September 2024 Festival: விநாயகர் சதுர்த்தி முதல் மிலாடி நபி வரை! செப்டம்பர் மாதத்தில் எந்த தேதியில் என்னென்ன விழா?
September Festival 2024 List: விநாயகர் சதுர்த்தி, ஓணம் பண்டிகை உள்ளிட்ட விசேஷங்கள் வரும் செப்டம்பர் மாதத்தில் என்னென்ன விழா எந்த நாளில் என்பதை கீழே விரிவாக காணலாம்.
![September 2024 Festival: விநாயகர் சதுர்த்தி முதல் மிலாடி நபி வரை! செப்டம்பர் மாதத்தில் எந்த தேதியில் என்னென்ன விழா? September Festival 2024 full details including Vinayagar Chaturthi, onam date and day know full details here September 2024 Festival: விநாயகர் சதுர்த்தி முதல் மிலாடி நபி வரை! செப்டம்பர் மாதத்தில் எந்த தேதியில் என்னென்ன விழா?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/08/28/ed986c66c76b90146ab60db1971a9d711724832027750109_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
September 2024 Festival: செப்டம்பர் 1ம் தேதி வரும் ஞாயிற்று கிழமை பிறக்கிறது. வரும் செப்டம்பர் மாதத்தில் ஆவணி மாதமும், புரட்டாசி மாதமும் கலந்து வருகிறது. செப்டம்பர் மாதத்தில் எந்தெந்த நாளில் என்னென்ன விசேஷங்கள் வருகிறது? என்பதை கீழே விரிவாக காணலாம்.
செப்டம்பர் 1ம் தேதி - மாத சிவராத்திரி ( ஞாயிறு)
செப் 2ம் தேதி - அமாவாசை , சோமவார விரதம் ( திங்கள்)
செப் 4ம் தேதி - சந்திர தரிசனம் (புதன்)
செப் 5ம் தேதி - ஆசிரியர் தினம் ( வியாழன்)
செப் 7ம் தேதி - விநாயகர் சதுர்த்தி ( சனி)
செப் 8ம் தேதி - ரிஷி பஞ்சமி , தேவமாதா பிறந்த நாள் (ஞாயிறு)
செப் 9ம் தேதி - சஷ்டி விரதம்( திங்கள்)
செப் 11ம் தேதி - மஹாலக்ஷ்மி விரதம், ராதாஷ்டமி, பாரதியார் நினைவு நாள் (புதன்)
செப் 14ம் தேதி - ஏகாதசி விரதம் (சனி)
செப் 15ம் தேதி - பிரதோஷம் , ஓணம் , திருவோண விரதம் (ஞாயிறு)
செப் 16ம் தேதி - விஸ்வகர்மா ஜெயந்தி , கன்னி சங்கராந்தி , மிலாதுன் நபி ( திங்கள்)
செப் 17ம் தேதி - சபரிமலையில் நடை திறப்பு , பௌர்ணமி விரதம் , விநாயகர் சிலைகள் விசர்ஜனம் (செவ்வாய் )
செப் 18ம் தேதி - மகாளய பட்சம் ஆரம்பம் , பௌர்ணமி (புதன்)
செப் 21ம் தேதி - சங்கடஹர சதுர்த்தி விரதம் (சனி)
செப் 22ம் தேதி - கார்த்திகை விரதம் ( ஞாயிறு)
செப் 24ம் தேதி - மஹாலக்ஷ்மி விரதம் முடிவு (செவ்வாய் )
செப் 28ம் தேதி - ஏகாதசி விரதம் (சனி)
செப் 29ம் தேதி - பிரதோஷம் (ஞாயிறு)
செப் 30ம் தேதி - மாத சிவராத்திரி ( திங்கள்)
இதில் செப்டம்பர் 7ம் தேதி வரும் விநாயகர் சதுர்த்தி வருகிறது. இந்த மாதத்தில் வரும் இந்த பண்டிகை இந்தியா முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. கேரளாவின் மிக பெரிய பண்டிகையான ஓணம் பண்டிகை வரும் செப்டம்பர் 15ம் தேதி கொண்டாடப்படுகிறது. செப்டம்பர் 16ம் தேதி மிலாடி நபி கொண்டாடப்படுகிறது. இந்த மூன்று பண்டிகையும் இந்த மாதத்தில் வரும் முக்கிய விசேஷங்கள் ஆகும்.
இந்த மாதத்தில் மொத்தம் 5 முகூர்த்த நாட்கள் வருகிறது. செப்டம்பர் 5ம் தேதி (ஆவணி 20) வியாழனில் முதல் முகூர்த்தம் வருகிறது. அடுத்த நாளான செப்டம்பர் 6ம் தேதி (ஆவணி 21) வெள்ளி கிழமையும், செப்டம்பர் 8ம்
தேதி (ஆவணி 23) ஞாயிற்றுகிழமை முகூர்த்த நாள் ஆகும். செப்டம்பர் 15ம் தேதி (ஆவணி 30) ஞாயிறு மற்றும் இந்த மாத கடைசி முகூர்த்த நாளாக செப்டம்பர் 16ம் தேதி (ஆவணி 31) திங்கள்கிழமை வருகிறது. இந்த முகூர்த்த நாட்கள் அனைத்தும் வளர்பிறையில் வருகிறது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)