சபரிமலை செல்லும் பக்தர்களே உங்களுக்காக புதிய ஆப் அறிமுகம் - என்னென்ன வசதிகள் உள்ளன?
நாடு முழுவதும் இருந்து சபரிமலை ஐயப்பன் சுவாமி கோவிலுக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக கேரள அரசு Swami chatbot என்ற செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது
நாடு முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதம் தொடங்கிவிட்டாலே ஐயப்ப பக்தர்கள் மாலை அணிவித்து 48 நாட்கள் விரதம் மேற்கொண்டு தினமும் காலை, மாலை ஐயப்ப சுவாமியை வணங்கி கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலைக்கு சென்று ஐயப்ப சுவாமியை தரிசிப்பது ஜதீகமாக பின்பற்றப்பட்டு வருகின்றனர்.
பிற கோயில்கள் போல ஐயப்பன் கோயில் அனைத்து நாட்களும் திறக்கப்படாது. கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றவையாகும். இந்த கோயிலுக்குச் செல்ல மாலை அணிந்து கடுமையான விரதம் இருந்து மலையேறி பக்தர்கள் ஐயப்பன் சாமியை வழிபடுவார்கள். ஒவ்வொரு மாதத்தின் 5 நாட்களும் சபரிமலை ஐயப்பன் கோயிலின் நடை திறக்கப்படுவது வழக்கம். சபரிமலையில் ஐயப்பனுக்கு 41 நாட்கள் நடைபெற்ற சிறப்பு பூஜைகளுக்கு பின்னர் தங்க அங்கி அணிவிக்கப்பட்டு மண்டலபூஜை நடைபெறும்.
Kanguva: "கங்குவா படத்தின் முதல் அரைமணி நேரம் சுமார்தான்.. ஆனால்" சூர்யா மனைவி ஜோதிகா ஆதங்கம்
இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சரண கோஷத்துடன் தரிசனம் செய்வார்கள். சபரிமலை ஐயப்பன் கோவிலில் இந்த ஆண்டுக்கான மண்டல பூஜை அடுத்த மாதம் (டிசம்பர்) 26-ந்தேதி நடை பெறுகிறது. இதற்காக கோவில் நடை வருகிற நேற்றைய முன்தினம்15-ந்தேதி மாலை திறக்கப்பட்டது. பக்தர்கள் கூட்ட நெரிசலில் சிக்காமல் சாமி தரிசனம் செய்வதற்கு பல்வேறு புதிய நடைமுறைகள் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
"பைடனை போன்று மோடிக்கும் இந்த பிரச்னை இருக்கு" ராகுல் காந்தி கலாய்!
சபரிமலை ஐயப்பன் கோவில் பக்தர்களின் வசதிக்காக கேரள மாநில அரசு பல்வேறு வசதிகளை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு உதவும் வகையில் பூஜைகள் செய்யும் நேரம், போக்குவரத்து வசதிகள் பற்றி தெரிந்துக் கொள்ளும் வகையில் Swami chatbot என்ற செயலியை அறிமுகம் செய்துள்ளது கேரள அரசு. இந்த செயலில் AI (Artificial intelligence) தொழில் நுட்ப வசதிகள் நிறைந்து தமிழ், ஆங்கிலம், இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஆகிய ஆறு மொழிகளில் பக்தர்கள் அறிந்து கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
சபரிமலை செல்லும் பக்தர்கள் சபரிமலையில் கோவில் நடை திறப்பு, பூஜை நேரம், வெளி மாநிலத்திலிருந்து வரும் பக்தர்களுக்கு பாதை தடம் மாறாமல் சபரிமலை கோவில் வந்தடைய வேண்டிய பல்வேறு வழித்தடங்களை காண்பிக்கும் விதமாக இந்த செயலி வடிவமைக்கப்பட்டுள்ளதால் சபரிமலைக்கு வரும் ஐயப்ப பக்தர்கள் செயலி மூலம் பயன்பெறுமாரு அறிவுறுத்தப்பட்டுள்ளது.