சிவகங்கையில் பள்ளிவாசல் திறப்பு விழா; சீர்வரிசை கொண்டு வந்த இந்துக்கள், கிறிஸ்தவர்கள்
தொடர்ந்து இது போன்ற நல்ல நிகழ்வுகள் நடக்க வேண்டும். அப்போது தான் பிரிவினைகள் குறைந்து மக்கள் அமைதியாக வாழமுடியும்.
சாலைக்கிராமம் பள்ளிவாசல் திறப்பு விழாவில் மத நல்லிணக்கத்தை போற்றும் வகையில் இந்துக்கள், கிறிஸ்தவர்கள் சார்பில் சீர்வரிசை கொண்டு வந்தனர்.
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே சாலைக்கிராமத்தில் மஸ்ஜிதே இலாஹி பள்ளிவாசல் திறக்கப்பட்டது. இந்த விழாவை முஸ்லிம்கள் மட்டுமின்றி அக்கிராமத்தில் உள்ள இந்துக்கள், கிறிஸ்தவர்கள் என அனைத்து மதத்தினரும் கொண்டாடினர். ஊர் முழுவதும் முக்கிய வீதிகள் மற்றும் சந்திப்புகள், பஸ் ஸ்டாண்ட் ஆகிய பகுதிகளில் அனைத்து மதத்தினரும் விழாவை வரவேற்று பேனர்கள் வைத்திருந்தனர்.
#sivagangai | சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே உள்ளது, சாலைக்கிராமம். இங்கு பள்ளிவாசல் திறப்பு விழாவில் மத நல்லிணக்கத்தை போற்றும் வகையில் இந்துகள், கிறிஸ்தவர்கள் சார்பில் சீர்வரிசை கொண்டு வந்தனர்.
— arunchinna (@arunreporter92) January 23, 2024
Further reports to follow - @abpnadu@AgencyTamil | @k_for_krish | @abplive |. pic.twitter.com/zyLlYoKhwa
மேலும், இந்துக்கள் தாம்பூலத்தில் நெல்மணிகள், மிளகாய், வெற்றிலை பாக்கு ஆகியவற்றை சீர்வரிசையாக பள்ளிவாசலுக்கு எடுத்துச் சென்றனர். அதேபோல் கிறிஸ்தவர்கள் பாதிரியார் ரமேஷ் தலைமையில் மெழுகுவர்த்தி, பழங்களை சீர்வரிசையாக கொண்டுச் சென்றனர். சீர் வரிசை கொன்டு வந்த இருமதத்தினரையும் சாலைக்கிராமம் பள்ளிவாசல் ஜமாத் தலைவர் நைனா முகம்மது தலைமையில், ஜமாத் உறுப்பினர்கள் மற்றும் அல்பத்ரு வாலிபர் முன்னேற்ற சங்கம் நண்பர்கள் ஆரதழுவி வரவேற்று பள்ளிவாசலுக்குள் அழைத்துச் சென்றனர்.
- MNM Meeting: நாடாளுமன்ற தேர்தலுக்கு என்ன செய்யலாம்? - மநீம நிர்வாகிகளுடன் கமல் இன்று அவசர ஆலோசனை
பின் குளிர் பானங்கள், தண்ணீர் கொடுத்து தங்களது அன்பை வெளிப்படுத்தினர். பின்னர் 150 கிடா வெட்டி 7 ஆயிரம் பேருக்கு கமகமக்கும் அசைவ பிரியாணி வழங்கப்பட்டது. மத நல்லிணக்கத்தை போற்றும் வகையில் நடைபெற்ற இவ்விவிழா, அப்பகுதி மக்களிடையே மன நெகிழ்ச்சி மற்றும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
இதுகுறித்து சாலை கிராம பொதுமக்கள் சிலர் கூறுகையில், ”சிவகங்கை மாவட்டத்தில் மதநல்லிணக்க விழாக்கள் பாரம்பரியமாக நடைபெற்று வருகிறது. குறிப்பாக காரைக்குடி, தேவகோட்டை, திருப்புவனம், மானாமதுரை என பல இடங்களில் மத நல்லிணக்கத்தை போற்றும் வகையில் திருவிழாக்கள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சாலைகிராமத்திலும் இது போன்ற நல்ல விசயம் அரங்கேருவது ஆரோக்கியமானது. ஊர் முழுவதும் முக்கிய வீதிகள் மற்றும் சந்திப்புகள், பஸ் ஸ்டாண்ட் ஆகிய பகுதிகளில் அனைத்து மதத்தினரும் விழாவை வரவேற்று பேனர்கள் வைத்திருந்தனர். இஸ்லாமிய தோழர்கள் எங்களை மசூதிக்குள் அழைத்துச் சென்று மரியாதை செய்தனர். இது மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. தொடர்ந்து இது போன்ற நல்ல நிகழ்வுகள் நடக்க வேண்டும். அப்போது தான் பிரிவினைகள் குறைந்து மக்கள் அமைதியாக வாழமுடியும்” என்று தெரிவித்தனர்.
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - TN Fishermen: மீண்டும் அட்டூழியம்..! தமிழக மீனவர்கள் 6 பேரை சிறைபிடித்த இலங்கை கடற்படை
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - PMK Meeting: சூடுபிடிக்கும் நாடாளுமன்ற தேர்தல் - பிப்ரவரி 1ல் பாமக பொதுக்குழு கூட்டம், கூட்டணி முடிவு வெளியாகுமா?