மேலும் அறிய

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் பங்குனி தேரோட்டம் - ஆயிரகணக்கான பக்தர்கள் தரிசனம்

திருச்சி மாவட்டம் , ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் பங்குனி தேரோட்டம் கோலாகலமாக நடந்தது. மேலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு.

பூலோக வைகுண்டம் என்று போற்றப்படுவதும், 108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானதுமான ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதத்தில் ஆதிபிரம்மோற்சவம் எனப்படும் பங்குனி தேர்த்திருவிழா 11 நாட்கள் வெகுவிமரிசையாக நடைபெறும். அதன்படி இந்த ஆண்டுக்கான பங்குனி தேர்த்திருவிழா கடந்த 28-ந் தேதி காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவை முன்னிட்டு உற்சவர் நம்பெருமாள் தினமும் ஸ்ரீரங்கம் மற்றும் சுற்றுப்பகுதிகளில் மண்டகப்படிகளுக்கு சென்று வந்தார். உற்சவத்தின் சிறப்பு நிகழ்ச்சிகளில் ஒன்றான நம்பெருமாள்-ரெங்கநாயகி தாயார் சேர்த்தி சேவை நேற்று முன்தினம் மாலை தொடங்கி நேற்று காலை வரை நடந்தது. மேலும் விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பங்குனி தேர் எனப்படும் கோ ரத புறப்பாடு நேற்று நடந்தது. இதற்கென தாயார் சன்னதி சேர்த்தி உற்சவத்தில் இருந்தபடி உற்சவர் நம்பெருமாள் நேற்று காலை 9 மணியளவில் பச்சை சாதரா பட்டுடுத்தி, முத்துவளையக் கொண்டை, கஸ்தூரி திலகம், கவுஸ்துபம் எனப்படும் நீலமணிநாயகம், ரத்தின அபயஹஸ்தம் உள்பட பல்வேறு சிறப்பு திருவாபரணங்கள் அணிந்து தேருக்கு புறப்பட்டார். அங்கிருந்து சித்திரை வீதி வடகிழக்கு மூலையில் நின்றிருந்த கோ ரதத்தில் காலை 10 மணியளவில் எழுந்தருளினார். இதைத்தொடர்ந்து காலை 10.45 மணியளவில் உள்ளூர் பிரமுகர்கள் முன்னிலையில் கோரதம் வடம் பிடிக்கப்பட்டது.
 

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் பங்குனி தேரோட்டம் - ஆயிரகணக்கான பக்தர்கள் தரிசனம்
 
இதனை தொடர்ந்து அப்போது அங்கு கூடியிருந்த திரளான பக்தர்கள், கஸ்தூரி ரங்கா... காவேரி ரங்கா... என பக்தி பரவசத்துடன் முழங்கியவாறு தேரை வடம்பிடித்து இழுத்தனர். கீழச்சித்திரை வீதி, தெற்கு சித்திரை வீதி, மேலச்சித்திரை வீதி மற்றும் வடக்கு சித்திரை வீதிகள் வழியாக தேர் ஆடி அசைந்து வந்து மதியம் 3.15 மணியளவில் மீண்டும் நிலையை அடைந்தது. தேரோட்டத்தை முன்னிட்டு மாநகராட்சி மற்றும் கோவில் நிர்வாகம் ஆகியவை சார்பில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். மாலையில் தேரில் இருந்து பெருமாள் கோவிலுக்கு எழுந்தருளினார். இரவில் சப்தாவரணமும், இன்று 7-ந் தேதி இரவு ஆளும் பல்லக்கு உலாவும் நடந்து பங்குனித்திருவிழா நிறைவுபெறும். விழாவிற்கான ஏற்பாடுகளை ஸ்ரீரங்கம் கோவில் இணை ஆணையர் மாரிமுத்து, அர்ச்சகர்கள், ஸ்தானீகர்கள், அலுவலர்கள், பணியாளர்கள் செய்திருந்தனர்.
 

