மேலும் அறிய

Sabarimala: சபரிமலையின் தத்துவமாக விளங்கும் 18 படிகளின் வரலாறு தெரியுமா?

சபரிமலைக்கு உள்ளூர் முதல் உலகம் வரையுள்ள பல்வேறு வயதுடைய பக்தர்களும் மாலை அணிந்து, விரதம் இருந்து, இருமுடி சுமந்து பெருவழி மற்றும் சிறுவழி பாதை வழியாக ஐயப்பனை துதித்து வருகிறார்கள்.

சபரிமலை ஐயப்பன் கோயில் என்பது மிகவும் ஆத்மார்த்தமான ஆன்மிக பூமியாக திகழ்கிறது. இந்த கோயிலுக்கு செல்ல வேண்டும் என்றால் பதினெட்டு படி ஏறி சென்று வழிபட வேண்டும்.

சபரிமலை ஐயப்பன் கோயில் பாடல் ஒன்றில் கூட “ பதினெட்டு படி மீது ஏறிடுவார்.. கதியென்று அவனை சரணடைவார்.. மதி முகம் கண்டே மயங்கிடுவார்... ஐயனைத் துதிக்கையிலே... தன்னையே மறந்திடுவார்” என்ற வரிகள் கேட்கும்போதே நமக்குள் ஒரு மெய் சிலிர்ப்பு ஏற்படும். அப்படிப்பட்ட 18ம் படியின் வரலாறு பற்றி அறிந்து கொள்ளலாம். சபரிமலை ஐயப்பன் கோயில் கேரள மாநிலம் பத்தினம் திட்டா மாவட்டத்தில் உள்ளது. 

இந்த கோயிலில் ஆண்டுதோறும் கார்த்திகை மற்றும் மார்கழி மாதங்களில் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு தரிசனத்திற்காக 48 நாட்கள் நடை திறக்கப்பட்டிருக்கும். இப்படியான நிலையில் சபரிமலைக்கு உள்ளூர் முதல் உலகம் வரையுள்ள பல்வேறு வயதுடைய பக்தர்களும் மாலை அணிந்து, விரதம் இருந்து, இருமுடி சுமந்து பெருவழி மற்றும் சிறுவழி பாதை வழியாக ஐயப்பனை துதித்து வருகிறார்கள். இதில் பெருவழி பாதை சுமார் 50 கிலோ மீட்டர் தூரம் கொண்டது. சிறுவழி பாதை 7 கிலோ மீட்டர் தூரம் கொண்டதாகும். 

பதினெட்டு படியின் வரலாறு

பலருக்கு சபரிமலையில் ஏன் 18 படி உள்ளது என்ற கேள்வி எழலாம். தங்கத்தகடு பதிக்கப்பட்ட இந்த 18 படி வழியாக இருமுடி கட்டி வரும் பக்தர்கள் மட்டுமே செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள். சாதாரணமாக வழிபட வரும் பக்தர்கள் அதன் அருகில் இருக்கும் படி வழியாக செல்ல முடியும். 

இப்படியான நிலையில் மகாபாரதத்தில் பாண்டவர்களுக்கும், கௌரவர்களுக்கும் இடையே போர் நடைபெற்றது. பதினெட்டு நாட்கள் நீடித்த இந்த போரில் அதர்மத்தை வென்று தர்மத்தை நிலை நாட்டி தர்மர் அரியணை ஏற அந்த பரந்தாமன் உதவினார் என்பது இதிகாசத்தில் சொல்லப்பட்டுள்ளது. இதேபோல் பழம்பெருமை கொண்ட தமிழிலும் பதிணென் கீழ்க்கணக்கு நூல்களும் உள்ளது. இதேபோல் மனிதனின் தீய குணங்கள் என 18 என வகைப்படுத்தப்பட்டுள்ளது. 

அவற்றை எல்லாம் விடுத்து மாலை அணிந்து விரதம் இருந்து இறைவனை அடைவதற்காக ஆத்மார்த்தமான வழியை குறிப்பதே இந்த 18 படியின் நோக்கமாக பார்க்கப்படுகிறது. இந்த 18 படி ஏறுவது 18 உலகங்களையும் வென்ற சிறப்பை நமக்கு கொடுக்கும் என சொல்லப்படுகிறது. அதேசமயம் இந்த 18 படிகளில் விநாயகர், சிவன், பார்வது, பிரம்மா, விஷ்ணு, முருகன், காளி போன்ற தெய்வங்கள் வசிப்பதாக நம்பப்படுகிறது. இப்படி பதினெட்டு படிகளை நாம் கடக்கும்போது வாழ்க்கையில் படிப்படியாகவே முன்னேற்றம் இருக்கும் என்பதை உணர்த்தும் விதமாக இருப்பதாக ஐதீகமாக பார்க்கப்படுகிறது.

