மேலும் அறிய

Sabarimala Temple : பக்தர்கள் பாதுகாப்புதான் முக்கியம்.. இனிமே சபரிமலை கோயிலுக்கு இந்த வாகனங்களில் வர தடை..

Sabarimala Temple : சபரிமலை கோயிலுக்கு ஆட்டோ, சரக்கு வாகனங்களில் பயணிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

Sabarimala Temple: கேரளாவில் உள்ள சபரிமலை (Sabarimala Temple) கோயிலின் பிரசிதி பெற்ற மகரவிளக்கு விழாவிற்கு வருகை தரும் பக்தர்கள் ஆட்டோ, டெம்போ டிராவல் உள்ளிட்ட சரக்கு வாகனங்களில் வர வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

சபரிமலையில் மணடல, மகரவிளக்கு பூஜைக்காக ஆண்டுதோறும் 60 நாட்கள் நடைதிறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறும், இந்தாண்டு வரும் 16-ஆம் தேதி ஐயப்பன் கோயில் திறக்கப்பட உள்ளது. இந்நிலையில், ஐயப்பனை தரிசிக்க வரும் பக்தர்களின் பாதுகாப்பு கருதி  கோயிலுக்கு வருவதற்கு பயணத்திற்காக ஆட்டோ, டெம்போ டிராவல், சிறிய வேன்கள் மற்றும் சரக்கு போக்குவரத்திற்காக பயன்படுத்தப்படும் வாகனங்கள் தடை விதிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில போக்குவரத்து துறை அமைச்சர் ஆன்டனி ராஜூ (Antony Raju) தெரிவித்துள்ளார்.

இந்தாண்டு மகரவிளக்கு பூஜைக்கு கடந்த ஆண்டைவிட இம்முறை பக்தர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், பக்தர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு சரக்கு வாகனங்கள், ஆட்டோக்களில் பக்தர்கள் சபரிமலைக்கு வர தடை விதிக்கப்பட்டு உள்ளது.

சிறப்பு பேருந்து வசதி:

பக்தர்களின் பாதுகாப்பான பயணத்திற்காக நிலக்கல்- பம்பை இடையே தினமும் 200 பேருந்துங்கள் இயக்கப்பட இருக்கிறது.  மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் 300 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  மகர விளக்கு பூஜை தினத்தன்று ஆயிரம் பேருந்துகள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மகர ஜோதியை தரிசிக்க பல்வேறு மாநிலங்களில் இருந்து சபரிமலை வரும் பக்தர்கள், அதிக நபர்கள் குழுவாக பயணிக்கிறார்கள் எனில் அவர்களுக்கு கேரள போக்குவரத்து கழகம் சார்பில் தனி பேருந்து வசதி செய்து தரப்படும்.  குறைந்தது 40 நபர்கள் இருந்தால் மட்டுமே தனி பேருந்து வழங்கப்படும். மூத்த குடிமக்களுக்கு  தனி வரிசை அமைக்கப்படும் என்று போக்குவரத்து துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மகரவிளக்கு பூஜை:

கேரள மட்டுமின்றி தமிழகம், கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் சபரிமலை கோயிலுக்கு வருவது வழக்கம். சபரி மலைக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்த வண்ணமே உள்ளது. எனினும், கொரோனா பரவல் மற்றும கட்டுப்பாடுகள் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக ஐயப்பன் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

தற்போது கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு பக்தர்கள் தரிசனத்தற்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.மாதாந்திர பூஜைக்காக அக்டோபர் 17-ஆம் தேதி சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டது.  மேலும் ஐயப்பன் திருக்கோயிலில் இந்தாண்டுக்கான மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு பூஜைக்காக நவம்பர் மாதம் 15-ஆம் மாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட உள்ளது.

இதனை அடுத்து சபரிமலை கோயிலில் மகர, மண்டல பூஜைக்காக பக்தர்கள் நவம்பர் 16ம் தேதி முதல் அனுமதிக்கப்பட உள்ளனர். சுவாமி தரிசனம் செய்ய பக்தர்கள் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்ய வேண்டும் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்த பக்தர்கள் மட்டுமே சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என கூறப்பட்டுள்ளது. முன்பதிவு செய்யும் பக்தர்கள் அனைவருக்கு சுவாமி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் பக்தர்களின் வசதிக்காக நிலக்கல்லில் உடனடி தரிசன முன்பதிவுக்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. கேரள அரசின் உத்தரவுக்கு இணங்க சுவாமி தரிசனம் செய்ய வரும் அனைத்து பக்தர்களும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முகக்கவசம் அணிந்துவர வேண்டும் என திருவிதாங்கூர் தேவஸ்தானம் கேட்டுக் கொண்டுள்ளது.

நவம்பர் 16 -ஆம் தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்படும் நடை, அத்துடன் மண்டலப் பூஜைகள் முடிவடைந்து டிசம்பர் 27 -ஆம் தேதி இரவு 10 மணிக்குதான் நடை சாத்தப்படும்.

