Pilli Suniyam: பில்லி சூனியம் உண்டா? இல்லையா? மாந்திரீகத்தில் இருந்து தப்பிப்பது எப்படி?
40, 50 வருடங்களுக்கு முன்பாக பில்லி சூனியம் வைப்பது கிராமப்புறங்களில் இயல்பாகவே நடக்கின்ற ஒன்று. சூனியம் என்பது ஒரு குடும்பத்தை அல்லது ஒரு தனி நபரை ஒன்றுமில்லாமல் செய்வது .
இரவு நேரங்களில் வெளிச்சம் இல்லாத பகுதிகளில் சென்று வரும்போது மக்கள் பயந்து, ஒருவித அச்சத்தின் காரணமாக அந்த ஊரிலேயே இருக்கும் சூனியம் எடுப்பவரை சென்று பார்த்து மந்தரித்து வருவது வழக்கமாகக் கொண்டிருந்தனர். தனி நபருக்கு எதிராகவோ அல்லது அந்த குடும்பத்துக்கு எதிராகவோ மாந்திரீகம் செய்தால் பலிக்குமா? பலிக்காதா ?
பில்லி சூனியம்:
மாந்திரீகம் என்பது மனதை சார்ந்த ஒன்று என்பது என்னுடைய கருத்து. அது எப்படி என்றால் வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு பேய் பிடிப்பது இல்லை. வசதியான குடும்பத்தில் உள்ளவர்களுக்கும் பேய் பிடிப்பது இல்லை. அப்படி இருக்கும் போது கிராமப்புறங்களில் இருக்கும் பெண்மணிகளுக்கு பேய் பிடிப்பது என்பது எவ்வாறு நாம் எடுத்துக் கொள்ள வேண்டும். அது மனதைச் சார்ந்த ஒன்றாகவே நான் பார்க்கிறேன்.
வாழ்க்கையில் நாம் எந்த சூழ்நிலைகளில் வளர்கிறோமோ அதை சார்ந்து நம் மனதில் எண்ண ஓட்டங்களும் இருக்கும். கிராமப்புறங்களில் பேய் மாந்திரீகம் பில்லி சூனியம் இவைகளை நம்பி குழந்தைகளையும் அப்படியே வளர்க்கிறார்கள் , அப்படி என்றால் அந்த குழந்தைகள் வளர வளர அவர்களுடைய மனதிலும் பில்லி சூனியம், பேய், மாந்திரீகம் போன்ற நம்பிக்கைகள் இயற்கையாகவே வளர்ந்து விடுகின்றன . இதன் காரணமாக காலம், காலமாக கிராமப்புறங்களில் இருக்கும் மனிதர்களின் வாழ்வில் பில்லி சூனியம், மாந்திரீகம் ஒன்றிப்போன ஒன்றாக காணப்படுகிறது .
உண்மையா? பொய்யா?
என்னுடைய கருத்தின்படி மாந்திரீகம், பில்லி சூனியம் என்பதெல்லாம் மனதை பொறுத்து அமையும் தவிர அவை உண்மையல்ல. ஆனால் ஒரு குடும்பமோ அல்லது ஒரு தனிப்பட்ட நபரோ கெட்டுப் போக வேண்டும் என்று மற்றவர் நினைப்பதையே நான் சூனியமாக கருதுகிறேன். உதாரணத்திற்கு ஒரு மனிதர் நன்றாகவே இருக்கக் கூடாது என்று மாந்திரீகரிடம் சென்று அவருடைய புகைப்படத்தை கொடுத்து மாந்திரீகம் செய்தால், அந்த மாந்திரீகம் செய்யும் கெட்ட எண்ணங்களை அந்த மாந்திரீகம் செய்யப்பட்ட மனிதரின் வாழ்க்கையில் மிகப்பெரிய எதிர்வினைகளை உருவாக்கும் என்பதையும் நான் நம்புகிறேன் . சிலருக்கு மாந்திரீகம் பில்லி சூனியம் செய்யாமலேயே எதிர்மறையான எண்ணங்களாலேயே அந்த மனிதரின் வாழ்க்கையில் புயல் வீசுவதையும் நான் பார்த்திருக்கிறேன் .
