளில் அன்னையின் தங்கத் தேர் பவனி நடக்கிறது. பகல் 12.30 மணிக்கு தங்கத்தேர் நன்றி திருப்பலி, மாலை 4 மணிக்கு பெருவிழா நிறைவுத் திருப்பலி நடக்கின்றது.

தூத்துக்குடி பனிமய மாதா பேராலய தங்கத்தேர் திருவிழா வரும் 26ம் தேதி கொடியேற்றத்துடன் தொடக்கம்

தங்கக்தேர் திருவிழாவை முன்னிட்டு 53 அடி உயரம் கொண்ட பாரம்பரிய தங்கத்தேர் புதுப்பிக்கும் பணிகள் நிறைவு கட்டத்தை எட்டி உள்ளது. இதற்காக ஜப்பானிலிருந்து கொண்டு வரப்பட்ட உயர்தர தங்கத்தாள் ஒட்டும் பணியில் 60-க்கும் மேற்பட்ட கலைஞர்கள் ஈடுபட்டு உள்ளனர். மேலும், பேராலயத்தில் வீற்றிருக்கும் அன்னையின் சொரூபபத்திற்கு தங்க முலாம் பூசும் பணி நிறைவடைந்துள்ளது. திருப்பலிப்பீடம், பின்னணி அலங்கார வேலைகள், உயர் சுவர் வர்ணம் பூசுதல், உட்புற அலங்காரங்கள் மற்றும் வெளிப்புற மின் அலங்கார வேலைகள் தீவிரமாக நடந்து வருகின்றது. 

தூத்துக்குடி பனிமய மாதா பேராலய தங்கத்தேர் திருவிழா வரும் 26ம் தேதி கொடியேற்றத்துடன் தொடக்கம்

மேலும் பக்தி ஆராதனை பாடல் பயிற்சிகளும் நடந்து வருகின்றன. வெளியூர் திருப்பயணிகள் தங்குமிட ஏற்பாடுகள், குடிநீர், சுகாதார வசதிகளும் செய்யப்பட்டு வருகின்றன. ஏற்பாடுகளை பேராலய அதிபர் பங்குதந்தை குமார்ராஜா தலைமையில், உதவி பங்குத்தந்தை சைமன் ஆல்டஸ், பேராலய மேய்ப்புப்பணி குழுவினர், பக்தசபையினர் மற்றும் இறைமக்கள் செய்து வருகின்றனர்.

ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

CM Stalin: பிரச்னைக்கு தீர்வு காணும் வரை சிலந்தியாற்றின் குறுக்கே தடுப்பணை கூடாது - தமிழ்நாடு முதலமைச்சர் கடிதம்!
CM Stalin: பிரச்னைக்கு தீர்வு காணும் வரை சிலந்தியாற்றின் குறுக்கே தடுப்பணை கூடாது - தமிழ்நாடு முதலமைச்சர் கடிதம்!
"மாடு இன்னும் பாலே தரல.. ஆனா, நெய்க்கு சண்டை போடுறாங்க" INDIA கூட்டணி மீது பிரதமர் மோடி தாக்கு!
Planet Parade 2024: ஜுன் 3ல் வானில் மாயாஜாலம் - நேர்க்கோட்டில் வரப்போகும் 6 கோள்கள் - கண்களால் பார்க்கும் வாய்ப்பு
Planet Parade 2024: ஜுன் 3ல் வானில் மாயாஜாலம் - நேர்க்கோட்டில் வரப்போகும் 6 கோள்கள் - கண்களால் பார்க்கும் வாய்ப்பு
Saamaniyan Movie Review: 12 ஆண்டுகளுக்குப் பின் கம்பேக்! மனதை வென்றதா ராமராஜனின் சாமானியன்? - முழு விமர்சனம்!
Saamaniyan Movie Review: 12 ஆண்டுகளுக்குப் பின் கம்பேக்! மனதை வென்றதா ராமராஜனின் சாமானியன்? - முழு விமர்சனம்!
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

P Chidambaram Slams Modi  : VK Pandian Profile : மோடியை அலறவிட்ட தமிழன் ஒடிசாவின் முடிசூடா மன்னன் யார் இந்த VK பாண்டியன்?Dinesh karthik Retirement  : RCB-யின் காப்பான்! தினேஷ் கார்த்திக் கடந்து வந்த பாதை!Arvind Kejriwal on PM Candidate Rahul  : மம்தா பாணியில்  கெஜ்ரிவால் பிரதமர் வேட்பாளரா ராகுல்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Stalin: பிரச்னைக்கு தீர்வு காணும் வரை சிலந்தியாற்றின் குறுக்கே தடுப்பணை கூடாது - தமிழ்நாடு முதலமைச்சர் கடிதம்!
CM Stalin: பிரச்னைக்கு தீர்வு காணும் வரை சிலந்தியாற்றின் குறுக்கே தடுப்பணை கூடாது - தமிழ்நாடு முதலமைச்சர் கடிதம்!
"மாடு இன்னும் பாலே தரல.. ஆனா, நெய்க்கு சண்டை போடுறாங்க" INDIA கூட்டணி மீது பிரதமர் மோடி தாக்கு!
Planet Parade 2024: ஜுன் 3ல் வானில் மாயாஜாலம் - நேர்க்கோட்டில் வரப்போகும் 6 கோள்கள் - கண்களால் பார்க்கும் வாய்ப்பு
Planet Parade 2024: ஜுன் 3ல் வானில் மாயாஜாலம் - நேர்க்கோட்டில் வரப்போகும் 6 கோள்கள் - கண்களால் பார்க்கும் வாய்ப்பு
Saamaniyan Movie Review: 12 ஆண்டுகளுக்குப் பின் கம்பேக்! மனதை வென்றதா ராமராஜனின் சாமானியன்? - முழு விமர்சனம்!
Saamaniyan Movie Review: 12 ஆண்டுகளுக்குப் பின் கம்பேக்! மனதை வென்றதா ராமராஜனின் சாமானியன்? - முழு விமர்சனம்!
Turbo Movie Review: பீஸ்ட் மோடில் மம்மூட்டி..தெறிக்கவிடும் ஆக்‌ஷன் காட்சிகள்..டர்போ படத்தின் விமர்சனம் இதோ!
Turbo Movie Review: பீஸ்ட் மோடில் மம்மூட்டி..தெறிக்கவிடும் ஆக்‌ஷன் காட்சிகள்..டர்போ படத்தின் விமர்சனம் இதோ!
"பொறுமையை சோதிக்க வேண்டாம்" பாலியல் வீடியோ விவகாரத்தில் பேரன் பிரஜ்வலுக்கு தேவகவுடா எச்சரிக்கை!
TN CM Stalin: முதலமைச்சர் ஸ்டாலின் சொன்ன குட்நியூஸ்; விரைவில் சென்னையில் கூகுள் பிக்சல் கம்பெனி!
முதலமைச்சர் ஸ்டாலின் சொன்ன குட்நியூஸ்; விரைவில் சென்னையில் கூகுள் பிக்சல் கம்பெனி!
Thiruvalluvar: காவி உடையில் திருவள்ளுவர்.. ஆளுநர் மாளிகை அழைப்பிதழால் மீண்டும் சர்ச்சை.. என்ன மேட்டர்?
காவி உடையில் திருவள்ளுவர்.. ஆளுநர் மாளிகை அழைப்பிதழால் மீண்டும் சர்ச்சை.. என்ன மேட்டர்?
Embed widget