மேலும் அறிய

கரூர் ஸ்ரீகல்யாண பசுபதீஸ்வரர் ஆலய திருக்கல்யாண உற்சவம் - திரளான பக்தர்கள் பங்கேற்பு

ஆலய மண்டபத்தில் கல்யாண பசுபதீஸ்வரர், அலங்காரவல்லி, சௌந்தரநாயகி உள்ளிட்ட உற்சவர் சுவாமிகளுக்கு சிறப்பு பொருட்களால் அபிஷேகம் நடைபெற்று அதை தொடர்ந்து ஆலய மண்டபத்தில் சுவாமிகளை கொழுவிருக்க செய்தனர்.

கரூர் ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு உற்சவர் சுவாமிக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

கரூர் ஸ்ரீகல்யாண பசுபதீஸ்வரர் ஆலய திருக்கல்யாண உற்சவம் - திரளான பக்தர்கள் பங்கேற்பு

தென் தமிழகத்தில் புகழ்பெற்ற அருள்மிகு ஸ்ரீ அலங்காரவல்லி, ஸ்ரீ சௌந்தரநாயகி உடனுறை ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் பங்குனி மாத உத்தரத்தை முன்னிட்டு கொடியேற்றத்துடன் தொடங்கி நாள்தோறும் பல்வேறு சிறப்பு வாகனத்தில் கல்யாண பசுபதீஸ்வரர், அலங்காரவல்லி அம்பிகை உள்ளிட்ட சுவாமிகள் திருவீதி உலா நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இன்று அதிகாலை மாப்பிள்ளை அலங்காரத்தில் யானை வாகனத்தில் கல்யாண பசுபதீஸ்வரர் திருவீதி உலா காட்சி அளித்தார். அதை தொடர்ந்து ஆலய மண்டபத்தில் கல்யாண பசுபதீஸ்வரர், அலங்காரவல்லி, சௌந்தரநாயகி உள்ளிட்ட உற்சவர் சுவாமிகளுக்கு சிறப்பு பொருட்களால் அபிஷேகம் நடைபெற்று அதை தொடர்ந்து ஆலய மண்டபத்தில் சுவாமிகளை கொழுவிருக்க செய்தனர்.

கரூர் ஸ்ரீகல்யாண பசுபதீஸ்வரர் ஆலய திருக்கல்யாண உற்சவம் - திரளான பக்தர்கள் பங்கேற்பு

அதைத் தொடர்ந்து   ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர்,  ஸ்ரீ அலங்காரவல்லி, ஸ்ரீ சௌந்தரநாயகி உள்ளிட்ட உற்சவர் சுவாமிகள் ஆலயம் வலம் வந்தது தொடர்ந்து ஆலயத்தின் சிவாச்சாரியார் பிரத்தியேக யாக குண்டங்கள் அமைத்து திருக்கல்யாண  நிகழ்ச்சியை தொடங்கினார். பின்னர் சுவாமிக்கு மாலை மாற்றும் நிகழ்ச்சியும், ஆலாத்தி எடுக்கும் நிகழ்ச்சியும் ,  நடைபெற்று தொடர்ந்து கங்கணம் கட்டும் நிகழ்ச்சியில் நடைபெற்றது.

பின்னர் மேளதாளங்கள் முழங்க ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர், அலங்காரவல்லி, சௌந்தரனாகி சுவாமிகளுக்கு திருக்கல்யாண வைபோகம் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. அதை தொடர்ந்து மொய் வைக்கும் நிகழ்ச்சியும், பால்,பழம் வழங்கும் நிகழ்ச்சியும் சிறப்பாக நடைபெற்றது.

கரூர் ஸ்ரீகல்யாண பசுபதீஸ்வரர் ஆலய திருக்கல்யாண உற்சவம் - திரளான பக்தர்கள் பங்கேற்பு

ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் நடைபெற்ற பங்குனி மாத திருக்கல்யாண நிகழ்ச்சியை காண கரூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான ஆன்மீக பக்தர்கள் ஆலயம் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர். பின்னர் அனைவருக்கும் பிரசாதங்கள் வழங்கப்பட்டது. ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் நடைபெற்ற திருக்கல்யாண வைபோக நிகழ்ச்சியின் ஏற்பாட்டை ஆலய செயல் அலுவலர் மற்றும் பணியாளர்கள் சார்பாக சிறப்பாக செய்திருந்தனர்.

கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் யானை வாகனத்தில் மாப்பிள்ளை அலங்காரத்தில் திருவீதி உலா.

தென் தமிழகத்தில் புகழ்பெற்ற அருள்மிகு ஸ்ரீ அலங்காரவல்லி, சௌந்தரனாகி உடனுறை ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் பங்குனி மாத உத்திரத்தை முன்னிட்டு கொடியேற்றத்துடன் திருவிழா நடைபெற்று வருகிறது. மேலும் நாள்தோறும் பல்வேறு வாகனத்தில் உற்சவர் கல்யாண பசுபதீஸ்வரர் மற்றும் அலங்காரவல்லி அம்பிகை திருவீதி உலா காட்சி தருகின்றனர்.

இந்நிலையில், ஆலயத்தில் பங்குனி உத்தர திருக்கல்யாண வைபவ நிகழ்ச்சி நடைபெறுவதை ஒட்டி கல்யாண பசுபதீஸ்வரர் அதிகாலை மாப்பிள்ளை அலங்காரத்தில் யானை வாகனத்தில் திரு வீதிஉலா காட்சி அளித்தார். ஆலயத்தில் இருந்து மேல தாளங்கள் முழங்க புறப்பட்டு யானை வாகன திருவீதி உலா முக்கிய வீதியில் வழியாக வலம் வந்த பிறகு மீண்டும் ஆலயம் வந்தடைந்தது.

