மேலும் அறிய

Thai Amavasai: தை அமாவாசையில் விரதம் மேற்கொள்ளும் முறை.. யார் விரதம் இருக்கலாம்? என்ன சாப்பிடலாம்? முழு விவரம்..

Thai Amavasai: இந்த ஆண்டு தை அமாவாசை வரும் சனிக்கிழமை (ஜனவரி 21ஆம் தேதி) கடைபிடிக்கப்படுகிறது. அன்றைய தினத்தில் விரதம் இருக்கும் முறைகள் பற்றி விரிவாக பார்க்கலாம்.

அமாவாசை என்பது இயல்பாகவே காலம் கடந்த முன்னோர் வழிபாட்டுக்கு மிகவும் சிறந்த நாள் ஆகும்.  சூரியனும், சந்திரனும் ஒரே ராசியில் இணைவதை அமாவாசை திதி என்பர்.  ஆண்டு முழுவதும் வரும் 12 அமாவாசைகளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பவர்களின் குடும்பம் அமைதி பெற்று, மென்மேலும் சிறந்து விளங்கும் என்று சாஸ்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த அண்டு தை அமாவாசை வரும் சனிக்கிழமை 21ஆம் தேதி வருகிறது. சனிக்கிழமை வரும் அமாவாசை மிகவும் பிரசித்தி பெற்றது. தை அமாவாசை தினத்தில் மறைந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தால், அவர்களின் அருளாசியால் எண்ணற்ற நன்மைகள் ஏற்படும். இந்த நாளில் முன்னோர்களை நினைத்து வணங்கி அவர்களுக்கு திதி கொடுக்கலாம். இதன்மூலம் நமது முன்னோர்களின் ஆசி கிடைக்கும். தை அமாவாசையில் முன்னோருக்கு உணவு, புத்தாடை படைத்து வழிபட்டு விட்டு, அவற்றை ஏழை எளியவர்களுக்கு தானமாக வழங்கினால் நன்மைகள் பல வந்து சேரும் என நம்பப்படுகிறது.  

விரதம் இருக்கும் முறை:

அமாவாசையன்று தர்ப்பணம் கொடுப்பவர்கள் விரதம் இருக்கலாம். முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கும்போது எதுவும் சாப்பிடாமல் விரதம் இருக்க வேண்டும். தர்ப்பணம் கொடுத்தபின் வழ்க்கம்போல் வீட்டில் சமைத்த உணவை சாப்பிடலாம்.

அமாவாசை நாளில் அகத்துக்கீரை அல்லது முருங்கை கீரை சாப்பிடலாம், மற்ற கீரைகளை சேர்க்கக்கூடாது. கத்திரிக்காய், வெங்காயம், பூண்டு, முள்ளங்கியை அன்றைய சமயலில் தவிர்க்க வேண்டும். புடலங்காய், வெண்டைக்காய் சேர்த்துக்கொள்ளலாம். அசைவ சாப்பாடை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.

வீட்டில் உள்ளவர்களோ அல்லது நெருங்கிய உறவுகளிலோ இறப்பு ஏற்பட்டு 16 நாட்கள் கூட ஆகவில்லை என்றாலும் தை அமாவாசை விரதம் இருக்கலாம். அவர்களுக்கும் தர்ப்பணம் கொடுக்கலாம். யார் தர்ப்பணம் கொடுக்கிறாரோ அவர் மட்டும் விரதம் இருக்க வேண்டும். மற்றவர்கள் சாப்பிடலாம். கணவர் தர்ப்பணம் கொடுப்பதாக இருந்தால், மனைவி சாப்பிடாமல் இருக்க வேண்டிய அவசியமில்லை. சாப்பிட்ட பிறகே படையலுக்கான உணவிவை தயார் செய்யலாம் எனக் கூறப்படுகிறது.

திருமணமான பெண்ணுக்கு தாய் அல்லது தந்தை இல்லை என்றாலோ அல்லது இருவரும் இல்லை என்றாலும் அவர் விரதம் இருக்க கூடாது. குறிப்பாக அவர் கணவர் இருந்தால் கண்டிப்பாக விரதம் கூடாது. அந்த பெண்ணுக்கு உடன் பிறந்த சகோதரர்கள் இருந்தால் அவர்கள் தான் அமாவாசை விரதம் இருந்து தர்ப்பணம் செய்ய வேண்டும். 

ஆண்கள் தாய் தந்தை இருக்கும் போது இந்த விரதத்தை கடைப்பிடிக்க வேண்டியதில்லை ஆனால் தாய் அல்லது தந்தை ஒருவர் இல்லையென்றாலும் இருவரும் இல்லையென்றாலும் இந்த அமாவாசை விரதத்தை கடைப்பிடிக்க வேண்டும். கண்டிப்பாக தர்ப்பணம் கொடுக்க வேண்டும். 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

