CM விஜய் ஆக்ஷன் எடுக்கனும்..! DMKவின் சேகர் பாபுவை போட்டுக்கொடுத்த MR விஜயபாஸ்கர் - விஷயம் என்ன?
CM Vijay Karur: திமுக முன்னாள் அமைச்சர் சேகர் பாபுவின் நடவடிக்கையால் தமிழ்நாடு முழுவதும் ஏழை, எளிய மக்கள் பாதிக்கப்படுவதாக, முதலமைச்சர் விஜய் முன்னிலையில் எம்.ஆர். விஜயபாஸ்கர் குற்றம்சாட்டியுள்ளார்.

CM Vijay Karur: முதலமைச்சர் விஜய்க்கு அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் வெள்ளி வாலை பரிசாக வழங்கினார்.
முதலமைச்சருக்கு வெள்ளி வாள்..!
தமிழ்நாடு வெற்றிக் கழகம் சார்பில் முதலமைச்சர் விஜய் பங்கேற்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி, கரூர் மாவட்டம் வெண்ணெய்மலையில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர், முதலமைச்சருக்கு வெள்ளி வாள் வழங்கினார். தொடர்ந்து பேசுகையில், ”தவெக அரசில் முன்னெடுக்கப்பட்டுள்ள பல்வேறு திட்டங்களை பாராட்டி பேசினார். அதோடு, தலைவர் முன்னாள் ஒரே ஒரு சிறிய கோரிக்கை வைத்திருக்கிறேன். அதை மட்டும் வெளிப்படுத்திவிடுகிறேன்.
திமுகவால் இனாம் நிலம் பிரச்னை
கடந்த தீயசக்தி திமுக ஆட்சியில் இந்துசமய அறநிலையத்துறை என ஒரு துறை இருந்தது. அதற்காக ஒரு அமைச்சரும் இருந்தார். காமராஜரின் ஆட்சிக்காலத்தில் 19963 - 66 ஆட்சிக்காலத்தில் இனாம் ஒழிப்பு என்று ஒரு சட்டம் கொண்டுவரப்பட்டது. அதன் மூலம் கோயில் இனாம் நிலங்களை உழுதவர்களுக்கே, குடியிருப்பவர்களுக்கே சட்டம் போட்டு கொடுத்தார். கிட்டத்தட்ட 50-60 ஆண்டுகளுக்குப் பிறகு தீயசக்தி திமுகவின் ஆட்சிக் காலத்தில் அமைச்சராக இருந்தவரும் சரி, முதலமைச்சராக இருந்தவரும் சரி, அவர்கள் எடுத்த நடவடிக்கையால் மக்கள் சொந்த மண்ணிலேயே அகதிகளாகி கொண்டிருக்கின்றனர்.
”முதலமைச்சர் தனிக்கவனம் செலுத்த வேண்டும்”
குறிப்பாக கரூர் மாவட்டத்தில் இனாம் நிலத்தில் வசிப்பவர்களின் வீட்டை சீல் வைப்பது, காலி செய்வது, நிலங்களை அபகரிப்பது என்ற நிகழ்வு நடந்துகொண்டிருக்கிறது. இது கரூருக்கு மட்டுமல்ல ஆனால் கரூரில் தான் அதிகம் நடக்கிறது. இது தமிழ்நாட்டிற்கான பிரச்னை. இந்த பிரச்னை குறித்து, முதலமைச்சர் தனிக்கவனம் எடுத்து தீர்த்து வைத்தால் தமிழகத்தில் உள்ள ஏழை எளிய மக்கள் , கோயில் இனாம் நிலங்களில் வசிக்கும் ஏழை எளிய மக்கள் , அதில் விவசாயம் செய்யக்கூடிய லட்சக்கணக்கான மக்கள் வாழ்நாள் முழுவதும் உங்களுக்கு கடன்பட்டு இருப்பார்கள். என்பதை கோரிக்கையாக முன்வைக்கிறேன்” என எம்.ஆர். விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
தொடரும் போராட்டங்கள்:
கரூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இனாம் நிலத்தில் ஏராளமானோர் வீடு கட்டி வசித்து வருகின்றனர். இதுபோக கடைகளை அமைத்தும், விவசாயம் செய்தும் தங்களது வாழ்க்கையை நடத்தி வருகின்றனர். ஆனால், கோயில்கள் மற்றும் மசூதிகளுக்குச் சொந்தமான இனாம் நிலங்களை (Inam lands) தனிநபர்கள் சிலர் முறைகேடாக ஆக்கிரமிப்பு செய்திருந்ததை மீட்பதற்காகவும், அந்த நிலங்களின் மூலம் கிடைக்கும் வருவாயைப் பொதுமக்களின் ஆன்மீக மற்றும் அறப்பணிகளுக்கு முறையாகப் பயன்படுத்துவதற்காகவும் அரசுடைமையாக்கும் முயற்சிகளை திமுக அரசு முன்னெடுத்தது. இதற்கு மே 17 இயக்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்தன. அதோடு, பொதுமக்களும், பாதிக்கப்படும் பயனர்களும் கூட பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர். கரூர் மாவட்டம் வெண்ணைமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு சொந்தமான இனாம் நிலத்தில் உள்ள, 60-க்கும் மேற்பட்ட கடைகள் மற்றும் ஒரு டவரை அகற்றும் பணியும் கடந்த ஆண்டு முன்னெடுக்கப்பட்டது. இதற்கும் கடும் எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த பிரச்னையை தான் தற்போது எம்.ஆர். விஜயபாஸ்கர், முதலமைச்சரிடம் எடுத்துரைத்துள்ளார்.
ட்ரெண்டிங் செய்திகள்






















