சித்திரை திருநாள் மகாராஜா பிறந்த நாளையொட்டி சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நாளை திறப்பு
வழக்கமான பூஜைகளுக்கு பிறகு இரவு 10.30 மணிக்கு நடை அடைக்கப்படும். நாளை மறுநாள் அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு சித்திரை திருநாள் மகாராஜா பிறந்தநாள் சிறப்பு பூஜை மற்றும் வழிபாடுகள் நடைபெறும்.
பிற கோயில்கள் போல ஐயப்பன் கோயில் அனைத்து நாட்களும் திறக்கப்படாது. கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றவையாகும். இந்த கோயிலுக்குச் செல்ல மாலை அணிந்து கடுமையான விரதம் இருந்து மலையேறி பக்தர்கள் ஐயப்பன் சாமியை வழிபடுவார்கள். ஒவ்வொரு மாதத்தின் 5 நாட்களும் சபரிமலை ஐயப்பன் கோயிலின் நடை திறக்கப்படுவது வழக்கம். சபரிமலையில் ஐயப்பனுக்கு 41 நாட்கள் நடைபெற்ற சிறப்பு பூஜைகளுக்கு பின்னர் தங்க அங்கி அணிவிக்கப்பட்டு மண்டலபூஜை நடைபெறும். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சரண கோஷத்துடன் தரிசனம் செய்வார்கள்.
சித்திரை திருநாள் மகாராஜா பிறந்தநாளை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நாளை மறுநாள் நடக்கிறது. இதற்காக புதன் கிழமை நாளை மாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது. நாளை மறுநாள் அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு சித்திரை திருநாள் மகாராஜா பிறந்தநாள் சிறப்பு பூஜை மற்றும் வழிபாடுகள் நடைபெறும். ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள்.
தேவசம் போர்ட்
சபரிமலை ஐயப்பன் கோவிலில் சித்திரை திருநாள் மகாராஜா பிறந்தநாளை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நாளை மறுநாள் நடக்கிறது. இதற்காக நாளை மாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது. தந்திரிகள் கண்டரரு ராஜீவரு, அவரது மகன் பிரம்மதத்தன் முன்னிலையில் மேல்சாந்தி மகேஷ் நம்பூதிரி நடையை திறந்து வைக்கிறார்.
தொடர்ந்து வழக்கமான பூஜைகளுக்கு பிறகு இரவு 10.30 மணிக்கு நடை அடைக்கப்படும். நாளை மறுநாள் அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு சித்திரை திருநாள் மகாராஜா பிறந்தநாள் சிறப்பு பூஜை மற்றும் வழிபாடுகள் நடைபெறும். ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள். பின்னர் இரவு 10.30 மணிக்கு நடை அடைக்கப்படும். இந்த ஆண்டு மண்டல, மகர விளக்கு சீசன் அடுத்த மாதம் நவம்பர் 16 ஆம் தேதி தொடங்குவதையொட்டி நவம்பர் 15 ஆம் தேதி மாலை 5 மணிக்கு கோவில் நடை மீண்டும் திறக்கப்படும்.