4-ம் இட கேதுவும், வீட்டில் மாந்திரீகம் செய்வதும்:
கேது 4-ம் வீட்டில் அமர்ந்திருக்கும் ஜாதகருக்கு, பில்லி சூனியத்தில் மிகுந்த ஆர்வமும் வீட்டில் அதிகப்படியான தெய்வ வழிபாடு மிக்கவர்களாக இருப்பார்கள். அதேபோல் நான்காம் வீட்டில் கேது இருப்பவர்களின் எதிரிகள் இவர்களுக்கு பில்லி சூனியம் மாந்திரீகம் வைப்பவர்கள் ஆக தான் அமைவார்கள். உதாரணத்திற்கு ஒருவரின் ஜாதகத்தில் நான்காம் வீட்டில் கேது இருந்தால், அவர்களின் எதிரிகளால் அவர்களுக்கு மாந்திரீகம் செய்யப்படும் என்பதும் நாம் அனுபவத்தில் பார்த்திருக்கிறோம்.
நான்காம் வீட்டில் கேது அமர்ந்திருந்தாலும் நான்காம் அதிபதி கேதுடன் அமர்ந்திருந்தாலும் நான்காம் அதிபதி கேதுவை பார்த்தாலும் அவர்கள் வீட்டில் மாந்திரீகம் போன்ற காரியங்கள் நடந்திருக்க வாய்ப்புண்டு . இப்படி நான்காம் வீட்டில் கேது அமர்ந்திருக்க அந்த வீட்டை குரு பார்த்தால் அந்த மாந்திரீகம் பலிக்காமல் போய்விடும். எப்படிப்பட்ட கெட்ட எதிர்மறையான சிந்தனைகள் அந்த வீட்டில் மேலோங்கினாலும் குருவின் பார்வை அந்த வீட்டிற்கு மிகுந்த பலத்தைக் கொண்டு வரும் .
மாந்திரீகத்தை முறியடிக்க காலபைரவர் வழிபாடு:
மாந்திரீகத்தை முறியடிக்க வேண்டுமானால் நாம் கால பைரவரை வழிபட வேண்டும். சனிக்கிழமை தோறும் கால பைரவரை வழிபட்டு வர வீட்டில் இருக்கும் செய்வினை மாந்திரீகம் அனைத்தையும் மட்டுப்படுத்த முடியும். சனிக்கிழமை தோறும் மாலையில் பைரவர் வழிபாடு நிச்சயமாக வெற்றியை தேடி தரும். கால பைரவர் அஷ்டகம் படிப்பது, அஷ்ட பைரவரின் கோவில்களுக்கு செவ்வாய்க்கிழமை கூறும் சென்று வருவது.
மாந்திரீகம் மட்டுமல்ல தீர்க்கவே முடியாத கடன் பிரச்சினைகளையும் தீர்த்து வைப்பதற்காக ஸ்வர்ண ஆகர்ஷண பைரவர் வழிபாடு சிறந்தது . கால பைரவர் என்பவர் முக்காலமும் உணர்ந்தவர் உங்களுடைய பாவ புண்ணியங்களுக்கு எப்ப உங்கள் வாழ்க்கையில் நடக்கும் சுக துக்கங்களை அவர் தன்முள் இழுத்துக் கொண்டு நன்மைகளில் உங்களுக்கு வாரி வழங்குவார் என்பது சந்தேகம் இல்லை .
மாந்திரீகமும் பரிகாரமும் :
ஒருவர் உங்களுக்கு மாந்திரீகம் வைப்பதால் உங்களுடைய குடும்ப சூழ்நிலை கீழே போய்விடும் என்பதில் இரு வேறு கருத்துக்கள் உள்ளன. முதல் கருத்து மாந்திரீகம் உங்களுக்கு செய்யப்பட்டால் செய்பவரின் மனநிலை உங்களுக்கு எதிராக இருப்பதால் அந்த எதிர்வினையும் உங்கள் வாழ்க்கையில் மிகப்பெரிய தாழ்வான தாக்கத்தை ஏற்படுத்தலாம் . இரண்டாவது கருத்து மாந்திரீகம் செய்பவர்கள் உங்களுக்கு எதிராக செயல்படும் போது அந்த நேரம் உங்களுடைய கெட்ட நேரமாக அமைந்து இயற்கையாகவே உங்களுக்கு கெட்டது நடக்க வாய்ப்புண்டு அப்படி நடக்கும்போது அது மாந்திரீகத்தால் வந்தது என்பது எடுத்துக் கொள்ள முடியாத ஒன்றாக இருக்கும்.
பூஜை அறையில் விளக்கு ஏற்றி சாமிக்கு வழிபட வேண்டும். வீட்டில் மகாலட்சுமி குடியேறும் வாயில் மா இலைகள் மஞ்சள் தெளித்தல் வீடு முழுவதும் சுற்றி நல்ல வாசனை உள்ள பூக்களை நடுதல் போன்ற சுப விஷயங்களை நீங்கள் செய்யும் போது இயற்கையாகவே உங்கள் வீட்டில் மகாலட்சுமி குடியேறுவது மூதேவி வெளியே செல்வார் .