மேலும் அறிய
Advertisement
பக்ரீத் பண்டிகை: உலகப் புகழ்பெற்ற நாகூர் தர்காவில் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை
நாகை மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் உள்ள இஸ்லாமியர்கள் புத்தாடை அணிந்து மகிழ்ச்சியாக பக்ரீத்தை கொண்டாடினார்கள்.
உலகப் புகழ்பெற்ற நாகூர் தர்காவில் பக்ரீத் பண்டிகையொட்டி இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். மாவட்டத்தில் 66 பள்ளி வாசல்களிலும் பக்ரீத் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் பங்கேற்றனர்.
இறைவனின் தூதரான இப்ராஹிம் நபிகளாரின் தியாகத்தை நினைவு கூறும் வகையில், இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகையான பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுகிறது. அதன்படி உலகப் புகழ்பெற்ற நாகூர் தர்காவில் காலை 8.30 மணியளவில் நடைபெற்ற சிறப்பு தொழுகையில் ஏராளமான இஸ்லாமியர்கள் பங்கேற்றனர். சிறப்பு தொழுகையில் மணிப்பூர் மாநிலத்தில் நடைபெற்று வரும் கலவரம் கட்டுப்படுத்தப்பட்டு அமைதியும் சமாதானமும் நிலவ பிரார்த்தனை செய்யப்பட்டது. நாகூர் தர்காவில் நடைபெற்ற தொழுகைக்கு பின்னர் ஒருவரையொருவர் ஆரத்தழுவி பக்ரீத் வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டனர்.
இதேபோல நாகை மாவட்டத்தில் நாகூர், நாகை, திட்டச்சேரி, வடகரை, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள 66 பள்ளி வாசல்களிலும் இஸ்லாமியர்கள் பக்ரீத் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். ஆடு, மாடு, ஒட்டகம் போன்றவற்றை இறைவனின் பெயரால் பலியிட்டு அவற்றை மூன்று சம பங்குகளாக பிரித்து, ஒரு பங்கை அண்டை வீட்டாருக்கும், நண்பர்களுக்கும், மற்றொரு பங்கை ஏழைகளுக்கும் கொடுத்துவிட்டு மூன்றாவது பங்கை தங்கள் தேவைகளுக்கு பயன்படுத்தும் உன்னத பண்டிகையை நாகை மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் உள்ள இஸ்லாமியர்கள் புத்தாடை அணிந்து மகிழ்ச்சியாக கொண்டாடினார்கள்.
ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
கிரிக்கெட்
தமிழ்நாடு
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion