மேலும் அறிய

தேர்தல் முடிவுகள் 2024

(Source: ECI/ABP News/ABP Majha)

Sabarimala: பங்குனி உத்திர ஆராட்டு விழா: திறக்கப்பட்ட சபரிமலை; பக்தர்களுக்கு அனுமதி! ஆனால் ஒரு கண்டிஷன்!

பங்குனி மாதம் இன்றுடன் தொடங்குகிறது. இந்நிலையில் வருடா வருடம் பங்குனி நடைபெறக்கூடிய  பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டுள்ளது. 

பங்குனி மாதம் இன்றுடன் தொடங்குகிறது. இந்நிலையில் வருடா வருடம் பங்குனி நடைபெறக்கூடிய  பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டுள்ளது.  இதற்காக நேற்று மாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டது. கோயில் நடை திறக்கப்பட்டதும் கோயில் மேல் சாந்தி ஜெயராமன் நம்பூதிரி தீபம் ஏற்றினார். தீபம் ஏற்றப்பட்டதைத் தொடர்ந்து ஐய்யப்ப பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து வரும் 19-ந்தேதி வரை அனைத்து நாட்களிலும் சிறப்பு பூஜைகள் நடைபெறும் என்று கோயில்  தேவசம்போர்டு   சார்பில்  தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
மார்ச் 19ஆம் தேதி வரை பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து பங்குனி மாதம் நடைபெறக்கூடிய பங்குனி உத்திர ஆராட்டு திருவிழா வரும்  மார்ச் மாதம் 26ஆம் தேதி தொடங்கி, ஏப்ரல் மாதம்  5ஆம் தேதி வரை நடைபெறும் என்றும், ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே பங்குனி உத்திர ஆராட்டு விழாவிற்கு அனுமதி வழங்கப்படும் என்றும் தேவசம்போர்டு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 
 
இதற்கு முன்னர் மாசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை கடந்த பிப்ரவரி 12-ந்தேதி திறக்கப்பட்டது, அப்போது  பக்தர்கள் தரிசனத்திற்காக அனுமதிக்கப்பட்டனர். தொடர்ந்து 5 நாட்கள் பல்வேறு பூஜைகள் நடைபெற்ற நிலையில், பிப்ரவரி 17-ந்தேதி நடை அடைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 
 
சிறப்பு பூஜைகள்: 

தினசரி ஆலயத்தில் அதிகாலை 5 மணி முதல் மதியம் 1 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 10 மணி வரையிலும் சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளது. இந்த பூஜைகளை நேரில் கண்டு ஐயப்பனை தரிசனம் செய்ய இணையதளம் மூலமாக பக்தர்கள் பதிவு செய்து கொள்ளலாம்.  மேலும், பங்குனி ஆராட்டு திருவிழாவை முன்னிட்டு சபரிமலை கோயில் நடை வரும் 26ஆம் தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்படும். 27ஆம் தேதி காலை 9.45 மணிக்கு கொடி ஏற்றி வைத்து, தந்திரி கண்டரரு ராஜீவரு தொடங்கி வைக்கிறார். 

இதனை தொடர்ந்து, ஆன்லைனில் முன்பதிவு செய்யாத பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கும் வகையில், நிலக்கல் மற்றும் பம்பையில் உடனடி முன்பதிவு செய்யும் வசதியும் செய்யப்பட்டுள்ளது என தேவசம்போர்டு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் https://sabarimalaonline.org/#/login எனும் இணையதள முகவரியில் தரிசனத்திற்கான முன்பதிவை மேற்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சபரிமலை ஐய்யப்பன் கோவில் பூஜை மற்றும் பிரசாததிற்கான கட்டண விபரம்

S.no

பூஜை/ பிரசாதம்

விலை பட்டியல்

1.

நெய்அபிஷேகம்: 1 தேங்காய்

 ரூ. 10

2.

அஷ்டாபிஷேகம்

ரூ. 6,000

3.

கணபதி ஹோமம்

ரூ. 375

4.

உஷ பூஜை

ரூ. 1,500

5.

நித்ய பூஜை

ரூ. 4,000

6.

பகவதி சேவை

ரூ. 2,500

7.

களபாபிஷேகம்

ரூ. 38,400

8.

படி பூஜை

ரூ. 1,37,900

9.

துலாபாரம்

ரூ. 625

10.

புஷ்பாபிஷேகம்

ரூ. 12,500

11.

அப்பம் (1 பாக்கெட்)

ரூ. 45

12.

அரவணை (1 டின்)

ரூ. 100

13.

விபூதி பிரசாதம்

ரூ. 30

14.

வெள்ளை நிவேத்தியம்

ரூ. 25

15.

சர்க்கரை பாயசம்

ரூ. 25

16.

பஞ்சாமிர்தம்

ரூ. 125

17.

அபிஷேக நெய் (100 மிலி)

ரூ. 100

18.

நவக்கிரக பூஜை

ரூ. 450

19.

ஒற்றைகிரக பூஜை

ரூ. 100

20.

மாலை/வடி பூஜை

ரூ. 25

21.

நெல்பறை

ரூ. 200

22.

மஞ்சள் பறை

ரூ. 400

23.

தங்க அங்கி சார்த்தி பூஜை

ரூ. 15,000

24.