தலைப்பு செய்திகள்

பட்டினத்தாருக்கும் இந்த விநாயகருக்கும் என்ன தொடர்பு? திருவெண்காட்டில் நடந்த ஆன்மீகப் பெருவிழா!
பட்டினத்தாருக்கும் இந்த விநாயகருக்கும் என்ன தொடர்பு? திருவெண்காட்டில் நடந்த ஆன்மீகப் பெருவிழா!
ஆடி மாத பிறப்பு 2026 எப்போது? அம்மனின் அருள் பெற இந்த மாதத்தில் என்ன செய்ய வேண்டும்? முழு விவரம்!
ஆடி மாத பிறப்பு 2026 எப்போது? அம்மனின் அருள் பெற இந்த மாதத்தில் என்ன செய்ய வேண்டும்? முழு விவரம்!
அதிசய அலங்காரத்தில் வல்லக்கோட்டை முருகன்: குவியும் 10,000+ பக்தர்கள்! பின்னணி என்ன?
அதிசய அலங்காரத்தில் வல்லக்கோட்டை முருகன்: குவியும் 10,000+ பக்தர்கள்! பின்னணி என்ன?
அமாவாசை அன்று முன்னோர்களுக்கு படையல் போட முடியாத நிலையா? தீமைகள் ஏற்படுமா? முழுமையான ஆன்மீக விளக்கம்
அமாவாசை அன்று முன்னோர்களுக்கு படையல் போட முடியாத நிலையா? தீமைகள் ஏற்படுமா? முழுமையான ஆன்மீக விளக்கம்

வீடியோ

Mamata banerjee slaps man | ”ஏய்... ஓரமா போ” தொண்டரை அறைந்த மம்தா! ஷாக்கான கட்சியினர்
Tindivanam ADMK Issue:”எடப்பாடி கிட்டயே கேக்குறேன்!CVS இல்லாம அரசியலா”திண்டிவனம் அதிமுகவில் பரபரப்பு
TVK MLA Saravanan : ”வந்த வேலையை மட்டும் பாருங்க”ஆய்வுக்கு சென்ற தவெக எம்.எல்.ஏ!மிரட்டிய லாரி மேனேஜர்
கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரி*ப்பு! 32 பேருக்கு அரசு வேலை கரூர் செல்லும் விஜய்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay speech: முதல்வர் விஜய் பேச்சை லைவில் காட்டிய அரசுப்பள்ளிகள்; இதற்கா ஸ்மார்ட் திரை? குவியும் கண்டனம்
CM Vijay speech: முதல்வர் விஜய் பேச்சை லைவில் காட்டிய அரசுப்பள்ளிகள்; இதற்கா ஸ்மார்ட் திரை? குவியும் கண்டனம்
அதிருப்தி நிர்வாகிகளுக்கு மீண்டும் மா.செ.பதவி? சமரச முடிவுக்கு வருகிறார் எடப்பாடி பழனிசாமி!
அதிருப்தி நிர்வாகிகளுக்கு மீண்டும் மா.செ.பதவி? சமரச முடிவுக்கு வருகிறார் எடப்பாடி பழனிசாமி!
CM Vijay Speech: 5 நிமிடம் பேசினதற்கே கொளத்தூரில் கொத்து பரோட்டா போட்டாங்க... கரூரில் கதகளி ஆடிய முதல்வர் விஜய்!
5 நிமிடம் பேசினதற்கே கொளத்தூரில் கொத்து பரோட்டா போட்டாங்க... கரூரில் கதகளி ஆடிய முதல்வர் விஜய்!
CM Vijay Speech: வாயை திறங்க சிஎம்மா? நான் பேசாம இருக்க இதான் காரணம்- சீறிய சிஎம் விஜய்!
CM Vijay Speech: வாயை திறங்க சிஎம்மா? நான் பேசாம இருக்க இதான் காரணம்- சீறிய சிஎம் விஜய்!
Nissan Tekton: நிஸான் டெக்டானை சொந்தமாக்கலாம்; 19.4KM மைலேஜ், வெறும் ரூ.8820 EMI- 5 ஆண்டு லோன், கால்குலேஷன்
Nissan Tekton: நிஸான் டெக்டானை சொந்தமாக்கலாம்; 19.4KM மைலேஜ், வெறும் ரூ.8820 EMI- 5 ஆண்டு லோன், கால்குலேஷன்
Karur TN Government Job : கரூர் துயரம்.! அரசு வேலை யார் யாருக்கு.? எந்த துறையில் பணி- லிஸ்ட் இதோ..
கரூர் துயரம்.! அரசு வேலை யார் யாருக்கு.? எந்த துறையில் பணி- லிஸ்ட் இதோ..
CM Vijay: திரும்பும் பக்கமெல்லாம் கதறல்.. திமுகவுக்கு நிரந்தரமாக அடி கொடுக்கணும்.. கரூரில் கொந்தளித்த விஜய்!
CM Vijay: திரும்பும் பக்கமெல்லாம் கதறல்.. திமுகவுக்கு நிரந்தரமாக அடி கொடுக்கணும்.. கரூரில் கொந்தளித்த விஜய்!
CM விஜய் ஆக்‌ஷன் எடுக்கனும்..! DMKவின் சேகர் பாபுவை போட்டுக்கொடுத்த MR விஜயபாஸ்கர் - விஷயம் என்ன?
CM விஜய் ஆக்‌ஷன் எடுக்கனும்..! DMKவின் சேகர் பாபுவை போட்டுக்கொடுத்த MR விஜயபாஸ்கர் - விஷயம் என்ன?
Embed widget