தை அமாவாசையை முன்னிட்டு முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய சுருளி அருவியில் குவிந்த பக்தர்கள்
தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள சுருளி அருவியில் முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் செய்ய குவிந்த மக்கள், அருவியில் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபாடு.
மாதந்தோறும் வரும் அமாவாசை காலங்களில் முன்னோர்களை நினைத்து பொதுமக்கள் வீடுகளிலேயே வழிபாடு நடத்துவது வழக்கம். ஆனால் ஆடி மற்றும் புரட்டாசி, தை மாதங்களில் வரும் அமாவாசை நாட்களில் அருகில் உள்ள நீர்நிலைகளுக்கு சென்று முன்னோர்களுக்கு திதி தர்ப்பணம் செய்ய எள்ளை நீரில் கரைத்து தர்ப்பணம் செய்வது வழக்கம்.
இதுபோன்ற காலங்களில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தால் முன்னோர்களின் ஆசி முழுமையாக கிடைக்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது. எனவே ஆண்டுதோறும் நீர்நிலைகளுக்கு சென்று தர்ப்பணம் செய்வதை பொதுமக்கள் வழக்கமாக கொண்டுள்ளனர். இந்த நிலையில் இந்த வருடம் இன்று தை மாத அமாவாசை வந்ததால் புனித ஸ்தலங்களில் தங்களின் முன்னோர்களுக்கு திதி , தர்பணம் செய்ய ஏராளமானோர் கூடினர்.
தேனி மாவட்டம் கம்பம் அருகே அமைந்துள்ளது சுருளி அருவி. இந்தச் சுருளி அருவியில் முப்பத்தி முன்னூரு தேவர்கள், என்னார் ரிசிமார்களும் வாழ்ந்ததாக வரலாறு உண்டு. இந்த சுருளி அருவியில் ஆண்டுதோறும் தை அமாவாசை, ஆடி அமாவாசை, சித்திரை முதல் நாள், மகாளய அமாவாசை போன்ற தினங்களில் சிறப்பான பூஜைகள் நடைபெறும்.
இந்த சிறப்பான அமாவாசை தினங்களில் முன்னோர்களுக்கு அதிகப்படியான தர்ப்பணம் செய்யும் நிகழ்ச்சி நடைபெறும். இந்த நிகழ்ச்சியில் குடும்பத்தார்கள் தங்களின் மறைந்த முன்னோர்களை நினைவில் கொண்டு அவருக்காக பிரார்த்தனை செய்து பரிகாரங்களை செய்து எள்ளும் தண்ணீர் மற்றும் பிண்டங்களை ஆற்றில் கரைத்து செல்வர். இதன் தொடர்ச்சியாக இன்று தை அமாவாசை என்பதால் சுருளி அருவியில் தர்ப்பணம் செய்வதற்கு ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.
சுருளி அருவி ஆற்றங்கரையில் பக்தர்கள் புரோகிதர்களை வைத்து தங்களின் மறைந்த முன்னோர்களுக்கு எள்ளு பிண்டம் வைத்து தர்ப்பணம் செய்தனர். முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வதற்கு தேனி மாவட்டம் மட்டுமின்றி தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் சுருளி அருவி மகிழ்ச்சியாக நீராடி சென்றனர்