நீராஞ்சனம்

ரூ. 125

25.

இருமுடிக் கட்டு நிறைத்தல் (பம்பை

ரூ. 300

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

பாஜகவை ஓடவிட்ட கல்பனா.. சோரனை மீண்டும் அரியணையில் ஏற்றிய மனைவி!
பாஜகவை ஓடவிட்ட கல்பனா.. சோரனை மீண்டும் அரியணையில் ஏற்றிய மனைவி!
மராட்டிய மண்ணில் வெற்றி கொடி நாட்டிய தமிழன்! தாராவி மக்களின் காலா.. யார் இந்த கேப்டன் தமிழ்ச்செல்வன்!
மராட்டிய மண்ணில் வெற்றி கொடி நாட்டிய தமிழன்! தாராவி மக்களின் காலா.. யார் இந்த கேப்டன் தமிழ்ச்செல்வன்!
தங்கை உந்தன் உள்ளம் தானே அண்ணன் என்றும் வாழும் எல்லை! - கனிமொழியை புகழ்ந்து தள்ளிய ஸ்டாலின் -  ஏன் தெரியுமா?
தங்கை உந்தன் உள்ளம் தானே அண்ணன் என்றும் வாழும் எல்லை! - கனிமொழியை புகழ்ந்து தள்ளிய ஸ்டாலின் -  ஏன் தெரியுமா?
"CMஆன பிறகுதான் வருவேன்" ஜெயலலிதா பாணியில் சபதம்.. செய்து காட்டிய ஃபட்னாவிஸ்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Tiruchendur Elephant : ’’சோறு சாப்டியா?’’நலம் விசாரித்த டாக்டர்CUTE-ஆக தலையாட்டிய யானைPriyanka Gandhi : ’’நான் ஜெயிச்சுட்டேன் அண்ணா!’’ ராகுலை மிஞ்சிய பிரியங்கா!பாசமலருக்கு அன்பு கடிதம்Maharastra CM :  ஷிண்டே  vs ஃபட்னாவிஸ் புதுகணக்கு போடும் பாஜக! முதல்வர் அரியணை யாருக்கு?Rahul Gandhi Warning : ’’அழிவை நோக்கி நகரும் டெல்லி!மிகப்பெரிய ஆபத்தில் இந்தியா!’’எச்சரிக்கும் ராகுல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பாஜகவை ஓடவிட்ட கல்பனா.. சோரனை மீண்டும் அரியணையில் ஏற்றிய மனைவி!
பாஜகவை ஓடவிட்ட கல்பனா.. சோரனை மீண்டும் அரியணையில் ஏற்றிய மனைவி!
மராட்டிய மண்ணில் வெற்றி கொடி நாட்டிய தமிழன்! தாராவி மக்களின் காலா.. யார் இந்த கேப்டன் தமிழ்ச்செல்வன்!
மராட்டிய மண்ணில் வெற்றி கொடி நாட்டிய தமிழன்! தாராவி மக்களின் காலா.. யார் இந்த கேப்டன் தமிழ்ச்செல்வன்!
தங்கை உந்தன் உள்ளம் தானே அண்ணன் என்றும் வாழும் எல்லை! - கனிமொழியை புகழ்ந்து தள்ளிய ஸ்டாலின் -  ஏன் தெரியுமா?
தங்கை உந்தன் உள்ளம் தானே அண்ணன் என்றும் வாழும் எல்லை! - கனிமொழியை புகழ்ந்து தள்ளிய ஸ்டாலின் -  ஏன் தெரியுமா?
"CMஆன பிறகுதான் வருவேன்" ஜெயலலிதா பாணியில் சபதம்.. செய்து காட்டிய ஃபட்னாவிஸ்!
”CM ஆனா கண்டிப்பா இது நடக்கும்”: 4ஆம் வகுப்பு மாணவன் வைத்த கோரிக்கை - உறுதி கொடுத்த விஜய்!
”CM ஆனா கண்டிப்பா இது நடக்கும்”: 4ஆம் வகுப்பு மாணவன் வைத்த கோரிக்கை - உறுதி கொடுத்த விஜய்!
ஆசிரியரின் காலை அழுத்தும் மாணவர்கள்... அதிர்ச்சி வீடியோவால் பாய்ந்த அதிரடி நடவடிக்கை
ஆசிரியரின் காலை அழுத்தும் மாணவர்கள்... அதிர்ச்சி வீடியோவால் பாய்ந்த அதிரடி நடவடிக்கை
Jharkhand Election Result 2024: சல்லி, சல்லியாய் போன பா.ஜ.க.! ஜார்க்கண்டில் ஜாம் ஜாம் மோடில் ஹேமந்த் சோரன்!
Jharkhand Election Result 2024: சல்லி, சல்லியாய் போன பா.ஜ.க.! ஜார்க்கண்டில் ஜாம் ஜாம் மோடில் ஹேமந்த் சோரன்!
CBSE Scholarship: மாதந்தோறும் கல்வி உதவித்தொகை; சிபிஎஸ்இ அழைப்பு- விண்ணப்பிப்பது எப்படி?
CBSE Scholarship: மாதந்தோறும் கல்வி உதவித்தொகை; சிபிஎஸ்இ அழைப்பு- விண்ணப்பிப்பது எப்படி?
Embed widget