அதிகாலை யானை வாகனத்தில் வீதி உலாவை காண ஏராளமான பக்தர்கள் தங்களது இல்லத்தில் இருந்து தேங்காய், பழம்  பிரசாதம் வைத்து காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சியின் ஏற்பாட்டை அருள்மிகு ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலய செயல் அலுவலர்கள் மற்றும் நிர்வாகிகள் சார்பாக சிறப்பாக செய்திருந்தனர்.

தலைப்பு செய்திகள்

அனல் பறந்த தீக்குண்டம்... சிலிர்க்க வைத்த பக்தி! மாமாகுடி மாரியம்மன் கோயிலில் திரண்ட பக்தர்கள்!
அனல் பறந்த தீக்குண்டம்... சிலிர்க்க வைத்த பக்தி! மாமாகுடி மாரியம்மன் கோயிலில் திரண்ட பக்தர்கள்!
Aadi Perukku: ஆகஸ்ட் 3ம் தேதி ஆடிப்பெருக்கு.. தாலிக்கயிறு மாற்ற உகந்த நேரம் எது? - நோட் பண்ணுங்க!
Aadi Perukku: ஆகஸ்ட் 3ம் தேதி ஆடிப்பெருக்கு.. தாலிக்கயிறு மாற்ற உகந்த நேரம் எது? - நோட் பண்ணுங்க!
கர்நாடகாவுக்கு பதிலடி? மயிலாடுதுறையில் கரைபுரண்டு ஓடப்போகும் செயற்கை பக்தி வெள்ளம்!
கர்நாடகாவுக்கு பதிலடி? மயிலாடுதுறையில் கரைபுரண்டு ஓடப்போகும் செயற்கை பக்தி வெள்ளம்!
புன்னைநல்லூர் கோவில் பூச்சொரிதல் விழா: பெரியகோவிலில் இருந்து ரத ஊர்வலம்
புன்னைநல்லூர் கோவில் பூச்சொரிதல் விழா: பெரியகோவிலில் இருந்து ரத ஊர்வலம்

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ரூ. 11 கோடியில் சிஎம் விஜய்க்கான புதிய அலுவலகம்.! என்னென்ன வசதிகள் .?
ரூ. 11 கோடியில் சிஎம் விஜய்க்கான புதிய அலுவலகம்.! என்னென்ன வசதிகள் .?
ஸ்கார்பியோ கார், கறி விருந்து, எம்எல்ஏ சீட்டுக்கு 10 கோடி வசூல் ? விஜயபாஸ்கரை ரவுண்டு கட்டும் அதிமுக
ஸ்கார்பியோ கார், கறி விருந்து, எம்எல்ஏ சீட்டுக்கு 10 கோடி வசூல் ? விஜயபாஸ்கரை ரவுண்டு கட்டும் அதிமுக
Narendra Modi: மன்னிச்சு விடுறேன்.. கெட்ட வார்த்தை பேசிய போராட்டக்காரர்கள்.. வீடியோ வெளியிட்ட மோடி!
Narendra Modi: மன்னிச்சு விடுறேன்.. கெட்ட வார்த்தை பேசிய போராட்டக்காரர்கள்.. வீடியோ வெளியிட்ட மோடி!
Rahul Gandhi: தமிழ்நாடு வரும் ராகுல்காந்தி.. விஜயை சந்திக்காதது ஏன்? .. இதுதான் பிளான்!
Rahul Gandhi: தமிழ்நாடு வரும் ராகுல்காந்தி.. விஜயை சந்திக்காதது ஏன்? .. இதுதான் பிளான்!
TASMAC shops : 717 டாஸ்மாக் கடைகளுக்கு பதிலாக FL-2 மதுபான கிளப் தொடங்க அனுமதி.? விஜய் அரசை வெளுத்தெடுக்கும் நயினார்
717 டாஸ்மாக் கடைகளுக்கு பதிலாக FL-2 மதுபான கிளப்.? விஜய் அரசை வெளுத்தெடுக்கும் நயினார்
Thoppu venkatachalam : மாஜி அமைச்சர் தோப்பு வெங்கடாச்சலம் பதவியை பறித்த ஸ்டாலின்.! இது தான் காரணமா.?
மாஜி அமைச்சர் தோப்பு வெங்கடாச்சலம் பதவியை பறித்த ஸ்டாலின்.! இது தான் காரணமா.?
TN Weather News: காற்றழுத்த தாழ்வு நிலை.. தமிழ்நாட்டில் இன்று வெளுக்கப்போகும் கனமழை.. எங்கு?
TN Weather News: காற்றழுத்த தாழ்வு நிலை.. தமிழ்நாட்டில் இன்று வெளுக்கப்போகும் கனமழை.. எங்கு?
சிஎம் விஜய் கர்நாடகாவிற்கு வர வேண்டாம் - டி.கே.சிவக்குமார் திடீர் அறிவிப்பு - காரணம் என்ன.?
சிஎம் விஜய் கர்நாடகாவிற்கு வர வேண்டாம் - டி.கே.சிவக்குமார் திடீர் அறிவிப்பு - காரணம் என்ன.?
Embed widget