CM Vijay Speech: வாயை திறங்க சிஎம்மா? நான் பேசாம இருக்க இதான் காரணம்- சீறிய சிஎம் விஜய்!
CM Vijay Karur Speech: பேச்சு போதும், செயல் வேண்டும்! - முதல்வர் விஜய் அதிரடி முழக்கம்

கரூரில் முதல்வர் விஜய் இன்று மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பேசியதாவது:
ஒவ்வோர் அரசு வேலைக்கும் சென்று பாருங்கள். ஒரு பைசா லஞ்சம் இல்லை, ஒரு பைசா ஊழல் இல்லை. இதெல்லாம் சாம்பிள்தான். வரப்போகும் நாட்களில் இந்த அரசின் விஸ்வரூபத்தைப் பார்ப்பீர்கள்.
அடுத்து, வாயத் திறங்க சிஎம். உங்க சிஎம்மை நெஞ்சிலேயே குத்திக்கொண்டு சட்டசபை வந்தீர்கள். அதெல்லாம் வேற லெவல்.
5 நிமிஷம் பேசுனதுக்கே..
முதல்வர் பேசவே இல்லை என்கிறார்கள். 5 நிமிஷம் பேசுனதுக்கே கொளத்தூர்ல கொத்து பரோட்டா போட்டுட்டாங்க. இன்னும் பேசினால் மொத்தமாக முடிந்துவிடும்.
நாம் அரசியல் பேசினால், விஜயெல்லாம் அரசியல் பேசலாமா என்கிறார்கள். நாம் வேலையைப் பார்ப்போம் என்று இருந்தால், விஜய்க்கு அரசியல் தெரியுமா என்று கேள்வி எழுப்புகிறார்கள். பாட்டுக்குப் பாட்டி கச்சேரி எங்களுக்கும் செய்யத் தெரியும். செய்யலாமா?
மேகதாது அணை விவகாரத்தில்கூட, வேலையைச் செய்துகொண்டு இருக்கிறோம். ’’அந்த ஸ்டேட் சிஎம் பேசுறாரு, நீங்க ஏன் பேசல?" அப்படின்னா, நம்ம ஸ்டேட்டோட உரிமையை எங்க நிலைநாட்டணுமோ, அதுக்காக வேலை பார்க்கிறது மட்டும்தான் முக்கியம். சும்மா சவால் விட்டுக்கிட்டு இருந்தா வேலைக்காகாது. தொட்டுப் பார், சீண்டிப் பார் என்று வாய்ச்சவடால் செய்யலை.
Talk Less, Work More
பேசிப் பேசி பிரச்சினையை வளர்த்து அரசியல் செய்துகொண்டு, யார் மேலாவது பழியைப் போட்டுக்கிட்டு, மக்களை அம்போவென தெருவில் விட்டுவிட்டு செய்யும் அரசியல் நமக்கு வேண்டாம். Talk Less, Work More-தான் நம் பாலிசி.
லஞ்சம் கேட்டால் கொடுக்காதீங்க..
உங்ககிட்ட யாராவது லஞ்சம் ஏதாவது கேட்டாங்கன்னா, "கொடுக்க முடியாது"ன்னு சொல்லுங்க, நான் இருக்கேன் உங்களோட. அப்படியே யாராவது ஃபோர்ஸ் பண்ணாங்கன்னா, "இது எங்க மகன், எங்க பிள்ளை, எங்க அண்ணன், எங்க தம்பி, எங்க விஜய், எங்க விஜியோட ஆட்சி"ன்னு ஸ்ட்ராங்கா சொல்லுங்க!
மக்களே, நீங்க கூட இருக்கும்போது லஞ்ச ஊழல் மட்டும் இல்ல, அதிகாரத்தை வச்சு ஆட்டம் போடுற யாரா இருந்தாலும் அடங்கிருவாங்க. அந்த 'கடமை கண்ணியம் கட்டுப்பாடு'ன்னு ஒரு காலத்துல கொள்கையோடு இருந்த கட்சி எல்லாம் இன்னைக்கு எப்படி இருக்கான்னு உங்களுக்கே தெரியும்.’’
இவ்வாறு முதல்வர் விஜய் பேசினார்.
ட்ரெண்டிங் செய்திகள்






