பின்பு மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை சுவாமி ஐயப்பன் கோயிலின் நடை டிசம்பர் 30 ஆம் தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்படும் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதில் உலகப் புகழ்ப்பெற்ற மகர விளக்கு பூஜை மற்றும் மகர ஜோதி தரிசனம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 14ஆம் தேதி நடைபெறும். இதற்கு அடுத்து மகர விளக்கு பூஜை நிறைவடைந்து ஜனவரி 20ம் தேதி கோயிலின் நடை சாத்தப்படும். இந்நிலையில் கேரள மாநிலத்தின் விஷு வருட பிறப்புக்கு ஏப்ரல் 10ஆம் தேதி முதல் ஏப்ரல் 18ஆம் தேதி வரை திறக்கப்படும். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"கூட்டத்தை கூட்டுங்க" தேர்தல் பிரச்சாரம் கேன்சல்.. டெல்லி விரைந்த அமித் ஷா!
Pushpa 2 Trailer: ’புஷ்பா’ங்கிறது பெயர் இல்ல; ப்ராண்ட்! வெளியானது ட்ரெய்லர்- மிரட்டல் லுக்கில் அல்லு அர்ஜூன்!
Pushpa 2 Trailer: ’புஷ்பா’ங்கிறது பெயர் இல்ல; ப்ராண்ட்! வெளியானது ட்ரெய்லர்- மிரட்டல் லுக்கில் அல்லு அர்ஜூன்!
திட்டமிட்ட சதியா? 10 பச்சிளம் குழந்தைகளின் உயிரை பறித்த விபத்துக்கு காரணம் என்ன? பகீர் ரிப்போர்ட்!
திட்டமிட்ட சதியா? 10 பச்சிளம் குழந்தைகளின் உயிரை பறித்த விபத்துக்கு காரணம் என்ன? பகீர் ரிப்போர்ட்!
உதவிப் பேராசிரியர் பணிக்கான வயது வரம்பை 59 ஆக உயர்த்துக; போட்டித்தேர்வு அறிவிப்பு எப்போது?
உதவிப் பேராசிரியர் பணிக்கான வயது வரம்பை 59 ஆக உயர்த்துக; போட்டித்தேர்வு அறிவிப்பு எப்போது?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kasthuri Arrest : நடிகை கஸ்தூரி கைது போலீஸ் போட்ட ரகசிய ஸ்கெட்ச் ஹைதராபாத்தில் அதிரடி!Nayanthara Vs Dhanush : PUBLICITY தேடும் நயன்தாரா!கல்யாண வீடியோவுக்கு PROMOTION!ஊறுகாவா தனுஷ்?Kasthuri Arrest : ஹைதராபாத் to சென்னை..!காவல்நிலையத்தில் கஸ்தூரி சிரித்த முகத்துடன் ஆஜர்Rahul Eating Poha : ’’ஆஹா…என்ன ருசி’’ ரோட்டுக்கடை போஹா!ருசித்து சாப்பிட்ட ராகுல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"கூட்டத்தை கூட்டுங்க" தேர்தல் பிரச்சாரம் கேன்சல்.. டெல்லி விரைந்த அமித் ஷா!
Pushpa 2 Trailer: ’புஷ்பா’ங்கிறது பெயர் இல்ல; ப்ராண்ட்! வெளியானது ட்ரெய்லர்- மிரட்டல் லுக்கில் அல்லு அர்ஜூன்!
Pushpa 2 Trailer: ’புஷ்பா’ங்கிறது பெயர் இல்ல; ப்ராண்ட்! வெளியானது ட்ரெய்லர்- மிரட்டல் லுக்கில் அல்லு அர்ஜூன்!
திட்டமிட்ட சதியா? 10 பச்சிளம் குழந்தைகளின் உயிரை பறித்த விபத்துக்கு காரணம் என்ன? பகீர் ரிப்போர்ட்!
திட்டமிட்ட சதியா? 10 பச்சிளம் குழந்தைகளின் உயிரை பறித்த விபத்துக்கு காரணம் என்ன? பகீர் ரிப்போர்ட்!
உதவிப் பேராசிரியர் பணிக்கான வயது வரம்பை 59 ஆக உயர்த்துக; போட்டித்தேர்வு அறிவிப்பு எப்போது?
உதவிப் பேராசிரியர் பணிக்கான வயது வரம்பை 59 ஆக உயர்த்துக; போட்டித்தேர்வு அறிவிப்பு எப்போது?
விஜய்க்கு ஸ்கெட்ச் போட்டு தரும் தமிழர்.. தவெகவின் அரசியல் ஆலோசகர் யார்?
விஜய்க்கு ஸ்கெட்ச் போட்டு தரும் தமிழர்.. தவெகவின் அரசியல் ஆலோசகர் யார்?
சளி, இருமல் பிரச்னையா?நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் சூப்பர் உணவு!
சளி, இருமல் பிரச்னையா?நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் சூப்பர் உணவு!
80 சீட்.. துணை முதல்வர் பதவி.. அதிமுகவுடன் டீல் பேசுகிறாரா தவெக விஜய்?
80 சீட்.. துணை முதல்வர் பதவி.. அதிமுகவுடன் டீல் பேசுகிறாரா தவெக விஜய்?
பில்டப் ப்ரமோஷன்களாலே ப்ளாப்! பிரம்மாண்ட பட்ஜெட் படங்களுக்கு வில்லன் - இது தேவையா கோபி?
பில்டப் ப்ரமோஷன்களாலே ப்ளாப்! பிரம்மாண்ட பட்ஜெட் படங்களுக்கு வில்லன் - இது தேவையா கோபி?
Embed widget