மேலும் அறிய

திருக்கோஷ்டியூர் செளமிய நாராயண பெருமாள் கோயில் தங்க விமான கும்பாபிஷேகம்.. பக்தர்களின் பரவசம்!

உச்சியில் உள்ள முதல் நிலைக்கு தங்கத் தகடு வேயும் திருப்பணி நடைபெற்றது. திருப்பணி முடிந்த நிலையில் இன்று கும்பாபிஷேகம் நடைபெற்றது.

திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயண பெருமாள் கோயிலில் தங்க விமான கும்பாபிஷேகம் நடைபெற்றது. பக்தர்கள் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.

செளமிய நாராயண பெருமாள் கோயில்
 
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே திருக்கோஷ்டியூரில், சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானத்திற்கு உட்பட்ட பிரசித்தி பெற்ற செளமிய நாராயண பெருமாள் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலின் மூலவர் கோபுரம் 108 அடி உயரத்தில் அஷ்டாங்க விமானமாக உள்ளது. இது ‘ஓம் நமோ நாராயணாய’ எனும் மந்திரத்தை உணர்த்தும் வகையில் மூன்று தளங்களாக அமைந்துள்ளது. இதில் உச்சியில் உள்ள முதல் நிலைக்கு தங்கத் தகடு வேயும் திருப்பணி நடைபெற்றது. திருப்பணி முடிந்த நிலையில் இன்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதையொட்டி பிப். 1-ம் தேதி திருவீதி ஸ்ரீ சஹஸ்ரநாம பாராயணம் மற்றும் சுதர்சன ஹோமங்கள் நடைபெற்றன. பிப். 2-ம் தேதி கும்பாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. காலை அனுக்கை, வாஸ்து ஹோமம், வாஸ்து சாந்தி, அக்னி பிரதிஷ்டை உள்ளிட்ட பூர்வாங்க பூஜைகள் நடந்தன. மாலையில் யாகசாலையில் கலசங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டு முதல் கால யாகசாலை பூஜை தொடங்கியது. பிப். 3-ம் தேதி 2 மற்றும் 3-ம் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. பிப். 4-ம் தேதி 4 மற்றும் 5-ம் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. நேற்று 6 மற்றும் 7-ம் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றன.
 
சிறப்பு ஹோமம் மற்றும் 8-ம் கால யாகசாலை பூஜை நடைபெற்றது.
 
இன்று அதிகாலை 5 மணிக்கு சிறப்பு ஹோமம் மற்றும் 8-ம் கால யாகசாலை பூஜை நடைபெற்றது. தொடர்ந்து காலை 8 மணிக்கு யாகசாலையிலிருந்து கடம் புறப்பாடு நிகழ்ச்சி நடைபெற்றது. காலை 9.26 மணி முதல் 10.18 மணிக்குள் மூலவர் தங்க விமானத்தில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. ஏற்பாடுகள் சிவகங்கை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் மதுராந்தகி நாச்சியார் தலைமையில் செய்யப்பட்டன. மேலாளர் இளங்கோ, கண்காணிப்பாளர் கணேசன், கவுரவத் தலைவர்கள் செந்தில் தொண்டைமான் மற்றும் மணிகண்டன் செட்டியார், டிரஸ்ட் தலைவர் காந்தி, துணைத்தலைவர் ரவிச்சந்திரன், செயலர் ஸ்ரீராம் சரவண பட்டாச்சாரியார், திருப்பணிக்குழுத் தலைவர் அரளிக்கோட்டை ராஜ்மோகன், அருணகிரி ஆகியோர் ஏற்பாடுகளை செய்திருந்தனர். இந்த நிகழ்வில் பாதுகாப்பு பணிக்காக 1 மாவட்ட காவல் கண்காணிப்பாளர், 2 கூடுதல் துணை கண்காணிப்பாளர்கள், 3 மாவட்ட துணை கண்காணிப்பாளர்கள் உட்பட 300-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.