ரெஸ்ட் ஓவர்.. எடப்பாடி கோட்டையில் விஜய்.! அடுத்த கட்ட பிரச்சாரத்திற்கு செம பிளான் போட்ட தவெக
ரெஸ்ட் ஓவர்.. எடப்பாடி கோட்டையில் விஜய்.! அடுத்த கட்ட பிரச்சாரத்திற்கு செம பிளான் போட்ட தவெக
Trump Vs India: 350% வரின்னு சொன்350% வரின்னு சொன்னேன், நிறுத்துனாங்க பாரு போர.! இந்தியா-பாக். போர்; மீண்டும் பேசிய ட்ரம்ப்
350% வரின்னு சொன்னேன், நிறுத்துனாங்க பாரு போர.! இந்தியா-பாக். போர்; மீண்டும் பேசிய ட்ரம்ப்
ஆளுநருக்கு ஆப்பா? மசோதாவை நிறுத்திவைக்க அதிகாரமில்லை- உச்ச நீதிமன்றம் அதிரடி
ஆளுநருக்கு ஆப்பா? மசோதாவை நிறுத்திவைக்க அதிகாரமில்லை- உச்ச நீதிமன்றம் அதிரடி
Chennai Power Cut: சென்னை மக்களே.! நவம்பர் 21-ம் தேதி பவர் கட் ஆகப் போற ஏரியா இதுதான்.. நோட் பண்ணிக்கோங்க
சென்னை மக்களே.! நவம்பர் 21-ம் தேதி பவர் கட் ஆகப் போற ஏரியா இதுதான்.. நோட் பண்ணிக்கோங்க
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

T.NAGAR தொகுதி யாருக்கு?பாஜகவின் பலே திட்டம் விட்டுக்கொடுக்குமா அதிமுக? | Chennai | BJP Election Plan
அதிகாரி நெஞ்சுவலி நாடகம் “சார் இப்படி நடிக்காதீங்க” தவெகவினர் ஆர்ப்பாட்டம் | Officer Fake Heart Attack
Kovi Chezhiyan Event Issue|மேடையில் பேசிய கோவி.செழியன்போதையில் தள்ளாடிய அதிகாரி விழாவில் சலசலப்பு
KN Nehru | ’’அண்ணே என் காரை ஓட்டுங்க’’ஆசையாய் கேட்ட திமுக நிர்வாகி உடனே நிறைவேற்றிய K.N.நேரு
கோவை, மதுரைக்கு NO METRO ஏன், பின்னணி என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ரெஸ்ட் ஓவர்.. எடப்பாடி கோட்டையில் விஜய்.! அடுத்த கட்ட பிரச்சாரத்திற்கு செம பிளான் போட்ட தவெக
ரெஸ்ட் ஓவர்.. எடப்பாடி கோட்டையில் விஜய்.! அடுத்த கட்ட பிரச்சாரத்திற்கு செம பிளான் போட்ட தவெக
Trump Vs India: 350% வரின்னு சொன்350% வரின்னு சொன்னேன், நிறுத்துனாங்க பாரு போர.! இந்தியா-பாக். போர்; மீண்டும் பேசிய ட்ரம்ப்
350% வரின்னு சொன்னேன், நிறுத்துனாங்க பாரு போர.! இந்தியா-பாக். போர்; மீண்டும் பேசிய ட்ரம்ப்
ஆளுநருக்கு ஆப்பா? மசோதாவை நிறுத்திவைக்க அதிகாரமில்லை- உச்ச நீதிமன்றம் அதிரடி
ஆளுநருக்கு ஆப்பா? மசோதாவை நிறுத்திவைக்க அதிகாரமில்லை- உச்ச நீதிமன்றம் அதிரடி
Chennai Power Cut: சென்னை மக்களே.! நவம்பர் 21-ம் தேதி பவர் கட் ஆகப் போற ஏரியா இதுதான்.. நோட் பண்ணிக்கோங்க
சென்னை மக்களே.! நவம்பர் 21-ம் தேதி பவர் கட் ஆகப் போற ஏரியா இதுதான்.. நோட் பண்ணிக்கோங்க
Mallai Sathya New Party: தவெகவுக்கு போட்டியாக திவெக? மதிமுக மாஜி மல்லை சத்யா புதுக்கட்சி பெயர் தெரியுமா?
Mallai Sathya New Party: தவெகவுக்கு போட்டியாக திவெக? மதிமுக மாஜி மல்லை சத்யா புதுக்கட்சி பெயர் தெரியுமா?
SC President: குடியரசு தலைவரின் 14 கேள்விகள் - லிஸ்ட் போட்டு பதிலளித்த உச்சநீதிமன்றம் - ”ரெண்டு பக்கமும் குத்து”
SC President: குடியரசு தலைவரின் 14 கேள்விகள் - லிஸ்ட் போட்டு பதிலளித்த உச்சநீதிமன்றம் - ”ரெண்டு பக்கமும் குத்து”
‘தூத்துக்குடி மாவட்ட மக்களே - வருகிறது விமான பயிற்சி பள்ளி’ எங்கு தெரியுமா..?
‘தூத்துக்குடி மாவட்ட மக்களே - வருகிறது விமான பயிற்சி பள்ளி’ எங்கு தெரியுமா..?
SUV: காம்பேக்ட் எஸ்யுவி மீது வெறி பிடித்து திரியும் இந்தியர்கள்.. என்ன காரணம்? நகரங்களில் செய்யும் மேஜிக்?
SUV: காம்பேக்ட் எஸ்யுவி மீது வெறி பிடித்து திரியும் இந்தியர்கள்.. என்ன காரணம்? நகரங்களில் செய்யும் மேஜிக்?
Embed widget