Thaipusam 2025: தைப்பூச திருவிழா... பழனியில் பக்தர்களுக்காக இலவச பேருந்துகள் இயக்கம்
இன்று முதல் மூன்று நாட்களுக்கு பழனி மலைக்கோவிலில் கட்டணங்கள் ரத்து செய்யப்பட்டு பக்தர்கள் இலவச தரிசனம் செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது
பழனியில் இன்று முக்கிய நிகழ்வான வள்ளி , தெய்வானை, முத்துக்குமாரசாமி திருக்கல்யாணத்தை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக வருகை தந்து சண்முக நதி, இடும்பன் மலை, சரவண பொய்கை போன்ற புனித நதிகளில் நீராடி வருகின்றனர்.
அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் தைப்பூச திருவிழா கடந்த ஐந்தாம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி தொடர்ந்து பத்து நாட்கள் நடைபெற்று வருகிறது . ஒவ்வொரு நாளும் முருகப்பெருமான் வெள்ளி மயில், தங்கமயில், வெள்ளி ஆட்டுக்கிடா, வெள்ளி காமதேனு போன்ற அலங்காரத்தில் அருள் பாலித்து வருகிறார் இன்று 6 ஆம் திருவிழாவான இன்று முத்துக்குமாரசுவாமி வள்ளி, தெய்வானை திருக்கல்யாணம் இன்று மாலை பெரிய நாயகி அம்மன் கோவிலில் மாலை 6 மணிக்கு நடைபெறுகிறது.
அதனைத் தொடர்ந்து நாளை தைப்பூச திருவிழா மாலை நான்கு முப்பது மணிக்கு திருத்தேரோட்டம் நடைபெறுகிறது. இதற்காக பல்வேறு மாவட்டங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் காவடிகள் எடுத்தும் , அலகு குத்தியும் பாதயாத்திரையாக வருகை தந்து சண்முகநதி, இடும்பன்குளம், சரவணப் பொய்கை போன்ற நதிகளில் புனித நீராடி விட்டு பழனி கோவிலுக்கு சாமி தரிசனம் செய்து வருகின்றனர். பழனியில் லட்சக்கணக்கான பக்தர்கள வருகை புரிந்துள்ளதால் பாதுகாப்பு பணியில் 3,500 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
பழனியில் தைப்பூசத்தை முன்னிட்டு பாதயாத்திரை பக்தர்கள் வசதிக்காக இன்று முதல் மூன்று நாட்களுக்கு கட்டணமில்லாமல் அரசு நகர பேருந்துகள் இயக்கப்படுகிறது.
தைப்பூசத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் இருந்து ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாக பழனி முருகன் கோவிலுக்கு வந்த வண்ணம் உள்ளனர். பக்தர்கள் வசதிக்காக பேருந்து நிலையம், ரயில் நிலையம் மற்றும் சண்முக நதியில் இருந்து இன்று முதல் மூன்று நாட்களுக்கு அரசு நகர பேருந்துகள் இலவசமாக இயக்கப்படுகிறது. பக்தர்களின் வசதிக்காக இலவசமாக இயக்கப்படும் அரசு பேருந்துகளுக்கான கட்டணத்தை பழனி திருக்கோவில் நிர்வாகமே ஏற்றுக்கொள்கிறது.
இலவச அரசு பேருந்துகள் இயக்கத்தை பழனி கோவில் அறங்காவலர் குழு தலைவர் சுப்பிரமணி, நாடாளுமன்ற உறுப்பினர் சச்சிதானந்தம் ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர். இன்று முதல் 3 நாட்களுக்கு இலவசமாக பேருந்து இயக்கப்படுவது போலவே இன்று முதல் மூன்று நாட்களுக்கு பழனி மலைக்கோவிலில் கட்டணங்கள் ரத்து செய்யப்பட்டு பக்தர்கள் இலவச தரிசனம் செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்வில் திருக்கோவில் நிர்வாகிகள் போக்குவரத்து கழக உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அதேபோல் பாதயாத்திரையாக வரும் பக்தர்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பிச் செல்வதற்கு 300-க்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகள் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் இயக்கப்படுகிறது. பக்தர்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பி செல்லும் வகையில் போக்குவரத்து நெரிசலையும் பக்தர்கள் கூட்டத்தையும் கட்டுப்படுத்திய விதமாக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் பழனி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து கோவை, ஈரோடு, திருப்பூர், மார்க்கமாக மத்திய பேருந்து நிலையத்திலிருந்து புறப்படும் வகையிலும், காரைக்குடி ,தேவகோட்டை ,அறந்தாங்கி வழியாக செல்லும் பேருந்துகள் பழனி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இருந்தும் , திருச்சி, கரூர், கும்பகோணம் மார்க்கமாக செல்லும் வழித்தடங்கள் எல் ஐ சி அலுவலகம் அருகில் தற்காலிக பேருந்து நிலையத்தில் இருந்து செல்லும் வகையிலும் மூன்று பேருந்து நிலையம் அமைக்கப்பட்டு இயக்கப்படுகிறது. மேலும் நாளை முதல் சிறப்பு ரயில்களும் இயக்கப்படுகிறது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