தலைப்பு செய்திகள்

Crop Loan Waivers : தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
TVK vs DMK:
TVK vs DMK: "உதயநிதிக்கு கண்ணியத்தை கற்றுக்கொடுங்கள்.." ஓ.பன்னீர்செல்வத்துக்கு அமைச்சர் ரமேஷ் அட்வைஸ்
Udhayanidhi: உதயநிதிக்கு சவால் விட்ட அமைச்சர் கில்லி சரத்..! போதைப்பொருள் விவகாரம் - கடுப்பான கே.என். நேரு
உதயநிதிக்கு சவால் விட்ட அமைச்சர் கில்லி சரத்..! போதைப்பொருள் விவகாரம் - கடுப்பான கே.என். நேரு
மாஸ் காட்டும் மஹிந்திரா BE 6 Sporteq SUV; வெறும் ரூ.11.45 லட்சம் மட்டுமே- விலை குறைவு ரகசியம் என்ன?
மாஸ் காட்டும் மஹிந்திரா BE 6 Sporteq SUV; வெறும் ரூ.11.45 லட்சம் மட்டுமே- விலை குறைவு ரகசியம் என்ன?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Crop Loan Waivers : தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
TVK vs DMK:
TVK vs DMK: "உதயநிதிக்கு கண்ணியத்தை கற்றுக்கொடுங்கள்.." ஓ.பன்னீர்செல்வத்துக்கு அமைச்சர் ரமேஷ் அட்வைஸ்
Udhayanidhi: உதயநிதிக்கு சவால் விட்ட அமைச்சர் கில்லி சரத்..! போதைப்பொருள் விவகாரம் - கடுப்பான கே.என். நேரு
உதயநிதிக்கு சவால் விட்ட அமைச்சர் கில்லி சரத்..! போதைப்பொருள் விவகாரம் - கடுப்பான கே.என். நேரு
மாஸ் காட்டும் மஹிந்திரா BE 6 Sporteq SUV; வெறும் ரூ.11.45 லட்சம் மட்டுமே- விலை குறைவு ரகசியம் என்ன?
மாஸ் காட்டும் மஹிந்திரா BE 6 Sporteq SUV; வெறும் ரூ.11.45 லட்சம் மட்டுமே- விலை குறைவு ரகசியம் என்ன?
சட்டசபையில் உதயநிதி- ஆதவ் நேருக்கு நேர் கடும் வாக்குவாதம்.! மோதிக்கொண்ட திமுக- தவெக.! நடந்தது என்ன.?
சட்டசபையில் உதயநிதி- ஆதவ் நேருக்கு நேர் கடும் வாக்குவாதம்.! மோதிக்கொண்ட திமுக- தவெக.! நடந்தது என்ன.?
Hyundai SUV: அப்க்ரேடட் க்ரேட்டா, பாலிசேட், EV, ஹைப்ரிட் - புதுசா 6 எஸ்யுவிக்களை இறக்கும் ஹுண்டாய் - முழு விவரம்
அப்க்ரேடட் க்ரேட்டா, பாலிசேட், EV, ஹைப்ரிட் - புதுசா 6 எஸ்யுவிக்களை இறக்கும் ஹுண்டாய் - முழு விவரம்
Online Property Registration : பத்திர பதிவிற்கு இன்று முதல் நேரில் வர வேண்டாம்.! புது ரூல்ஸ்- என்னென்ன ஆவணங்கள் தேவை.? லிஸ்ட் இதோ..
பத்திர பதிவிற்கு இன்று முதல் நேரில் வர வேண்டாம்.! புது ரூல்ஸ்- என்னென்ன ஆவணங்கள் தேவை.? லிஸ்ட் இதோ..
சூப்பர் ப்ளான்.. காலியாக இருக்கும் கோயில் நிலங்கள்.. வருவாயை அதிகரிக்க தவெக அரசு போட்ட ஸ்கெட்ச்!
சூப்பர் ப்ளான்.. காலியாக இருக்கும் கோயில் நிலங்கள்.. வருவாயை அதிகரிக்க தவெக அரசு போட்ட ஸ்கெட்ச்!
Embed widget