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

"காவிரி பொங்கி வரணும்!" - கண்ணீரும் பக்தியுமாக ஆடிப்பெருக்கை கொண்டாடிய மயிலாடுதுறை மக்கள்.
Aadi Peruku: நாளை ஆடிப்பெருக்கு! கண்டிப்பாக செய்ய வேண்டிய விஷயங்கள் என்னென்ன?
Aadi Peruku: நாளை ஆடிப்பெருக்கு! கண்டிப்பாக செய்ய வேண்டிய விஷயங்கள் என்னென்ன?
கும்பகோணம் அருகே நூதன அக்னி ஆணி தீமிதி திருவிழா: நூற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
கும்பகோணம் அருகே நூதன அக்னி ஆணி தீமிதி திருவிழா: நூற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
அனல் பறந்த தீக்குண்டம்... சிலிர்க்க வைத்த பக்தி! மாமாகுடி மாரியம்மன் கோயிலில் திரண்ட பக்தர்கள்!
அனல் பறந்த தீக்குண்டம்... சிலிர்க்க வைத்த பக்தி! மாமாகுடி மாரியம்மன் கோயிலில் திரண்ட பக்தர்கள்!

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Stalin: “நான் சிங்கிள் மீனிங்கில் தான் பேசினேன், பயப்பட மாட்டேன், மீண்டும் பேசுவேன்“; உதயநிதி அதிரடி பேட்டி
“நான் சிங்கிள் மீனிங்கில் தான் பேசினேன், பயப்பட மாட்டேன், மீண்டும் பேசுவேன்“; உதயநிதி அதிரடி பேட்டி
CM Vijay : ’கைது செய்யப்பட்ட உதயநிதி – போராட்டத்தில் இறங்கிய திமுகவினர்’ கூலாக ஆய்வுக் கூட்டம் நடத்திய முதல்வர் விஜய்..!
’கைது செய்யப்பட்ட உதயநிதி’ கூலாக ஆய்வுக் கூட்டம் நடத்திய முதல்வர் விஜய்..!
CM Vijay VS DMK: உதயநிதி ஸ்டாலின் கைது.. திமுக-வினருக்கு முதலமைச்சர் விஜய்யின் வார்னிங்!
CM Vijay VS DMK: உதயநிதி ஸ்டாலின் கைது.. திமுக-வினருக்கு முதலமைச்சர் விஜய்யின் வார்னிங்!
CLAT: கிளாட் நுழைவுத் தேர்வுக்கான பதிவு தொடக்கம்: அக். 31 வரை விண்ணப்பிக்கலாம்; முழு விவரங்கள்
CLAT: கிளாட் நுழைவுத் தேர்வுக்கான பதிவு தொடக்கம்: அக். 31 வரை விண்ணப்பிக்கலாம்; முழு விவரங்கள்
MK STALIN : தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும் .! தவெகவின் பாசிச தன்மைக்கு விழுந்த அடி- ஸ்டாலின்
தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும் .! தவெகவின் பாசிச தன்மைக்கு விழுந்த அடி- மு.க.ஸ்டாலின்
Oppo A7 Pro Max: 10,000mAh மெகா பேட்டரியுடன் தனது முதல் 5ஜி ஃபோனை வெயிட்டாக இறக்கிய ஓப்போ.! விலை, அம்சங்கள் என்ன.?
10,000mAh மெகா பேட்டரியுடன் தனது முதல் 5ஜி ஃபோனை வெயிட்டாக இறக்கிய ஓப்போ.! விலை, அம்சங்கள் என்ன.?
Trump Vs Pakistan: சீன் போட்டு சுற்றிவந்த பாகிஸ்தான்; மூக்கை உடைத்துவிட்ட ட்ரம்ப்; பல்பு வாங்கிய ஷாபாஸ்-முனீன்.! நடந்தது என்ன.?
சீன் போட்டு சுற்றிவந்த பாகிஸ்தான்; மூக்கை உடைத்துவிட்ட ட்ரம்ப்; பல்பு வாங்கிய ஷாபாஸ்-முனீன்.! நடந்தது என்ன.?
BYD Festive Offers India: ஒன்னு ரெண்டு இல்ல, ஏகப்பட்ட ஆஃபர்.! பண்டிகைக்கால சலுகைகளை வாரி வழங்கும் BYD; ஐடியா இருந்தா முந்துங்க.!
ஒன்னு ரெண்டு இல்ல, ஏகப்பட்ட ஆஃபர்.! பண்டிகைக்கால சலுகைகளை வாரி வழங்கும் BYD; ஐடியா இருந்தா முந்துங்க.!
Embed widget